வெளிச்சம் பரவட்டும் ஈசிசேர் 51

நானும் சினிமா உலகில் 50, 60 வருடங்களாக படங்கள் பார்த்து வருகிறேன் .எத்தனையோ நடிகர் அவர்களின் நடிப்பை கண்டு வியந்து இருக்கிறேன் ரசித்திருக்கிறேன் தியாகராஜ பாகவதர் காலம் முதல் சின்னப்பா எம்ஜிஆர் சிவாஜி சாவித்திரி  கண்ணாம்பா பத்மினி பானுமதி என்று பல நட்சத்திரங்கள் நடித்த படங்களை பார்த்துள்ளேன்.  எல்லோருமே சிறப்பான நடிகர்கள் தான்.பாத்திரங்களை உணர்ந்து நடிப்பவர்கள் ஒவ்வொரிடமும் ஒரு தனித்திறமை இருக்கும். அதை கொண்டே அவர்கள் முன்னேறினார்கள். இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு பின்னால் வந்த லட்சுமி என்ற ஒரு நடிகை அவரது அம்மா ருக்மினியும் ஒரு நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா அவரும் ஒரு பிரபல ஹீரோயின் .இத்தனை நடிகர்கள் நடிப்பை நான் பார்த்த பிறகும் லட்சுமியின் நடிப்பை பார்த்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. 19 7 4 லேயே அவர் நடித்த ஜூலி என்ற மலையாளப் படம் படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருது பெற்றவர் லட்சுமி. சாதாரண எல்லாரையும் போல சாதாரண கதாநாயகியாக தான் அவரும் நடித்துக் கொண்டிருந்தார. ஆனால் அவரது அலாதியான நடிப்பு திறனை வெளிப்படுத்துவதை கண்ட சில டைரக்டர்கள் அவரை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டனர் . ஜூலிபடத்திற்கு பின்னால் அவர் ஏகப்பட்ட மலையாள படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். அங்கு அவரது நடிப்பு திறமையை வெளிக்காட்ட பல விதமான திரைப்படங்கள் வந்தது. லட்சுமி படம் நடிப்புத்திறனுக்கு சவால் விடும்படி  இருக்கும். அதன் பிறகு மிகப் பிரபலமான புகழ்பெற்ற ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். சில நேரங்களில் சில மனிதர்கள் படம் கதையை படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும் ஆனால் அந்த கதை ஒரு சமுதாயத்தில் ஒரு வேலி தாண்டிய வெள்ளாட்டின் கதை. அந்த பாத்திரத்தின்  நடிப்பது என்பது சுலபம் அல்ல . படிப்பதில் உள்ள சுவாரசியத்தை நடிப்பில் கொண்டுவரமுடியாது.ஏனென்றால் அந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகியை சார்ந்தது. கதாநாயகி ஒரு கல்லூரி மாணவி தன்னை அறியாமல் கெட்டுப்போன ஒரு காரணத்தால் அவரது வாழ்க்கையை பாழாகியது. அதனால் மனமுடைந்த அந்த பாத்திரத்திற்கு அதனை வெளிப்படுத்தும் விதமாக நடிப்பதற்கு ஆளே இல்லை. ஒரு சில பிரபல நடிகைகளை தேர்ந்தெடுத்து இவர்கள் சரி வர மாட்டார்கள் இதற்கு லட்சுமி தான் சரியாக வருவார் என்று லட்சுமி  கதாநாயகியாக நடித்திருந்தார்.அந்த படத்துல அவருக்கு இணையாக ஸ்ரீகாந்த் என்ற நடிகர் நடித்திருந்தார். அந்த கெட்டுப் போன பாத்திரம் ஆக இருந்தாலும் தனது வாழ்க்கையை திருமணமே செய்து கொள்ளாமல் மிகப்பெரும் ஆபீஸராக உயர்ந்து பின்பு அவனுடன் குடித்தனம் நடத்தும் அளவுக்கு ஒரு தைரியசாலி .ஊர் உலகம் என்ன பேசும் என்பதை பற்றி கவலைப்படாமல் நடித்த ஒரு துணிச்சல் காரி ச்சலான பாத்திரம். அவரது ஒரு ஒரு அசைவிலும் முகத்தின் அசைவுகள  இப்படித்தான் காட்ட வேண்டும் என்று நடிப்பிற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்திருப்பார் .