ஈசிசேர். வெளிச்சம் பரவட்டும் பகுதி 74 பீஷ்மரும் திரவுபதியும்.

சூதாட்ட சருக்கத்தில் வீழ்ந்த பாண்டவர்கள் காட்டுக்குச் செல்ல தயாராகி விட்டனர் .அப்போது சபையில் இருந்த பெரியவர்கள் அனைவரையும் பார்த்து திரௌபதி கேள்வி மேல் கேள்வி கேட்டாள். இப்படி ஒரு அநியாயம் நடக்கிறது அதை பார்த்துக்கொண்டு நீங்கள் பெரியவர்கள் என்று ஏன் இப்படி மௌனமாக உட்கார்ந்து இருக்கிறீர்கள். பீஷ்மரும் ,விதுரரும் போன்ற தர்மவான்கள். இப்படிப்பட்டவர்கள் நிறைந்த சபையில் இங்கு தர்மத்துக்கு இடமில்லையா .இது ஒரு அநீதியான செயலாக உங்களுக்கு தோன்றவில்லையா. ஒரு பெண்ணை மானபங்கப்படுத்துவது அதுவும் எல்லோர் சபையிலும் நடுவே மானபங்கப்படுத்துவது உங்களுக்கு நியாயமாகப் பட்டதா? ஏன் தர்மத்தை யாரும் எடுத்துச் சொல்லவில்லை ? உங்களுக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியா என்று அங்கு இருந்த சபையோரை பார்த்து கேட்டாள். அப்போதும் பீஷ்மர் தலைகுனிந்தவரே இருந்தார் .எந்த விதமான பதிலும் சொல்லவில்லை. தர்மம் அறிந்த  விதரன், உனது கேள்வி எல்லாம் சரிதான் . ஆனால் அந்த நாட்டு வழக்கப்படி பெண்களுக்கு என்று தனி உரிமை கிடையாது மனைவி என்பவள் கணவனின் சொத்து ஆவாள். ஆகவே மனைவியை வைத்து சூதாடுவதற்கு எல்லா விதத்திலும் கணவனுக்கு உரிமை உண்டு. ஆகவே உன்னை அடிமைப்படுத்தினது  எந்தவிதமான சிக்கலும் இல்லை .ஆனால் உன்னை அவமானப்படுத்தியதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல என்று கைவிரித்து விட்டார். சபையில் இருந்த மூத்தவரான பீஷமரும் எந்தவிதமான வார்த்தையையும் சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். அப்போது திரௌபதி எந்த சபை என்னை அவமதித்ததோ, அந்த சபையை  அதற்கு காரணமானவர்களையும் அழித்தே தீருவேன் என்ற சபதம் இட்டு தனது கூந்தலை விரித்து போட்டதெல்லாம் நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும் . இதற்கு காரணமானவர்களே அழிப்பேன் என்று சொன்னது துரியோதனனுக்கு மட்டுமல்ல சபையில் இருந்த அத்தனை பேருக்கும் .ஆகவேதான் , நீதி உரைத்த விதுரன் தப்பித்தார்  கண்ணில்லாத திருதராட்டிரன் தப்பித்தான். போரில் மற்றவர்கள் எல்லோரும் மாண்டனர். இந்த நிகழ்ச்சியும் பீஷ்மரின் அழிவுக்கு ஒரு காரணம் .பீஷ்மர் பத்தாம் நாள் போரில் அம்பு படுக்கையில் விழுந்ததற்கும் ஒரு பெண் சிகண்டி என்ற திருநங்கையே காரணமானாள். இந்த போர் வருவதற்கும் திரௌபதி என்ற பெண்ணே காரணமானாள். கடைசியில் பீஷ்மர் அம்பு படுக்கையில் 48 நாட்கள் உயிரோடு இருந்தார் . அப்போது அவருக்கு அவரின் தலை தொங்கிய போது அர்ஜுனன் ஒரு அம்பையை செலுத்தி அவருக்கு  தலையணையாக மாற்றினார்.