கதிர் 43. இனி ஓய்வா

ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்ததும் வீட்டில் ஓய்வெடுத்தேன். அப்போது உடல் கொஞ்சம் சோர்வாக இருந்தது. எனது மகளும் இனி நீங்கள் கோர்ட்டுக்கு செல்ல வேண்டாம் வீட்டிலேயே ஓய்வெடுங்கள் என்று சொல்லிவிட்டார் .அதன் பிறகு நான் நண்பர்கள் யாரையும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை சந்திக்கவில்லை. வீட்டிலேயே இருந்தேன். நான் ஹாஸ்பிடல் செல்வதற்கு முன்பே எனது கட்சிக்காரர்களை அழைத்து அவர் அவருடைய கட்டுகளை கொடுத்து விட்டேன் .ஒரு சில பேர் மட்டும் சார் இருக்கட்டும் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள். கிட்டத்தட்ட 75% கட்டுகள் திரும்ப கொடுத்து விட்டேன் வீட்டுக்கு வந்த பிறகு ஓய்வாக இருக்கும் போது சரி நமக்கு இனி ஓய்வு தானா நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன் .எப்படி என்னால் வீட்டில் இருக்க முடியும் ஓய்வெடுக்க முடியும் என்று தெரியவில்லை .எனது நண்பர் நாகராஜன் அடிக்கடி வந்து நீ திரும்பவும் ஆபீஸ்க்கு வாய்யா ,நண்பர்கள் இருக்காங்க வா பொழுது போகும் அப்படி என்று திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு முப்பது நாட்கள் கழித்து இனி வீட்டில் இருக்க முடியாது என்று ஆபீசுக்கு மறுபடியும் சென்றேன். உடனடியாக கோர்ட்டுக்கு செல்லவில்லை.எனது குமாஸ்தா கவனித்துக்கொண்டார். நான் ஆபீசுக்கு வந்தது தெரிந்ததும் நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள். இப்படி சில காலம் சில நாட்கள் போய்க் கொண்டிருந்தது. பின்பு நமக்கு வக்கீல் தொழில் பார்க்காமல் இருக்க முடியாது என்று எனக்கு உறுதியாக தெரிந்து விட்டது .ஆகவே உடலும் கொஞ்சம் தேறி விட்டது ஆகவே மீண்டும் கோர்ட்டுக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். அப்போது ஆபீஸில் என்னை வந்து சந்திக்கும் நண்பர்கள் வி சந்திரசேகர் முக்கியமானவர் .அவர் ஏன் என்ன இப்படி சோர்ந்து போய் இருக்கீங்க .லைப் இதோட போயிடுச்சசா என்ன, இன்னும் எவ்வளவு இருக்கு இந்தாங்க, ஒரு அதுவரைக்கும் பட்டன் செல்தான் வச்சிருந்தேன் ஒரு ஆண்ட்ராய்டு டேப் ஒன்று வாங்கி கொடுத்தார். அதிலிருந்து பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் பண்ணி கொடுத்தார். எனது ஜூனியர் பிரசாத்தும் இதில் மும்முரமாக இருந்தார். இருவரும் சேர்ந்துதான் இந்த வேலைகளை செய்தார்கள் .அக்கவுண்ட் ஓபன் பண்ண பிறகு ஒரு ப்ரொபைல் பிக்சர் எடுத்தார்கள் .நான் ஏதோ வாழ்க்கையை வெறுத்தது போல இருந்ததால் தாடி மீசையோடு ஒரு ஒரு போட்டோ எடுத்து அதன் ப்ரொபைல் பிச்சர் வச்சுட்டாங்க. நானும் அதை எப்படி இயக்குவது என்று தெரிந்து கொண்டு ஆரம்பத்தில் நேச்சுரல் சீன்ஸ் அல்லது போஸ்ட் போடத் தெரியாததால் மற்றவர்கள் போட்ட போஸ்டை ஷேர் செய்து கொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழித்து போஸ்ட் எப்படி போடுவது என்று தெரிந்து கொண்டேன் .அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆயிட்டு  டெவலப் ஆகி நல்ல ஒரு போஸ்ட் போட போட கற்றுக் கொடுத்தது எனக்கு சந்திரசேகரும், எனது ஜூனியர் பிரசாத் தும்தான்.ஒரு மாதிரி அதுல பொழுது போச்சு . நமக்கு தெரியாத உலகம் ஒன்னு இருக்கு இந்த உலகத்துல பயணிக்கலாம் .இது கொஞ்சம் வேடிக்கையை வினோதமா இருக்கு. அறிவியல் வளர்ச்சியின் உச்சம் தான் இந்த பேஸ்புக் என்பது என் எண்ணம். அதன் பிறகு நிறைய விஷயங்கள் facebook அதில் google போன்ற சாதனங்களை மூலம் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் அதில் மிகுந்த ஆர்வம் வந்துவிட்டது பேஸ்புக் இயக்க கற்றுக் கொண்டேன் .அதே நேரத்தில் மீண்டும் கோர்ட்டுக்கும் செல்ல தொடங்கினேன். அப்போது நான் முன்பு படித்திருந்த வைணவத்தை மீண்டும் ஒருமுறை படித்தால் நமக்கு படிக்கும் ஆர்வம் வரும் என்ற காரணத்தால் மீண்டும் இந்த வைணவ கதைகளை நான் எழுதி வைத்திருந்தது படிக்கத் தொடங்கினேன் மீண்டும். அப்போதுதான் வழக்கறிஞர் சாமிநாதன் என்ற நண்பர் இதைப் பற்றிய கதைகளை ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பித்தார் .அப்போது ஆபீஸில் உட்கார்ந்து கொண்டு இதை பேசுவது ,வைணவத்தை பற்றி தீவிரமாக சொல்வது அந்த கதைகளை பற்றி பேசுவது என்று உற்சாகமாக பொழுது போநது. நண்பர்களும் அடிக்கடி வர ஆரம்பித்தார்கள். மீண்டும் எனது வாழ்க்கையில் வசந்தம் வீச ஆரம்பித்தது .மீண்டும் இண்டுலா ஹிண்டு விழாவை மீண்டும் தோண்டத் தொடங்கினேன். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சப்ஜெக்ட் ஹிந்துலா. அதில் எப்போதுமே ஆர்வம் காட்டுவேன் முக்கியமாக திரு சந்திரசேகர் அவர்கள் இண்டுலாவை  உயர்நீதிமன்றத்தில் பணியாற்றுவதால் ,அப்டேட் ஆக இருப்பார் .அப்டேட் ஆனவுடன் என்னிடம் வந்து அதை சொல்லுவார். நானும் உடனே அதை படிப்பேன் .படித்துவிட்டு நாங்கள் இரண்டு பேரும் டிஸ்கஸ் செய்வோம் இப்படி ஹிந்துலாவில் எனக்கு அதிகமான உற்சாகத்தையும் எனக்கு ஏன் ஒரு சில விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தே இருக்கிறார். அந்த அளவுக்கு எங்களுடைய டிஸ்கஷன் நடக்கும் .அந்த டிஸ்கஷன் நடப்பதை பார்த்து பல நண்பர்கள் எனது ஆபிஸில் கூட ஆரம்பிச்சார் ஏதாவது இந்துலாவுல சந்தேகமா போங்க அந்த ஆபிஸ்க்குஅங்கதான் டிஸ்கஷன் நடக்கும் .அங்க வந்து உங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு எங்கள் ஆபீஸ் வந்து அந்த ஹிண்டு விழாவை விவாதம் பண்ணும் விவாதம் மேடையாகவே ஆக்கிவிட்டோம் .நிறைய நண்பர்கள் வந்தார்கள் .அதன் மூலம் நாங்கள் எல்லோரும் கற்றுக் கொண்டோம். கூடி பேசி எல்லோரும் கற்றுக் கொண்டோம் இது எனக்கு மீண்டும் ஒரு எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது போல இருந்தது மீண்டும் பணியை தொடங்கினேன் பிறகு.

Comments

  1. முடிவு சரியா

    ReplyDelete
  2. மிக நல்ல முடிவு. தொடரட்டும் தொழிலும் வாழ்வும்,.....

    ReplyDelete
  3. ஒய்வா ..." யாருக்கு?? உங்களுக்கா??? அதற்குள்ளா .. அதெல்லாம் எதற்கு உங்களுக்கு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64