என்ன ஒரு அருமையான நடிப்பு? பார்த்தவர்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அந்த நடிப்புதான் என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. எந்த நடிகையும் இது போல் நடிக்க முடியாது எதற்காக இந்த படத்திற்காக அவர் தேசிய விருது வாங்கினார். தமிழக தமிழ்நாடு அரசு விருதும் வாங்கினார் இதன் பிறகு  வந்த ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். இந்த படத்தில் ஒரு நாடக நடிகையாக தோன்றுவார் அப்போது, நாடக நடிகைகளுக்கு உரித்தான ஓவர் மேக்கப் அலட்சியமான பேச்சு, யாரையும் லட்சியம் பண்ண இயல இயலாமல் தன் போக்கில் வாழ்வர் .அவரை  இரண்டாம் தரமாக கணவரும்  வருகிறார் .அவர் ஒரு கட்டத்தில் நடிகையாக இனி இருக்க வேண்டாம் என்று சொல்லும் போது நடிகையாக இருப்பதே எனது லட்சியம் இதற்காக என் உயிரையும் விடுவேன், ஆனால் நடிப்பை விட மாட்டேன் என்று விவாகரத்துக்கு செல்லும் அளவுக்கு ஒரு determined woman என்பதை நடத்திக் காட்டுவார் .அவரது நடிப்பும் அவரது வசனமும் அந்த மாடுலேஷனும் முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷனும் அடடா சொல்லவே முடியாது. இப்படி எத்தனையோ படங்கள் லட்சுமிக்கு .லட்சுமி  படம் என்றால் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. ஆபாசமாக எல்லாம் நடிக்க மாட்டார். அதே நேரத்தில் சம்சாரம் அது மின்சாரம் என்ற படம் என்ற படம் வந்தது அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் லட்சுமி பேசும் அந்த வசனத்துக்காகவே படம் 200 நாட்கள் ஓடியது . குறிப்பாக சிறை என்ற படம். சந்தப்பவசத்தால் ஒரு ரவுடியால் கெடுக்கப்பட கணவனால் தள்ளிவைக்கப்படுகிறார். கெடுத்தவனிடமே சென்று நியாயம் கேட்கிறார். அங்கேயே தங்கியும் விடுகிறார்..ரவுடியும் திருந்திவிடுகிறான். இறந்தும் விடுகிறான். அகலிகை கதை.கடசியில் மனம் திருந்திய கணவன் அவரை வீட்டுக்கு அழைக்க, நான் செய்யாத தப்புக்கு என்னை வீட்டைவிட்டு வெளியே தள்ளினாய்.ஆனால் தப்பு செய்தவன் என்னை கடைசிவரையில் காப்பாற்றினானென்று சொல்ல அப்போ நான் கட்டிய தாலி எதற்கு என் கணவன் கேட்க தலியை கழற்றி அவனிடம் வீசுகிறாள். அ ப்படிப்பட்ட ஒரு அற்புதமான நடிகை.  என்ன ஒரு கஷ்டம் என்றால் அவருக்கு இணையாக நடிக்க தென்னகத்தில் நடிகர்களே இல்லை என்பதுதான். அவர் மட்டுமே தான் ஜொலிப்பார். அதற்காகவே பயந்து கொண்டு அப்போது இருந்த மிகப்பெரும் கதாநாயகர்கள் லட்சுமி கூட  நடிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு சிறப்பான ஒரு நடிகை என்னை பொறுத்தவரை நானும் எத்தனையோ நடிகள் நடிப்பை ரசித்துள்ளேன் ,ஆனால் லக்ஷ்மி ஒரு சூப்பர் ஸ்டார் .அவர் சாதாரண லட்சுமி அல்ல மகா,லட்சுமி நடிப்பில்

Comments

  1. ஜொலிக்கும் நட்சத்திரம்

    ReplyDelete
  2. ஓரு விரல் கிருஷ்ணாராவ் மாதிரி, ஒரு பாரா நாட்டரசனா நீங்க?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63