வெளிச்சம் பரவட்டும். பகுதி 72 பீஷ்மரும் பாண்டவரும்,கவுரவர்களும்

நண்பர்களுக்கு ,  இந்த தொடரை நான் எழுத ஆரம்பித்து சில நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதில் ஒரு சிலர் நீங்கள் மகாபாரத கதை முழுதாக சொல்லவில்லை என்று சொன்னார்கள் .எனது நோக்கமே மகாபாரத கதையை எடுத்துச் சொல்வது அல்ல. அந்த கதையின் மூலமாக வரும் பிரபலமான கதாபாத்திரங்கள் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும் . நான் சொல்ல வந்தது நாம் மகாபாரத்தில் மிகப்பெரியதாக மதிக்கும் சில கதா பாத்திரங்கள் அவர்கள் எவ்வளவுதான் உயர்வு பெற்றிருந்தாலும் அவர்களுக்கும் ஒரு தாழ்வு உண்டு. அந்த  கதாபாத்திரங்களை ஒரு அனாலிசிஸ் செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். ஏனென்றால் கதையை சொல்வது மிகப்பெரும் விஷயம். அதற்கு நான் தகுதியானவனும் அல்ல .ஆகவே நண்பர்கள் நான் இந்த கதாபாத்திரத்தை எனது கண்ணோட்டத்தில் விவரித்து உள்ளேன். தங்களுக்கு ஏதும் கருத்து இருந்தால் அதை நீங்கள் தங்களது கமெண்டில் தாராளமாக வெளியிடலாம் .நன்றி வணக்கம். தொடர்வோம். மீண்டும் நாம் அஸ்தினாபுரம் நோக்கி செல்வோம். ஏனென்றால் அது பீஷ்மரின் புண்ணிய பூமியாக நினைக்கும் இடம். அஸ்தினாபுரத்தி அவரது தம்பிக்கு திருதராஷ்டிரன் பாண்டு என்று இருவர் பிறந்தார்கள். இதில் திருதராஷ்டிரன் குருடன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்தான் மூத்தவர் என்ற போதிலும் குருடன் என்ற முறையில் அவரால் ஆட்சி செய்ய முடியாது என்ற காரணத்தினால் மற்றொரு கிளையான பாண்டு விற்கு முடி சூட்டப்பட்டது. சிறிது காலங்களுக்கு பின் பாண்டுவுக்கு மனம் நிம்மதி இல்லாததால் தான் காட்டுக்கு செல்கிறேன் என்று தனது மனைவியை அழைத்துக்கொண்டு காட்டுக்கு சென்று விட்டார் . பாண்டு காட்டுக்குச் சென்ற பிறகு அவருக்கு 5 பிள்ளைகள் பிறந்தார்கள் அவர்களே தருமன் பீமன் அர்ஜுனன நகுலன் சகாதேவன். இங்கு அஸ்தினாபுரத்தில் பாண்டு காட்டுக்கு சென்று விட்டதால் மீண்டும் திருதராட்டின்னனுக்கே முடி சூட்டுவது என்று அவரை அந்த நாட்டுக்கு ராஜாவாகிவிட்டார்கள். அவருக்கு 100 பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் மூத்தவன் துரியோதனன். பின்பு பாண்டு காட்டில் இறந்த பிறகு அவருடைய 5 பிள்ளைகளும் அவருடைய மனைவியான குந்தி தேவையும் நாட்டுக்கு அழைத்து வந்து இதில் முதலில் பிறந்த தருமனுக்கு இளவரசு பட்டம் சூட்டியது எல்லாம் மகாபாரத்தில் வரும் கதை படித்தவர்களுக்கு நன்றாக தெரியும். பின்பு குருகுல வாசம் நடந்தது. பாண்டவர்களும் , கவுரவர்களும் முறைப்படி எல்லா விஷயங்களையும்  அவர்கள் துரோணரிடம் பயிற்சி பெற்றார்கள். இதில் எல்லோரையும் விட அர்ஜுனனே மிகப்பெரும் வில் லாளியாக உருவெடுத்தான்.  அதனால் கௌரவர்கள் 100 பேருக்கும் பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் இடையில் எப்போதும் ஒரு விரோதம் வளர்ந்து கொண்டே இருந்தது. மேலும் தருமனுக்கு இளவரச பட்டம் சூட்டி விட்டதால் அவர்கள் பஞ்ச பாண்டவர்களையும் சேர்த்து ஒழித்து விட வேண்டும் என்று துரியோதனனை கும்பல் போராடிக் கொண்டிருந்தது. அப்படி ஒரு  சம்பவம் நேர்ந்தது பின்னால் பார்க்கலாம் அந்த சம்பவத்தை.தொடர்ந்து

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்