வெளிச்சம் பரவட்டும் கதிர் 41
மாலை வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசித்தேன். நண்பர் ரவியும் 7:00 மணிக்கு மேல் போன் செய்தார். அண்ணா காலைல நான் ஏழு மணிக்கு எல்லாம் வந்துடறேன் நம்ம மீனாட்சி ஹாஸ்பிடல் போயிட்டு வந்துருவோம் அப்படின்னு சொல்லிட்டாரு. அப்போ நான் சொன்னேன், ரவி இந்த விஷயத்தை வந்து நம்ம உடனடியா இறங்க வேண்டாம் என்ன திடீர்னு ஹார்ட்ல ஒரு பிராப்ளம் அப்படினா எல்லாருக்கும் ஒரு அதிர்ச்சி ஆயிடும் .அதனால இதை வந்து கவனமா செயல்படுத்துவோம் .இப்ப வேண்டாம், இதை இன்னும் ஒரு வாரத்துக்கு தள்ளி போடுவோம். எனது முடிவு என்னன்னா காலையில போய் அங்க அட்மிஷன் போட்டுக்கிட்டு இந்த ஆஞ்சியோ டெஸ்ட் முடிச்சிட்டு இரவு ரீசார்ஜ் பண்ணி விடுவேன் அப்படின்னு சொன்னாங்க. அதுபோல ஒருத்தருக்கும் தெரியாமல் இதை முடிச்சுட்டு வந்துருவோம் அப்படின்னு நான் அவருக்கு சொன்னேன். அவரும் ஏத்துக்கிட்டார். நாங்க முடிவு பண்ணிட்டோம் .இதனிடையில் எனக்கு என்னமோ ஒரு பயம் வந்தது போல இருந்துச்சு .அதனால நம்ம செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் எல்லாம் செய்து முடிச்சிட்டோமா அப்படின்னு .அந்த குழப்பத்தில் நான் இருந்தேன். எல்லாருக்கும் செய்ய வேண்டிய செய்யாமல் திடீர்னு ஏதாவது நமக்கு ஒன்னு ஆயிடுச்சின்னா நமது குடும்பம் வந்து கஷ்டப்படக்கூடாது என்பதற்காக ஏற்கனவே சில ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தேன். அதை இன்னும் பாக்கி இருக்கிறதை இந்த ஒரு வாரத்துல இந்த பேங்க் சமாச்சாரங்களை முடித்து விடணும் அப்படின்னு முடிவோட இருந்தேன். ஆக எனக்கு ஆஞ்சியோ பண்றதுக்கு ஒரு டேட்ட பிக்ஸ் பண்ணியாச்சு. அப்போ இங்க எனது குடும்பத்தில் வந்து என்னை தவிர எனது தம்பி காமராஜு அவர்கள் குடும்பமும் இருந்துச்சு .காமராஜ் தன் மகன் சீனு என்கிற சீனிவாசன் ஹைதராபாத்தில் ஐடி கம்பெனில வொர்க் பண்ணிட்டு இருக்கான். மகனை பார்க்கிறதுக்காக வேண்டி காமராஜு பையன் விட்டு போயிருக்கான் ஹைதராபாத்துக்கு. அப்போ ரவி என்ன பண்ணி இருக்காரு எனக்கு தெரியாமலே காமராஜ் க்கு போன் பண்ணி இதுபோல ஒரு டேட் பிக்ஸ் பண்ணி இருக்கோம் அப்படின்னு சொல்லி காமராஜுக்கு போன் பண்ணி சொல்லிட்டாரு. எனக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் பண்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி காமராஜ் வந்து சேர்ந்துட்டான் .எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது நான் வந்து மறுநாள் ஹாஸ்பிடல் சேர்ரதுன்னு முடிவு பண்ணிட்டோம் அப்போ எனது உடல் நிலையை கவனித்துக் கொள்வதற்காக தனது மகன் வீட்டில் இருந்து வந்த எனது தம்பி காமராஜ் இங்கு வந்த இரண்டு நாளில் திடீரென ஹார்ட் அட்டாக் வந்து அதே மீனாட்சி ஹாஸ்பிடல் சேர்த்து விட்டோம். இப்போது என் தம்பி காமராஜுக்கு கடுமையான ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டு இருக்கிறது. அவனது இன்னொரு மகன் இருக்கிறான் அவன் பெயர் ராஜா இப்ப உடனே நான் ஒரு முடிவு எடுத்து ஆகணும் .டாக்டர்கள் அங்கு சிச்சுவேஷனை பார்த்தா காமராஜ் பிழைக்க மாட்டான் என்று தோன்றி விட்டது உடனே நான் அவரது மகன்கள் ஆன சீனிவாசனுக்கும் ராஜாவுக்கும் போன் பண்ணி சொல்லிவிட்டு உடனடியாக புறப்பட்டு வர சொல்லிவிட்டேன். மீனாட்சி ஹாஸ்பிடல் எங்கள் குடும்பமே காத்திருக்கிறது .இரண்டு மகன்களும் வந்து விட்டார்கள். அதன் பிறகு அந்த கடுமையான சூழ்நிலையிலும் கடைசியாக ஒரு பஆஞ்சியொபிளஸ் ட் பண்ணலாம் என்று டாக்டர் சொன்னார் சரி என்று அதற்கு ஒத்துக்கொண்டோம். இவர் எப்படி பிழைக்க வைக்க போறார் என்று எனக்கு சந்தேகமா தான் இருந்துச்சு .