ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும் பகுதி 82, கவுரவர்களும், சகுனியும்

மன அமைதி இழந்த பாண்டு மகாராஜா தன் மனைவியருடன் காட்டுக்குச் செல்ல கண் இல்லாத திருதராட்டினன் மன்னரானார். அதன்பிறகு அவரது மகன் துரியோதனனுக்கு இளவரசு பட்டம் சூட்டிவிட்டார். பின்பு பாண்டு இறந்த பிறகு அவரது மக்கள் 5 பேரும் அஸ்தினாபுரம் திரும்பி வந்த பிறகு மூத்தவரான தர்மனுக்கு இளவரசு பட்டம் சூட்டிவிட்டார்கள்.  பின்பு கௌரவர்களும் பாண்டவர்களும் துரியோதனன் கோஷ்டியாரும் துரோணரிடம் குருகுல வாசம் பயில சென்று விட்டனர். ஏற்கனவே இளவரசு பட்டம் இழந்த துரியோதனனுக்கு தர்மரின் மேலும் பாண்டவர்கள் மேலும் ஒரு வெறுப்பு இருந்து கொண்டே இருந்தது இதைத்தவிர குரு குலவாசத்தில் பாண்டவர்கள் நன்றாக பயிற்சி பெற்றனர். குறிப்பாக அர்ஜுனனின் பயிற்சி துரியோதனனுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆகவே பாண்டவர்களை எப்படியாவது தீர்த்துக்கட்டவே அப்போது இருந்தே துரியோதனன் திட்டமிட ஆரம்பித்து விட்டான். பீமனைக் கொல்ல முயற்சி செய்தான்.ஆனால் எப்படியோ தப்பி விட்டான். இதன்பிறகு குருகுல வாசம் முடிந்து அவர்கள் மீண்டும் அஸ்தினாபுரத்துக்கு திரும்பினார். அப்போது இளவரசு பட்டம் சூட்டிய தர்மருக்கு வாரணா வதம் என்ற இடத்தில் வரவேற்பு கொடுப்பதாக சொல்லி பாண்டவர்களை அங்கு அனுப்பி அரக்குமாளிகையில் தங்க வைத்து அவர்களை கொல்ல முடிவு செய்தான் .ஆனால் அதிலிருந்து தப்பிய பாண்டவர்கள் எப்படியோ பாஞ்சால தேசத்திற்கு சென்று அங்கு திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். அந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த துரியோதனன் மற்றும் பலர் தோல்வி அடைந்தனர். ஆனால் அர்ஜுனன் எல்லா போட்டிகளிலும் வென்று திரௌபதியை கைப்பிடித்தான். பின்பு பாண்டவர்கள் ஐந்து பேரும் திரௌபதி மணந்தனர். இவன் அர்ஜுனன் தான் என்று தெரிந்த பின்னர் பாண்டவர்கள் மீது துரியோதனனுக்கு குரோதம் வளர்ந்து கொண்டே இருந்தது. பாண்டவர்கள் மீண்டும் திரும்பி வந்த பிறகு அஸ்தினாபுரம் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து பாண்டவர்களுக்கு ஒரு பகுதியை கொடுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னதின் பேரில் ஒரு காட்டுப் பகுதியான காண்டவனம் பகுதியை பாண்டவர்களுக்கு ஒதுக்கினார்கள். பாண்டவர்கள் தனது திறமையாலும் தனது நண்பன் கிருஷ்ணரின் உதவியாளும் காடுகளை அழித்து மேம்படுத்தி சிறந்த நாட்டை உருவாக்கினார். அதில் விண்ணவரும் வானவரும் போற்றக்கூடிய அளவு ஒரு அற்புதமான மாளிகையையும் அமைத்தனர் .அந்த மாளிகை அமைத்தவுடன் அதை காண வரும்படி அஸ்தினாபுரத்துக்கு அழைப்பு விடுத்தார்கள் .அப்போது திரௌபதியை பார்க்கும் ஆவலில் துரியோதனாதிகள் இந்திர பிரஸ்தம் நகருக்கு வந்தனர் .அப்போது அந்த மயன் கட்டிய மாளிகையை பார்த்து மயங்கி விட்டனர். எந்த இடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அந்த மாளிகையை அமைத்திருந்தார்கள். ஒரு இடத்தில் கதவு இருப்பது போல இருக்கும் ