ஈசிசேர். வெளிச்சம் பரவட்டும் பகுதி 76.துரோணரும்,ஏகலைவனும்

வேட்டை நாயை  அம்புகளாலே வாயைக் கட்டி போட்ட ஏகலைவனின்  திறமையை கண்டு வியந்த அர்ஜுனன் அவருடைய குரு யார் என்று கேட்க தனது குரு துரோணர் என்று சொன்னான். அதைக் கேட்டு ஆச்சரியபட்ட அர்ஜுனன் எப்படி அவரிடம் நீ வில்வத்தை கட்டிருக்க முடியும்.எப்படி கற்றுக் கொண்டாய் என்று கேட்டான். அதற்கு ஏகலைவன் நான் துரோணரிடம் சென்று அட்சரப் பயிற்சி தனக்கும் அளிக்கும்படி கேட்டதாகவும் அவர் சத்திரியகுல அரசர்களுக்கு மட்டுமே அஸ்திர பயிற்சி கொடுக்க முடியும். நீ அந்த அஸ்திர பயிற்சிக்கு லாயக்கற்றவன். நீ கீழ் ஜாதி மகன். அதனால உனக்கு நான்  பயிற்சி அளிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். ஆகவே நான் காட்டில் மறைந்திருந்து துரோணர் எவ்வாறு பயிற்சி கொடுக்கிறார் என்று பார்த்து பார்த்து நானே கற்றுக் கொண்டேன். அதனால் அவருக்கு ஒரு சிலை வடித்து நான் அவரை எனது குருநாதராக போற்றி வணங்கி இந்த கலையை சுயமாக பயிற்சி  எடுத்தேன் என்றான். அர்ஜுனன் இதை கேட்டு வியந்தான். பின்பு அர்ஜுனன் தனக்கு தன்னை வெல்ல வில் வித்தையில் வேறு யாரும் இல்லை என்று நினைத்தேன். ஆனால் இப்போது எனக்கு ஒரு சவால் விடும் அளவுக்கு ஒரு எதிரி வந்து விட்டான் என்று  அந்த இடத்தை விட்டு நர்ந்தான்.தொடர்ந்து துரோணரிடம் பயிற்சி பெற்றான். அப்போதுதான் பயிற்சி முடியும் காலத்தில் அர்ஜுனன் குரு தட்சணையாக தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் .வெகு காலமாய் தன் மனதில் ரகசியமாக துருபதனிடம் வைத்திருந்த விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தினார். எனக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் பாஞ்சால மன்னன் துருபதனை வென்று அவனை எனது காலடியில் கொண்டு வந்து விழ வேண்டும் என்று துரோணர் சொன்னார் . அப்போது அர்ஜுனனை அவர் எச்சரித்தார். துருபதன் நீ நினைப்பது போல் சாதாரண ஆள் இல்லை. சகல கலைகளையும் கற்றவன் .ஆகவே எச்சரிக்கையாக இரு என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார். அர்ஜுனன் நேராக பாஞ்சால தேசம் சென்று துருபதனை வலிய போருக்கு அழைத்தான். போரில் நேருக்கு நேராக நின்ற துருபதனை வீழ்த்தி அவனை கயிற்றால் கட்டி துரோணரிடம் கொண்டு வந்து சேர்த்தான் .அப்போது துரோணர் நீ எனக்கு அவமானத்தை கொடுத்தாய் உனக்கு புத்தி வரவேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு செய்தேன் . இப்போது நீ எனக்கு அடிமை உன் தேசமும் அடிமை. ஆனாலும் எனக்கு ராஜ்ஜியம் ஆளும் விருப்பமில்லை. நீ உனது இஷ்டப்படி உனது நாட்டுக்கு செல்லலாம் . உனக்கு புத்தி வர வேண்டும் என்பதற்காகவே நான் இந்த காரியத்தை செய்தேன் என்று அனுப்பிவிட்டார் .அவமானம் அடைந்த துருபதன் கடும் தவம் செய்தான் .தனக்கு துரோணரால் ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்காக அவன் கடவுளிடம் ஒரு வரம் வேண்டினான் . துரோணரை கொல்வதற்கு தனக்கு ஒரு மகன் பிறக்கவேண்டும் என்று. ஆகவே மகாபாரதத்தில் முதல் பழிக்கு பழி என்பது துரோணாருக்கும் துருபதனுக்கும் இடையே நிகழ்ந்தது.  