ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும், பகுதி 80, விதுரன்

மகாபாரத கதையில் விதுரன் தான் ஒரு அருமையான கதாபாத்திரம். பராசர முனிவருக்கும் அரண்மனையில் வேலை பார்க்கும் தாசி பெண்ணுக்கும் பிறந்தவராக இருந்ததால் அவருக்கு அரசு உரிமை இல்லாமல் போனது. இல்லாவிட்டால் அவரும் அந்த ராஜ்யத்தின் உரிமையை கோரி இருக்க முடியும். ஒரு சிப்பியின் வயிற்றில் பிறந்த முத்து ஆவார் விதுரன்.யாரும் பிறப்பினால் உயர்வடைவதில்லை அதே போல் தாழ்வும் அடைவதில்லை என்பதற்கு ஒரு உதாரணம் விதுரன். தாசியின் வயிற்றில் பிறந்து இருந்தாலும் கல்வி கேள்வியில் சிறந்தவராகவும் ஒழுக்க சீலனாகவும் மன்னனுக்கே அரசவைக்கு நீதி சொல்லும் நீதிமானாகவும் இருந்தவர். அப்படிப்பட்ட விதுரன். ஆனால் எவ்விதமான ஆசைகளுக்கும் உட்படாதவர். விதுரன் கல்வி கேள்விகளில் சிறந்தவர் நிறைய அஸ்திர பயிற்சி பெற்றவர். திருதராஷ்டிரன் சபையில் அவரே மதி மந்திரி. மன்னனுக்கு விதுரன் மீது அளவில்லாத அன்பு உண்டு. பெரும்பாலான சமயங்களில் மன்னன் விதுரனை கேட்டு தான் நடப்பதும் உண்டு. கேட்பாரை ஒழிய அதன்படி நடக்கிறார என்று சந்தேகம். ஏனென்றால் விதுரன்  கூறிய அறிவுரைகள் அத்தனையும் கடலில் பெய்த மழையானது. துரியோதனன் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் துரியோதனன் எடுக்கும் தவறான முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் திருதாஷ்டரனின் கண்பார்வை போனது போல அவனது பாசம் மேலும் அவனது கண்ணை மறைத்தது. இருந்தபோதிலும் விதுரன் தைரியமாக தான் சொல்ல வேண்டியதை சொல்லுவார் அப்படிப்பட்ட ஒரு குணாதிசயம் மிக்கவர் . விதுரன் பாண்டவர்களுக்கு சபையில்நேர்ந்த அநீதியை தட்டி கேட்டவர் சூதாட்டம் நடத்தி ஒரு நாட்டை வெல்ல கூடாது என்ற என்று சபையில் உரைத்தவர் மேலும் பாஞ்சாலிக்கு அவையில் நடந்த அவமானத்தை தட்டி கேட்டவர். எதற்கும் நீதியைச் சொல்ல அவர் தயங்கியதே இல்லை. பலமுறை துரியோதனனால் நீ ஒரு தாசி மகன் என்று ஏளனப்படுத்தியும் கூட விதுரன் எந்த நேரத்தில் கலங்கியதே இல்லை. குல உயர்ச்சி தாழ்ச்சி சொல்வது பாவம் என்று அறியாதவன். ஏனென்றால் மன்னனுக்கு அவன் பேரில் மிக்க மரியாதை உண்டு. கண்ணில்லாத மன்னனை காப்பாற்ற வேண்டியது தனது கடமை என்று கடைசி வரையில் வாழ்ந்தவர் மகாபாரத போரில் மன்னனோடு சேர்ந்து அவரும் பங்கேற்கவில்லை. கடைசியாக திருதராட்டிரன் மன்னனோடு சேர்ந்து வனவாசம் சென்றவர் .கிருஷ்ணன் மீது அளவில்லாத பக்தி கொண்டவர் அதனால் தான் பாண்டவர்களின் தூதனாக கிருஷ்ணர் வந்தபோது அரண்மனையில் தங்காமல் விதுரனின் எளிய  குடிசையில் தங்கினார் .மகாபாரத்தில் விதுர நீதி என்ற பகுதியே உண்டு .அத்தனை பெருமை வாய்ந்தவர் விதுரன். என்றும் அவர் புகழ் நிலைக்கட்டும் .

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்