ஈசி சேர். வெளிச்சம்.பரவட்டும். பீஷ்மர் , பகுதி 73
பாண்டவர்களை கொல்ல நேரம் பார்த்து இருந்த துரியோதனன் தருமனுக்கு இளவரசு பட்டம் சூட்டுவதற்காக வாரணாவதம் என்ற இடத்தில் அவர்களுக்கு வரவேற்பு கொடுக்க அனுப்பி வைத்தார்கள். அங்கு அவர்கள் தங்கி இருந்த அரக்கு மாளிகையை நடு இரவில் கொளுத்தி விட்டார்கள். ஆனால் பாண்டவர்கள் சமயோஜிதமாக அதிலிருந்து தப்பி பாஞ்சால நாட்டு எல்லைக்குள் சென்று விட்டார்கள். எல்லோரும் பஞ்சபாண்டவர்களும் இறந்து விட்டதாக கருதி விட்டார்கள். அப்போதும் பீஷ்மர் மௌனம் சாதித்தார். பின்பு பாஞ்சால நாட்டுக்கு சென்று சுயம்வரத்தில் திரௌபதியை 5 பேரும் திருமணம் செய்து கொண்டு திரும்பிய பிறகு தான் அவர்கள் உயிரோடு இருக்கும் விஷயம் அஸ்தினாபுரத்துக்கு தெரியும். இனிமேலும் சும்மா இருக்க கூடாது என்று கருதி பஞ்சபாண்டவர்களை அழைத்து அஸ்தினாபுரத்தின் நாட்டை இரண்டாக பிரித்து பாண்டவர்களுக்கு இந்திரப்பிரஸ்தம் என்ற நாடு ஒதுக்கப்பட்டது. அப்போதும் பீஷ்மர் பெரிதாக வாதிட வில்லை .பின்பு அந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டதும் வரவேற்புக்கு அங்கு சென்று துரியோதனனுக்கு துரோபதியால் ஏற்பட்ட அவமானத்தினால் எப்படியும் இந்த நகரத்தை கைப்பற்றி விட வேண்டும் என்ற பேராசையால் துரியோதனன் துடித்த போதும் பாண்டவர்களை அஸ்தினாபுரத்திற்கு அழைத்து சூதாட்டம் நடத்தலாம் என்று சொன்னபோதும் பீஷ்மர் பேசாமல் இருந்து விட்டார் .அந்தக் காலத்தில் மன்னர்களுக்குள் சூதாட்டம் நடப்பது ஒரு வழக்கமாக இருப்பதாலும் ஏன் தர்மனுக்கே சூதாடுவதில் மிக்க பிரியம் கொண்டவராக இருந்ததால் அந்த சூதாட்டத்திற்கு ஒப்புக் கொண்டார்கள் .சூதாட்டத்தில் நாடு நகரம் அத்தனையும் இழந்தார்கள். கடைசியில் பாண்டவர்கள் தனது மனைவி திரௌபதியையும் சூதாட்டத்தில் இழந்தார் .அப்போதும் பீஷ்மர் எதுவும் சொல்லவில்லை திரௌபதியை அரசவைக்கு அழைத்து வந்து அவருடைய ஆடைகளை களைந்த போதும் மௌனமாகவே இருந்தார் பீஷ்மர். ஒரு வழியாக கிருஷ்ணனின் தயவால் திரௌபதியின் மானம் காப்பாற்றப்பட்டது. அங்கு ஏற்பட்ட ஒப்பந்தப்படி பாண்டவர்கள் காட்டுக்குப் புறப்பட்டார்கள் 13 வருடங்கள் கழித்து திரும்பி வந்தால் அதன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தப்படி அவர்கள் காட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். அப்போதும் பீஷ்மர் தனது கருத்தாக எதையும் வெளியிடவில்லை .ஏன் என்பதை அடுத்த பாகத்தில் திரௌபதி கேட்பாள் பீஷ்மரிடம்
Comments
Post a Comment