சர்ப்ரைஸ் அந்த ஆஞ்சியோ பிளஸ்ட் பண்ணதுக்கு பிறகு அவன் தனி ரூம்ல வச்சு வச்சிருந்தாங்க .அப்போ காமராஜ் உங்கள கூப்பிடுறாங்க அப்படின்னு அந்த செவிலியர் வந்து சொன்னாங்க .அவர் கண் முழிச்சி இருக்காரு எதாச்சி பேசுறதா இருந்தா நீங்க பேசுங்க ஆனா அவரால பேச முடியாது. அப்படின்னு சொன்னாங்க. உடன் காமராஜ அவருடைய மனைவி ஆனந்தி அவரது மகன்கள் அவர்களோடு நானும் நண்பர் ரவி, காமராஜ் க்கும் அவர் நண்பர்தான் , அதனால நாங்கள் ஐந்து பேரும் காமராஜ் கட்டிலின் அருகில் சென்றோம். அப்போது காமராஜ் எந்த விதமான சலனமும் இல்லாமல் எங்களை பார்த்து எங்களை பார்த்தபடியே இருந்தான். ஏதோ சைகை காட்டினான். என்னன்னு கேட்டேன் தண்ணி குடிக்கணும் அப்படின்னுசொன்னான். எழுத வருமா உனக்கு அப்படின்னு கேட்டேன். அவர் நல்ல நிலைமையில தான் இருக்காரா இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காக .அப்போ அந்த செவிலியர் பக்கத்தில் வந்து ஒரு பேனாவும் பேப்பரும் கொடுத்தார் தண்ணீர் என்று எழுதிக் கொடுத்தான். செவிலியர் ஒரு பஞ்ச நனைத்து அவன் உதட்டில் வெச்சாங்க. பிறகு தனது மகன்களை பார்த்தபடியே இருந்தான். தனது மனைவியையும் பார்த்தான். எல்லாரையும் பார்த்துக் கொண்டிருந்தார் ஒழிய அவன் முகத்தில் எந்த விதமான ரியாக்ஷனும் இல்லை ஏதோ சொல்லணும்னு நினைக்கிறான் ஆனா பேச்சுக் வல்ல . அவனை பார்த்தபடியே இருக்கிறோம் எல்லாரும் . அப்போஅவன் என்ன பார்த்தான். என்ன பார்த்த பிறகு அப்ப நான் கட்டில் அந்த கம்பியின் மேல் கை வைத்து இருந்தேன் .அவன் வந்து தனது கையை எடுத்து என் கை மேல் வைத்துக் கொண்டான. என்னைப் பார்த்தபடியே இருந்தான். ஆனால் என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை. எனது கண்கள் கண்ணீரால் சூழப்பட்டிருந்தது அவன் முன்னால் கண்ணீர் விட்டு விடக்கூடாது என்பதற்காக நான் இவைகளை சிமிட்டாமல் இருந்தேன். அப்போ எனது கை மேல் அவனது கையை வைத்தவன் என்னையே பார்த்தபடி இருந்தான். அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு எழுதவோ பேசவோ முடியாத எந்தவிதமான இலக்கணத்துக்கு உட்படாத அந்த பார்வை இந்த காட்சியை எல்லோரும் பார்த்தார்கள். அங்கிருந்தவர்கள். எனக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை, கண்ணை சிமிட்டினால் அருவியாக கொட்டுது .அத்தோடு வெளியில் அனுப்பி விட்டார்கள் சரி இவன் ஒரு நல்ல பொசிஷனுக்கு வந்துட்டான் அதனால இந்த மாதிரி ஒன்னும் கவலை இல்லை அப்படிங்கிற முடிவோட நாங்களும் அங்கு ஹாஸ்பிடல் இருந்தோம். சரி நான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வர்றேன் அப்படின்னு அங்க இருந்த வங்க கிட்ட சொல்லிட்டு பாத்துக்க சொல்லிட்டு, நான் வீட்டுக்கு வந்தேன் வீட்டுக்கு வந்து டிரஸ் மாத்தி ஒரு ஐந்து மணி போல இருக்கும் எனக்கு திடீரென்று போன் வந்தது நீ உடனே புறப்பட்டு வா காமராஜ் க்கு உடல்நிலை சரியில்லை சரி என்று நான் உடனே ஹாஸ்பிடல் போய்விட்டேன் .போனா அங்க காமராஜ் இறந்துட்டான். அந்தக் காட்சியைக் காண எனக்கு சகிக்கவில்லை .பெரியதாக சத்தம் போட்டபடி கதறுகிறேன். சீனிவாசனோடு வந்த நண்பர்கள் என்னை தேற்றும் அளவுக்கு ஆகிவிட்டது. ஒரு வழியாக எல்லாம் முடிந்து வீட்டுக்கு பாடி எடுத்து வந்தோம் எல்லா காரியங்களும் முடிந்தது அதன் பிறகு பத்து நாள் கழித்து பட திறப்பும் வைத்திருந்தோம. இதனால் எனக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்வது தள்ளிப் போனது. ஆனால் அன்று அவன் என்னை கர்ணையோடு பார்த்த பார்வை நான் சாகும் வரை மறக்கமுடியாது. தொடரும்
Comments
Post a Comment