அவனுக்கு திருஷ்டதுய்மன் என்ற மகன் பிறந்தான் .அதே நேரத்தில் அந்தவேள்வியில் திரௌபதி என்ற மகளும் பிறந்தார் .மேலும் துருபதன் எந்த அர்ஜுனனை கொண்டு தன்னை வீழ்த்தினாரோ அதே அர்ஜுனனை கொண்டு துரோணரை வீழ்த்த வேண்டும் என்றும் என்று நினைத்துக் கொண்டார் .அதற்காக திரௌபதி வளர்ந்த பிறகு எப்படியாவது அர்ஜுனனுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் அதன் மூலம் அர்ஜுனனை மருமகனாக அடைந்து விட்டால் துரோணரை கொல்வது எளிது என்று நினைத்து சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். துருபதன் நினைத்தது போலவே சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை கைப்பிடித்தான். அதன் மூலம் பாண்டவர்களுக்கும் அவள் மனைவியாகிவிட்டாள் .பின்பு பாரத போர் நடந்த போது துரோணாவை எதிர்த்து நின்று அர்ஜுனன் சரமாரியாக அம்பு எய்து துரோணரை கொல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இடையில் துருபதனை வீழ்த்தியதற்காக அர்ஜுனனுக்கு துரோணர் ஒரு வரம் கொடுத்தார் நீ எதை வேண்டுமானாலும் என்னிடம் கேட்டுக் கொள் என்றார். அதற்கு அர்ஜுனன் இதுபோல் எனக்கு எதிரியாக ஏகலைவன் என்ற வேடன் காட்டில் இருக்கிறான். அவன் உங்களை குருநாதர் என்று சொல்கிறான் .உங்களிடம் இருந்து அஸ்திர பயிற்சி பெற்றதாகவும் சொல்கிறான். ஆகவே அந்த துருபதனை நீங்கள் அடக்கி வைக்க வேண்டும் .இல்லாவிட்டால் எதிர்காலத்தில் எனக்கு ஒரு எதிரியாக அவன் அமைந்து விடக்கூடும் என்று சொன்னான். அதைக் கேட்ட துரோணர் ஆச்சரியமடைந்து ஏகலைவனை பார்க்க செல்கிறார் .அப்போது காட்டின் நடுவில் துரோணருக்கு ஒரு சிலை அமைத்து அதன் முன் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான். ஏகலைவன்  இருக்கும் இடம் சென்று அவனை சந்திக்கிறார் துரோணர். அஸ்திர வித்தைகளை நீ எப்படி கற்றுக் கொண்டாய் என்று கேட்டபோது நான் நீங்கள் பாண்டவர்களுக்கும் முக்கியமாக அர்ஜுனனுக்கும் பயிற்சி கொடுக்கும் போது மறைந்து இருந்து பார்த்து அதன் மூலம் கற்றுக் கொண்டதாக கூறிநான். ஆகவே நீங்களே எனது குரு என்று சொன்னான் .அவனுடைய திறமையை வியந்து வியந்து பாராட்டிய துரோணர் பாராட்டினார். அப்போது தங்களுக்கு குரு தட்சணையாக நான் என்ன கொடுக்க வேண்டும் என்று அவன் கேட்க அப்போது துரோணர் மனிதர்கள் யாரும் செய்யாத ஒரு செயலை செய்தார் . எனக்கு ஏதாவது நீ கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் உனது தனுசை தூக்கக் கூடிய அளவுக்கு பலம் வாய்ந்த உனது கட்டைவிரலை கொடுக்க முடியுமா என்று கேட்க சற்றும் யோசிக்காமல தனது இடது கை கட்டைவிரலை வெட்டி அவரிடம் சமர்ப்பிக்கிறான் ஏகலைவன் ..அந்த அளவுக்கு உயர்ந்தவன் ஏகலைவன். அந்த இடத்தில் தாழ்ந்து போனார் துரோணர் .மீண்டும் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்