ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும். பகுதி 75, துரோணரும் துருபதனும்

மகாபாரதத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் துரோணாச்சாரியார். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் அஸ்திர பயிற்சியை கொடுத்தவர். அவருக்கும் பாஞ்சால நாட்டை ஆண்ட  துருபதனுக்கும் சிறிய வயதில் நட்பு உண்டு இருவருமே ஒரு குருகுலத்தில் தங்கி படித்தவர்கள் .அப்போது துருபதன் பாஞ்சால நாட்டுக்கு மன்னனாக வரும்போது துரோணா உனக்கு நான் பாதி ராஜ்யம் கொடுப்பேன் என்று சொல்லி இருக்கிறான். பின்பு பயிற்சிகள் முடிந்த பிறகு இருவரும் அவரவர்கள் இடத்திற்கு சென்று விட்டனர். காலம் ஓடிவிட்டது. துருபதன் பாஞ்சால நாட்டு மன்னனாகி விட்டான். துரோணரோ வறுமையில் வாடுகிறார் .அப்போது அவருக்கு அஸ்வத்தாமன் என்ற மகன் பிறந்துள்ளான். பால் வாங்க கூட வழியில்லாமல் தனது நண்பன் துருபதனை சந்தித்து ஏதாவது உதவி கேட்கலாம் என்று செல்கிறார். அவர் போன நேரம் துருபதன் அந்தப்புரத்தில் இருக்கிறான். காவலர்களிடம் சொல்லியும் எடுபடாத நிலையில் துரோணர் தடைகளை மீறி அவருடைய அந்தப்புரத்திற்குள் நுழைந்து விடுகிறார். அப்போது துருபதன் மிக்க கோபத்தோடு இவ்வளவு தடைகளையும் மீறி வந்த நீர் யார் என்று கேட்கிறான். ஏனென்றால் துருபதன் துரோணரை மறந்து விட்டான் .அவரது உருவம் இவனுக்கு சரியாக புலப்படவில்லை.  அவன் இருந்த நேரமும் அப்படி. உடனே துரோணர் தனது பழைய நட்பை சொல்லி அவனிடம் உதவி கேட்கிறார். மன்னன் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லாததால் துரோணரை வெளியே போகச் சொல்கிறார் .அப்போது துரோணர் துருபதனிடம் என்னை அவமானப்படுத்திய எனது நண்பனே உன்னை ஒருநாள் நான் இதே போல் அவமானப்படுத்துவேன் என்று சபதமிட்டு வெளியேறுகிறார். பின்பு அஸ்தினாபுரம் வந்து பீஷ்மரை சந்தித்து ராஜகுமாரர்களுக்கு பயிற்சி அளிக்க கேட்கிறார் .பீஷ்மரும் கௌரவர்களையும் பாண்டவர்களையும் அனுப்பி காட்டில் குருகுல வாசத்திற்கு ஏற்பாடு செய்கிறார். குருகுலவாசம் நடக்கிறது. அதில் எல்லா வகையிலும் சிறந்த ஒரு கெட்டிக்கார மாணவனாக அர்ஜுனன் திகழ்கிறான். ஆகவே அவருக்கு அர்ஜுனன் மீது ஒரு தனி கவனம் ஏற்பட்டு விடுகிறது. அர்ஜுனனுக்கு சில சிறந்த, யாருக்கும் கற்றுக் கொடுக்காத சில அஸ்திரங்களை எ சொல்லிக் கொடுக்கிறார் .இது அவருடைய மகன் அஸ்வத்தாமனுக்கு பிடிக்கவில்லை.அவன் தனது தந்தையை நோக்கி நேராகவே கேட்கிறான் எனக்கே சொல்லிக் கொடுக்காத சாஸ்திரங்களை ஏன் நீங்கள் அர்ஜுனனுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்று அவன் பிரத்தியேகமான மாணவன் அவன் எதையும் கூர்மையாக கற்றுக் கொள்ளும் அறிவு உள்ளவன் என்று சொன்னதால் அர்ஜுனன் பேரில் அஸ்வத்தமனுக்கு பகை ஏற்பட்டு விடுகிறது .ஏற்கனவே பாண்டவர்களின் பெயரில் முக்கியமாக அர்ஜுன் பெயரிலும் பொறாமைக் கொண்டிருந்த கௌரவர்கள் பக்கம் அஸ்வத்தமன் சாய்ந்து விடுகிறான். இதற்கு முதல் காரணம் அவரது தந்தை துரோணர். துரோணர் அர்ஜுனன் பேரில் தனிப்பட்ட கவனம் செலுத்தியதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு அர்ஜுனனை வைத்து துருபதனை வென்று தனது காலடியில் விழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இருக்கிறார் . அப்போது நடந்த ஒரு சம்பவம் பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று வேட்டையாடும் போது அவர்களுக்கு முன்னால் வேட்டை நாய் ஒன்று ஓடுகிறது அந்த வேட்டை நாயின் சத்தம் கொஞ்ச நேரத்தில் அடங்கி விடுகிறது. பார்த்தால் அந்த வேட்டை நாயின்  வாய் கட்டப்பட்டிருக்கிறது. அர்ஜுனனுக்கு ஒரே ஆச்சரியம் இப்படி நாயின் வாயை அம்புகளால் கட்டுமளவுக்கு ஒரு வில்வித்தை காரன் இருக்கிறானா அதுவும் இந்த காட்டில் என்பதுதான். பாண்டவர்களுக்கு ஒரே ஆச்சரியம். அப்போது சத்தமிட்டு கூப்பிடுகிறான் எனது நாயின் வாயை கட்டியது யார் என்று. அப்போது காட்டுவாசி யான வேடன் ஏகலைவன் அவர்கள் முன் வருகிறான் அவர்களைப் பார்த்து நீங்கள் யார் நான் இந்த காட்டுக்குச் சொந்தக்காரன் உங்களுக்கு இங்க என்ன வேலை என்று ஏகலைவன் பாண்டவர்களை மிரட்டுகிறான். அப்போது பாண்டவர்கள் தாங்கள் இன்னார் என சொல்ல அதை ஏற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறான் ஏகலைவன். அர்ஜுனன் ஏகலைவனை கூப்பிட்டு இப்படிப்பட்ட வில்வித்தை நீ எவ்வாறு கற்றுக் கொண்டாய் என்று கேட்கிறான். அதற்கு ஏகலைவன் சொன்ன பதில் அர்ஜுனனை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது பார்ப்போம்

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்