ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும் பகுதி 77, துரோணரும்,அஸ்வத்தாமனும்

துரோணரின் செல்வ மகன் தான் அஸ்வத்தாமன் .துரோணரின் பழிக்கு பழி வாங்கும் செயல் அசுவத்தாமனாலே நடந்தது .அவன் பொருட்டு வறுமையின் காரணமாக தான் பெற்ற பிள்ளைக்கு பால் வாங்க கூட வசதி இல்லையே என்று துருபதன் பேரில்  துரோணருக்கு விரோதம் ஏற்பட்டது. பின்பு அஸ்திர பயிற்சிகள் கொடுக்கும்போது அஸ்வத்தமனுக்கும் சேர்த்துதான் அட்சரப் பயிற்சி கொடுத்தார். ஆனால் துரோணர் அர்ஜுனன்  பேரில் மிகுந்த ஈடுபாடு கொள்வதை பார்த்து பொறாமை கொண்டான். அஸ்வத் தாமன் . தான் பெற்ற பிள்ளைக்கு கூட இப்படி ஒரு நுணுக்கமாக சொல்லித் தராமல் அர்ஜுனனுக்கு நுணுக்கமான வித்தைகளை சொல்லிக் கொடுத்தது அவனுக்கு எரிச்சல் ஏற்படுத்தி விட்டது. இதன் காரணமாகவே ஏற்கனவே பொறாமையில் இருந்த துரியோதனன் கும்பலில்  அவனும் சேர்ந்து கொண்டான் .பின்பு அவர்களுக்கு ஏற்பட்ட அழிவு அவனுக்கும் ஏற்பட்டது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நாட்டு பிரச்சனை பங்காளி பிரச்சனை இருந்ததால் அவர்களுக்குள் விரோதம் வளர்ந்தது .ஆனால் அஸ்வத்தமனுக்கு அர்ஜுனன் மேல் கொண்ட பொறாமையை காரணமாக மட்டுமே அவன் துரியோதனன் பக்கம் சாய்ந்தான். பிற்காலத்தில் அசுவத்தாமன் பாரதப் போரில் கலந்து கொண்ட போது கூட அஸ்வத்தாமான் பேரில் கொண்ட பிள்ளை பாசமே  துரோணரை கொன்றது .மேலும் அஸ்வத்தாமன் பாரத போர் முடியும் தருவாயில் அல்லது கிட்டத்தட்ட முடிந்த தருவாயில் திரௌபதியின் ஐந்து புதல்வர்களையும் காரணம் இன்றிஅவர்கள் தூங்கும்போது வெட்டிக் கொன்றான். இப்படிப்பட்ட இழிவான செயலை  அசுவத்தாமன் செய்ய தயங்கவில்லை. மகாபாரதத்தில் அசுவத்தாமன் ஒருவனே மிஞ்சி இருப்பதாக ஒரு கதை. அதே நேரத்தில் மனப்பிறழ்வு கொண்டவன் என்ற கெட்ட பெயரும் அவனுக்கு உண்டு. இதற்கெல்லாம் காரணம் துரோணரே .மீண்டும் துரோணரை போர்க்களத்தில் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்