ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும், பகுதி78, துரோணரும் பத்ம வியூகமும் வீர அபிமன்யு வும்
மகாபாரத போர் தொடங்கி 13 ஆம் நாள் .எவ்வளவு முயற்சித்தும் அர்ஜுனனை கொல்ல துரோணரால் முடியவில்லை. இதனால் பதட்டம் அடைந்த துரியோதனன் 13ஆம் நாள் துரோணரை யோசனை கேட்டான். அர்ஜூனனை என்னால் வெல்லமுடியாது. அதற்காக அர்ஜுனனை போர்களத்தை விட்டு வெகு தூரம் அழைத்துச் சென்று விடுங்கள் மற்றும் மீதி இருப்பவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் .அதனால் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி திரிகர்த்தர் என்ற மன்னன் அர்ஜுனனுக்கு நேருக்கு நேர் போரிட சவால் விட அந்த மன்னனை நோக்கி விரட்டிக்கொண்டே அர்ஜூனன் சென்று விட்டான் . இதை அறிந்த துரோணர் 13 ஆம் நாள் போரில் பத்ம வியூகத்தை அமைத்தார் .அவரது திட்டம் இந்த பத்மவியூகத்தை உடைத்து யாரும் உள்ளே வர முடியாது. என்பதுதான் ஆனால் இந்த பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே வரத் தெரிந்த ஒரே ஆள் அர்ஜுனனின் மகன் அபிமன்யு தான். அப்போது தர்மர் அபிமானியை பார்த்து இந்த வியூகத்தை உடைத்து உள்ளே செல் நாங்கள் உன் பின்னால் வந்து விடுகிறோம் என்று சொல்ல அதற்கு அபிமன்யு எனக்கு இந்த வியூகத்தை உடைக்கத்தான் தெரியுமே ஒழிய உள்ளிருந்து வெளியே வர தெரியாது என்று சொன்னார். அதற்கு நீ அதனால் கவலைப்பட வேண்டாம் நாங்கள் எல்லோரும் நீ சென்ற வழியில் உள்ளே வந்து விடுவோம் என்று சொல்ல, அபிமன்யு பத்ம வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றான். அபிமன்யு வின் போர் திறமையை கேள்விப்பட்டவர்கள் அல்லது நேரில் கண்ட கௌரவர்கள் இதுதான் சரியான சமயம் என்று பத்மவியூகத்தை மூடிவிட்டனர். தர்மர் சொன்னபடி யாரும் அவனைப் பின் தொடர்ந்து உள்ளே வர முடியவில்லை. அது போன்ற தருணத்தில் அபிமன்யு ஒருவனே உள்ளே போர்க்களத்தில் நுழைந்து அங்கிருந்த பல பேரை சாய்த்தான். முக்கியமாக போரில் ஈடுபட்ட துரியோதனன் முதல் துச்சாதனன் கர்ணன் போன்ற வீரர்கள் கூட அபிமன்யுவை.. எதிர்த்து நிற்க முடியவில்லை .அவர்கள் எல்லோரும் காயம் பட்டனர் ஏன் துரோணர் கூட அவருடைய பானங்களால் அபிமன்யுவை வீழ்த்த முடியவில்லை. பின்பு ஒரு கொடூர திட்டமிட்டனர் .அதாவது, மகாபாரதத்தில் கௌரவர்கள் பக்கம் உள்ள அத்தனை முக்கியமான வீரர்களும் சேர்ந்து ஒரே நேரத்தில் அபிமன்யுவை எதிர்த்தனர். அபிமன்யுவை சூழ்ந்து கொண்டு ஆளுக்கு ஆள் போரிட்டனர். எல்லாவற்றையும் மிஞ்சி மிகவும் அற்புதமாக போர் செய்தான் அபிமன்யு .கடைசியில் அவனது வில் துரோணாரால் உடைக்க பட்டது. அப்போது எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் கீழே நின்ற அபிமன்யு ஏதாவது ஒரு வாள் எனக்கு கொடுங்கள் நான் அதைக் கொண்டு போர் செய்கிறேன் என்று கர்ணனை பார்த்து கேட்டான். கர்ணன் அவனுக்கு ஒரு வாளை கொடுக்கப் போவது போல் சென்று அவனை குத்தினான். அதே நேரத்தில் அத்தனை கௌரவ வீரர்களும் தான் தாங்கள் கோழைகள் என்று நிரூபிப்பது போல் எல்லோரும் அவரவர்களுக்கு கையில் கிடைத்த ஆயுதங்களால் அபிமன்யு யூவைசாய்த்தனர். அபிமன்யு போர்க்களத்தில் விழுந்தான் இதற்கு முக்கிய காரணம் அவர்களோடு சேர்ந்து துரோணரும் அவனைக் கொன்றது தான். தொடர்ந்து போர் நடந்தது 15ஆம் நாள் யுத்தத்தில் துரோணரை கொல்வதற்கு கிருஷ்ணர் வழக்கம் போல் ஒரு உத்தியைச் சொன்னார் . துரோணருக்கு தனது மகன் அஸ்வத்தாமன் பேரில் மிகுந்த பாசம் உண்டு ஆகவே 15ஆம் நாள் யுத்தத்தில் அஸ்வத்தாமன் என்ற யானையை கொன்று விடுங்கள். போர்க்களத்தில் போர் செய்யும் யானையை கொன்று விட்டு அஸ்வத்தாமன் இறந்தான் என்று போர்க்களத்தில் சொல்லுங்கள் என்று யோசனை சொன்னார். அதேபோல் 15ஆம் நாள் யுத்தத்தில் அஸ்வத்தாமன் என்ற யானை கொல்லப்பட்டது என்று செய்தியை பரப்பினார்கள் .இதே கேள்விப்பட்ட துரோணர் மனமுடைந்து தர்மனை பார்த்து கேட்டார் .அந்த தர்மம் தவறாத தருமன் ஆம் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டது உண்மைதான் என்றார். அதைக் கேட்டு மனமடைந்து தேரில் உட்கார்ந்த துரோணரை அவரை பழிக்கு பழி வாங்குவதற்காக நேரம் பார்த்து காத்திருந்த துருபதன்மகன் திருஷ்டத்துயுமன் துரோணரின் தேரில் ஏறி அவருடைய அவருடைய தலையை வெட்டி விட்டான். அத்துடன் துரோணரின் கதை முடிந்தது. இந்த துரோணரின் முடிவு எதனால் ஏற்பட்டது என்பதற்கு என் பார்வையில் பார்க்கலாம் அடுத்த பாகத்தில்.
விறுவிறுப்பாக கதையை விவரிக்கும் பாங்கு பாராட்டுதலுக்கு உரியது.
ReplyDelete