ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும், பகுதி 79_ துரோணரின் முடிவு.
மகாபாரதத்தில் துரோணர் ஒரு மிகப்பெரும் ஆச்சாரியனாக இருந்த போதிலும் அவரது முடிவு வருந்ததக்க முடிவு. இது அவராகவே ஏற்படுத்திக் கொண்ட முடிவு. தர்ப்பை புல்லை ஏந்த வேண்டிய ஒரு அந்தணர் தனுர் வேதம் கற்க வேண்டிய அவசியம் என்ன. ஆகவே அவர் துருபதன் மீது கொண்ட வன்மத்தை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே அவர் அட்சரப் பயிற்சியை தேர்ந்தெடுத்தார். துருப்தனை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்றால் அது அவரது தனிப்பட்ட எண்ணம். அதற்காக அவர் தனது மகன் அஸ்வத் தாமனை தயார் படுத்திருக்க வேண்டுமே ஒழிய ஒரு தீய நோக்கத்தோடு அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார். ஏற்கனவே அர்ஜுனனுக்கும் துருபத மன்னனுக்கும் எந்த விதமான பகையும் இல்லாத போது அவர்களிடையே ஒரு பகைமையும் மூட்டிவிட்டார் இந்த ஆச்சாரியார். அந்தணர் என்பவர் அறவோர் என்பார்கள் .ஆனால் துரோணர் செய்தது மிகவும் மோசமான செயலாகவே நான் பார்க்கிறேன். இரண்டாவதாக துரோணரிடம் கல்வி கற்க வந்த ஏகலைவன் என்ற காட்டுவாசியை அவனது பிறப்பை சுட்டிக்காட்டி அவனுக்கு பயிற்சி அளிக்க மறுத்து விடுகிறார். ஏகலைவன் தனக்குத்தானே பயிற்சி எடுத்துக் கொண்டு அவன் ஒரு வில்லாளி ஆகிறான் .எங்கே அர்ஜுனனுக்கு போட்டியாக வந்து எதிரில் நின்று விடுவானோ என்ற பயத்தில் அர்ஜுனன் துரோணரின் தயவை நாட துரோணர் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் ஏகலைவனின் கட்டை விரலை குரு தட்சணையாக கேட்கிறார். கேட்ட அடுத்த நிமிடம் ஏகலைவன் தனது கட்டை விரலை வெட்டிக் கொடுத்து விட்டான் . ஆகவே இந்த இடத்தில் ஒரு காட்டுவாசியான ஏகலைவன் உயர்ந்து நிற்கிறான். ஆனால் வேதம் கற்ற துரோணர் தாழ்ந்து போய்விட்டார் இது அந்தக் கால மனுநீதி தர்மம் போகட்டும். போரில் ஆவது அவர் மிகவும் வீரத்தோடு போரிட்டாரா என்றால் அதுவும் இல்லை.13 ஆம் நாள் போரில் அவரால் அர்ஜுனன் மகன் அபிமன்யுவை வெல்ல முடியவில்லை .ஆகவே கூட்டுச்சதி செய்து துரியோதனன் கும்பல் ஒரு ச சிறுவனை எதிர்த்து எல்லோரும் ஒரே சமயத்தில் போரிடும் போது அதற்கு உதவியவர் துரோணர். அவர் எய்த கனையால் அபிமன்யு வின் கத்தி உடைந்தது .தரையில் நிராயுத பணியாக நின்ற அபிமன்யு துரியோதனா கும்பல் அத்தனையும் ஒன்று சேர்ந்து கொன்றார்கள். இது அந்த பாலகன் அபிமன்யுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் .அங்கே போர் தர்மத்தை கொஞ்சம் கூட கடைப்பிடிக்கவில்லை அதற்கு முக்கிய காரணம் துரோணர். இதைத் தவிர பாஞ்சாலியை சபையில் துயில் உரிந்த போது இருந்த பெரியவர்களில் இவரும் ஒருவர் ஆனால் இவரும் எந்த விதமான தர்மத்தையோ அறிவுரைகளையோ கௌரவர்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை .ஒரு அறவோனாக இருப்பவன் தர்ம நியாயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். இவர் ராஜ்யத்திற்கு கட்டுப்பட்டவர் என்ற காரணத்தால் தலை கவிழ்ந்ததார். தர்மமும் தலை கவிழ்ந்தது .ஆகவே வெல்ல முடியாத வீரனாக துரோணரை நினைத்து இருந்தார். அவரை பழி வாங்குவதற்காக துருபதன் ஒரு மகனைப் பெற்றான் அவனாலே துரோணருக்கு கடைசியில் முடிவு வந்தது. ஆகவே மகாபாரதத்தில் பழிக்கு பழி என்ற மோசமான ஒரு காரியத்தை ஆரம்பித்து வைத்த துரோணருக்கு இது சரியான முடிவுதான். மேலும் தான் பாசத்தை கொட்டி வளர்த்த அஸ்வத்தாமனும் தகுந்த வழியில் நல்ல வழியில் செல்லவில்லை. அவனும் தர்மம் தவறி நடந்தவனே. தந்தை எந்த வழியோ அதே வழியே அசுவத்தாமனுக்கும் ஏற்பட்டது. ஆகவே அறவோர் என்பவர்கள் தர்மம் தாழாது நடக்க வேண்டும். இதுவே துரோணரின் மூலமாக மகாபாரதத்தில் நமக்கு சொல்லப்படும் நீதியாக நான் கருதுகிறேன். எனக்கு வாழ்க்கையில் நிறைய பிராமண நண்பர்கள் உண்டு. எனது பள்ளிப்பருவம் முதல் தனது இறுதிக்காலம்வரை என்னுடன் நட்புடன் இருந்த ஜெ.கிருஷ்ணசாமி, வரதராஜன் முக்கியமாக எனது கல்லூரிபடிப்பில் நேர்வழி காட்டி என்னை நல்ல நிலைக்கு திருப்பிய ராஜாராமன், எனக்கு இன்றுவரை ஒரு inspiration ஆக இருக்கும் அவர் எனக்கு துரோணர்தான். அவர்களுக்கு என் நன்றிகள்.
Comments
Post a Comment