கதிர் 42.ஆஞ்சியோ
என் தம்பி காமராஜ் இறந்து எல்லா காரியமும் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதுவரை எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பின்பு எனது file எடுத்துக் கொண்டு இருதய ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ஸ சென்று சந்தித்தேன் .எனது பைலை பார்த்துவிட்டு ஒரு சில டாக்டர்ஸ் நீங்க சென்னைக்கு சென்று ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக ஒரு டாக்டர் சந்தித்தேன் . அவரிடம் நான் கேட்ட கேள்வி சார் உடனடியாக செய்து கொள்ள வேண்டுமா அல்லது கொஞ்சம் காலம் தள்ளி போடலாமா என்று கேட்டேன் .அவர் இதற்கெல்லாம் உறுதிமொழி சொல்ல முடியாது .எந்த நேரத்தில் எதுவும் ஆகலாம் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டார். சரி இதற்கு மேல் தாமதிக்க கூடாது என்று முடிவு செய்து சென்னையில் உள்ள எனது அக்கா மகன் பாபுவை காண்டாக்ட் செய்தேன். அவன் ஏற்கனவே அவரது நண்பருக்காக சென்னை MMM ஹாஸ்பிடலில் அனுபவம் பெற்றவன். பாபுவும் இதையே சொன்னார் .thanjsaiyil இருக்கும் டாக்டர் கள் எல்லாரும் புதியவர்களாக இருப்பார்கள் இதற்கென்று இங்கே ஒரு ஆஸ்பத்திரி இருக்கிறது .அதனால் நீங்கள் உடனடியாக புறப்பட்டு இங்கு வந்து விடுங்கள்.ச் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். உடனே சென்னைக்கு மூட்டை கட்டி ஆகிவிட்டது .ஹாஸ்பிடலில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தோம். டாக்டர் ராம்குமார் என்னை பார்த்தார் .உடனே அட்மிஷன் போடப்பட்டது. ஆனால் எனக்கு எந்த விதமான அடைப்பு அறிகுறிகளோ எதுவும் எனக்கு தெரியவில்லை. எனக்கு ஒரு ரூமில் இரண்டு பேர் இருக்குமாறு கொடுத்தார்கள். மறுநாள் செய்து பார்க்கலாம் என்று தேதி குறித்து விட்டார்கள். அப்போது மறுநாள் என்னுடன் பாபுவும் என் தம்பி காமராஜ் மகன் ராஜாவும் அப்போது ஹாஸ்பிடலில் என்னுடன் இருந்தனர். Procedure செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தயாராக ஒரு டீம் இருந்தது அந்த ஆஸ்பத்திரியின் செவிலியர்கள் அனைவரும் மலையாளிகள். அங்கு தமிழில் சம்சாரிக்க எதுவும் கிடையாது. அந்த டீம் என்ன செய்யணுமோ அதெல்லாம் செஞ்சாங்க இரண்டு கைகளிலும் எத்தனையோ ஊசிகள் போட்டு இன்ஜெக்ஷன் தயார் நிலையில் வைத்து அடுத்த பேஷன்ட் என்ற நம்பர் வரும்போது தள்ளி விட்டார்கள் .அங்கு மேஜைக்கு கடத்தப்பட்டேன் .அங்கு எனது டாக்டர் தூரத்தில் அமர்ந்தார் இதை புரோசிஜர் என்று சொல்கிறார்கள் இதை செய்பவர்கள் ஒரு தேர்ந்த ஒரு டீம் .அவர்கள் ஏன் இப்படி நிர்வாகசாக இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள் .என்ன சார் என் இதயத்தை கை வைத்து பார்க்க போகிறீர்கள் அப்ப எப்படி சார் நெர்வஸ் இல்லாமல் இருக்கும் அப்படின்னு நானும் சொன்னேன். மணிக்கட்டில் ஒரு நரம்பு செலக்ட் செய்து அதில் அம்புபோல் செலுத்தினார்கள். வலிக்கிறதா என்றார்கள் . நான் வலிக்கவில்லை என்று பிறகு நரம்புவழியாக சென்றபிறகு நின்றுவிட்டது. டீம் தலைவர் கை நரம்புகள் மெலிதாக இருப்பதால் செல்லவில்லை என்று சொன்னார். உடனே டாக்டர் கால் நரம்பில் செலுத்த சொன்னார். எல்லாம் என் நேரம்.அந்த பிரசிஜர் எப்படி செய்கிறார்கள் என்றால் நமக்கு மயக்க மருந்து கிடையாது. தொடையிலிருந்து ஒரு பெரிய நரம்பை கட் பண்ணி அதன் மூலம் ஒரு அம்பு போன்ற அமைப்பில் ஒரு சின்ன அம்புபோல் செலுத்துகிறார்கள். அது நரம்பின் வழியே உள்ளே புகுந்து இதயத்தின் அருகில் வருகிறது. இதையெல்லாம் ஒரு மிகப்பெரிய டிவி நம் தலைமாட்டில் வைத்திருக்கிறார்கள் அதில் நாம் பார்க்கலாம் .இந்த அம்பு போன்ற அமைப்பு உள்ளே செல்கிறது. எல்லா இடத்தையும் கடந்து இதயத்தின் அருகில் செல்கிறது. செல்லும்போது அங்கு இருக்கும் ரத்தக் குழாய்களை நன்றாக காட்டுகிறது .அப்போது அடைப்பு இருக்கும் ரத்தக் குழாயை அருகில் சென்றவுடன சென்றவுடன் அந்த அம்பு போன்ற அமைப்பு அங்கு ரத்தம் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை காட்டுகிறது. அது முடிந்தவுடம் icu வில் தள்ளிவிட்டு டீயும் பிஸ்கெட்டும் கொடுத்தார்கள்.டாக்டர் வந்தார். உங்களுக்கு இப்போது எதுவும் தேவையில்ல.காலை போகலாம் என்று சொல்லிவிட்டார். எனக்கு ஒரே மகிழ்ச்சி. மறுனாள் விடுதலை.டாக்டர் பாபுவிடம்immediate threat இல்லை.தேவைப்பட்டால் பிறகு செய்யலாம்.என்றவுடன் என் உற்சாகம் போய்விட்டது.தஞ்சை வந்துவிட்டேன். தூக்கம் போச்சு இதையே நினைத்து.ஒரு நாள் இரவு படபடப்பு அதிகமானது. வீட்டில் யாரிடமும் நள்ளிரவில் சொல்லவில்லை. விடிந்ததும் நண்பர் ரவியை வரச்சொன்னேன். உடனே பக்கத்தில உள்ள ஆஸ்பிட்டல் சென்றோம். அவர்கள் உடனே மீனாட்சிக்கு போங்க என்று சொல்லிவிட்டனர். நான் ரவியிடம் சென்னை சென்றுவிடலாம் என்றேன்.ப்ஸ்ஸில் திருச்சிபோய் சென்னை பஸ்ஸில் ஏறிவிட்டோம்.ரவிக்கு ஒரே பயம்.ஏதாவது ஆகிவிட்டால் என்ன 1செய்வது என்று.எனக்கு ஒன்றும் அகிவிடவில்லை.உளுந்தூர்பேட்டை செக்போஸ்ட் வந்தவுடன் ஒரு லிட்டர்போல் சிறு நீர் கழித்தேன். அப்பாடா என்று சகஜ நிலைக்கு வந்தேன். இனி பயமில்லை ரவி என்றேன்.பாபுவுக்கு தகவல் சொல்லியாச்சி.7மணி அளவில் நேரே emergency ward ல். நிலைமையை ரவி சொன்னார். எனது டாக்டருக்கு தகவல் சொன்னார்கள். உடன் admission test கள் ஆரம்பம்.பாவுவிடம் என்னை ஒப்படைத்துவிட்டு ரவி புறப்பட்டார்.மறு நாள் எனக்கு anjioplast.ரூபய் 2லட்சம் கட்டச்சொன்னார்கள்.எல்லா பழய பார்மாலிட்டீஸ் முடிந்து டேபிளில் கிடத்தப்பட்டேன்.procedure started. அந்தகுழாயை நரம்பின் உள்ளே செலுத்துகிறார்கள்.அது மெள்ள நகர்ந்து ரத்தக்குழாயின் அடைப்பை கொஞ்சம் கொஞ்சமாக நீக்குகிறது. அது நீக்கி வெளிவரும் அந்தக் கழிவை இன்னொரு குழாய் உறிஞ்சி எடுத்து க்கொள்கிறது. இந்த பிரசிஜர் எல்லாம் எல்லாமே கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. தைரியமாக இருப்பவர்கள் அந்த டிவியில் நாம் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் எனக்கு சற்று பயமாகவும் இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து தைரியம் வந்தது நானும் பார்த்தேன்.5நாட்கள் ரெஸ்ட்.5star hotel treatmentநல்லா ராஜபோகமா கவனிப்பு.என்ன ஒன்னு இந்த செவிலியர்கள் 2மணிக்கொரு தடவை blood எடுப்பார்கள், செக்கப் செய்வார்கள் .அதுதான் கொடுமை.இரவில் ராஜாவும்,பாபுவும் மாறி,மாறி கவனித்து கொண்டார்கள்.டாக்டரும் இருவரையும் என் மகன்கள் என்றே நினைத்துக்கொண்டார். நல்லபடியாக தஞ்சைக்கு வந்துசேர்ந்தேன். பிறகு.
இதெல்லாம் "முதுமை"யில் மட்டுமா வருகிறது. 'கண்மூடைப் பய புள்ள' எப்போது வேண்டுமானாலும் வந்து தொலைக்கிதே... :(
ReplyDelete