அவர் தாகம் என்று சொன்னபோது அர்ஜுனன்  ஒரு அம்பினால் பூமியை பிளந்து கங்கையை மேலே கொண்டு வந்து அவரது தாகத்தை தீர்த்தான். பீஷ்மர் அவர்களை எதிர்த்து சண்டையிட்டபோதும். இருந்த போதும் அவர் 48 நாட்கள் அந்த அம்பு படுக்கையிலே விழுந்து இருந்த காரணம்  என்னைப் பொருத்தவரை அவருடைய மனசாட்சியேஅவரைக் கொன்றது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன். தான் பெண்களுக்கு செய்த அந்த இழிவு அதற்கான தண்டனை இது 48 நாட்கள் வலியோடு இருக்க வேண்டும் என்று அவருக்கு அவராகவே ஏற்றுக் கொண்ட தீர்ப்பு என்று தான் நான் நினைக்கிறேன. அம்பை எடுத்த சபதம், மற்றும் திரவுபதியின் சபதம். அதுவே அவருக்கு உண்டான பாவமன்னிப்பு. சிலர் நினைக்கலாம் , பீஷ்மர் பெயரில் தவறு ஏதும் சொல்ல முடியாது என்று. அவர் கொடுத்த வாக்குறுதிபடியே நடந்தார் என்றும் சொல்வார்கள் அவரை பற்றி உயர்வாக .ஆனால் அந்த ராஜ்யமே அவருக்கு உரித்தானது அந்த ராஜ்யத்தை தான் பாதுகாப்பேன் என்று உறுதி எடுத்து இருந்தார் உண்மைதான் .ஆனால் அவர் கொண்ட உறுதி  தர்மத்தின்பால் பட்டதா என்று நாம் பார்க்க வேண்டும் . ஒரு அவதூறு ஒரு அவமதிப்பு ஒரு பெண்ணுக்கு நேரும்போது ஒன்று அந்த சபையில் விட்டு ஒன்று வெளியேற வேண்டும், அல்லது அந்த சபையை அவர் எச்சரித்து இருக்க வேண்டும். அல்லது ஏன் அவர் நியமித்த அந்த மன்னனை கூட அவர் நீக்கி இருக்கலாம் . தண்டிக்கவும் செய்யலாம். ஆனால் அவர் பீஷ்மர் கட்டுப்பட்டு கிடந்தது , தர்மத்தின் வழியில் அவர் நடக்கவில்லை. தனக்கு தனது தான் ஏற்றுக் கொண்ட அந்த உறுதிமொழிக்காகத்தான் அவர் சங்கடப்பட்டாரே ஒழிய தனது புகழுக்காக மட்டுமே ஏற்றுக் கொண்ட அந்த சங்கல்பம் சரியல்ல என்பது எனது கருத்து .சொன்ன சொல் தவறாத  அரிச்சந்திரன் உலக நன்மைக்காக அந்த உறுதிமொழி எடுத்தான். அந்த உறுதிமொழியில் இருந்து அரிச்சந்திரன் மாறவே இல்லை . உலகம் பாராட்டியது. ஆனால் பீஷ்மர் எடுத்தது உலக நன்மைக்காக அல்ல. அவர் கொண்ட அவருடைய சுயநலத்திற்காக தான் அந்த உறுதிமொழியை வாக்குறுதியையும் பயன்படுத்திக் கொண்டார் . அது அவருக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்கள் விஷயத்தில் பொருந்தாது. அது தர்மத்தின் பால் சரியல்ல என்பது எனது கருத்து . பேசவேண்டிய இடத்தில் பேசாதும் குற்றமே. இருந்தபோதிலும் மகாபாரதத்தின் தலைமையானவர் என்ற காரணத்திற்காகவும் தந்தைக்காக தனது சகல உரிமைகளையும் ஆசைகளையும் விட்டு கொடுத்தவர் பீஷ்மர் . அவரது புகழ் என்றும் ஓங்கட்டும். அடுத்து துரோணர்.

Comments

  1. பீஷ்ம பிதாமகரின் பாத்திரம் ஆழமாக அலசப்பட்டுள்ளது. பாராட்டுகள். பாஞ்சாலி சபையில் அவமதிக்கப்பட்டபோது அவர் காத்த மௌனம் தன் பிரதிக்ஞையையும் சுய கௌரவத்தைக் காப்பதற்காக மட்டுமே என்னும் வாதம் அருமை. சுயநலத்தை மீறி ஒரு பெண்ணின் மானத்தைக் காப்பாற்றி இருக்கவேண்டும் என்பது சரியே. அரிச்சந்திரனை தொடர்பு காட்டுவதும் பொருத்தம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்