ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும் , பகுதி 81, திருதராட்டினன், காந்தாரி
திருதராட்டினன் குருடனாகப் பிறந்து விட்டதால் அவனது தம்பி பாண்டுவுக்கு மன்னர் பதவிகொடுத்து விட்டார்கள். அதனால் மனமடைந்த திருதராஷ்டிரன் சிறிது காலங்களுக்கு பிறகு பாண்டு மனம் வெறுத்து தனது மனைவியோடு காட்டுக்குச் சென்ற பிறகு திருதராஷ்டிரன் அஸ்தினாபுரத்திற்கு மன்னரானார் . பாண்டுவின் மக்கள் திரும்பவும் அஸ்தினாபுரம் வந்தபோது அவர்களில் தர்மனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார்கள். இதெல்லாம் நண்பர்களுக்கு தெரிந்த கதைதான். இருந்தபோதிலும் தனது மகன் துரியோதனன் மீது அளவற்ற கண்மூடித்தனமான ஒரு பாசம் வைத்திருந்ததால் தனது மகனுக்கு இளவரசு பட்டம் கட்ட முடியவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்தான். பின்பு பாண்டவர்கள் காட்டுக்குச் சென்ற பிறகு அவர்களை துரியோதனன் கும்பல் ஒழித்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு தனது மகனுக்கு இளவரசர் பட்டம் சூட்டி மகிழ்ந்தான். மேலும் திருதராட்டிடன் மகாபாரத கதையில் எந்தவிதமான குற்றங்களுக்கும் நேரடியாக ஆளாகவில்லை என்றாலும் பிள்ளை பாசத்தால் கண்மூடித்தனமாக தனது மகன் துரியோதனனை ஆதரித்தார். ஆகவே மன்னனும் குற்றம் செய்தவனாகவே ஆகிறான். பாண்டவர்களை வெறுக்க வில்லை என்றாலும் அவர்களுக்கு எதிராக நின்ற தனது மகன் துரியோதனன் பக்கமே நின்றான் திருதராட்டிர மன்னன். அதுவே அந்த பிள்ளை பாசமே அவனுக்கு துன்பத்தை ஏற்படுத்தியது .இதைத் தவிர மன்னன் என்ற பெயரில் இருந்தானே ஒழிய மகாபாரதத்தில் அவனுக்கு வேறு எந்த பங்கும் இல்லை. அவனை மணந்த காந்தார தேசத்து இளவரசி காந்தாரி தனது கணவனுக்கு கண் தெரியாது என்ற காரணத்தால் தனக்கும் கண்பார்வை வேண்டாம் என்று சொன்ன பெருந்தகை காந்தாரி. தன் கணவனுக்கு கிடைக்காத பார்வை தனக்கும் வேண்டாம் என்று தனது கண்களின் பார்வையை மறைக்க துணியை கட்டிக்கொண்டாள். மகாபாரத கதையை ஏன் இப்படி அமைத்தார்கள் என்று தெரியவில்லை. கண்ணில்லாத கணவனுக்கு தனது கண்ணோடு கண்ணுக்கு கண்ணாக அவனுக்கு அருகில் இருந்து அவள் ஏன் உதவவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை .மேலும் காந்தாரி மகாபாரதத்தில் மன்னனைப்போல் தனது மக்கள் மீது அளவற்ற அன்பு வைக்கவில்லை .நிதானமாகவே இருந்தாள்.அது போல் அவளுக்கு உதவியாக இருந்த குந்தி தேவியின் உடனும் பாண்டவர்களிடமும் அவளுக்கு எந்தவிதமான விரோதமும் ஏற்படவில்லை. தன்னிலை மறக்காமல் இருந்தாள். ஆனால் மகாபாரத போரில் தனது பிள்ளைகள் 100 பேரும் இறந்ததற்கு காரணம் என்று சொல்லி அவள் பாண்டவர்களை சபிக்கவில்லை ஆனால் இதற்கு மூல காரணமாக இருந்த கிருஷ்ணனை சபித்தாள். என் குலம் அழிந்தது போலவே உன் குலமும் அழியட்டும் என்று அதுபோல் பிற்காலத்தில் யாதவ குலமும் அழிந்தது .இது ஒன்றுதான் காந்தாரிக்கு பெருமை கொடுக்கும் விஷயம் மற்றபடி மகாபாரத கதையில் இந்த இரண்டு பாத்திரங்களும் இடையிலே வந்துகொண்டே இருப்பார்க ளே ஒழிய வேறு எந்த விதமான முக்கிய விஷயங்கள் எதுவும் இவர்கள் காரணமாக அமையவில்லை. காந்தாரி தனது கண்ணை கட்டிக்கொண்டு காந்தார தேசத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு வந்ததால் அவளது சகோதரன் சகுனியும் அவளோடு வந்து அஸ்தினாபுரத்தில் தங்கி விட்டான் .அதன் பிறகு தான் அஸ்தினாபுரத்திற்கு சனி பிடித்தது. ஏற்கனவே இருந்த வஞ்சகங்களோடு சேர்ந்து சகுனியும் போட்ட திட்டத்தால் அஸ்தினாபுரம் கலகலத்து போனது எப்படி பிறகு பார்ப்போம்
Comments
Post a Comment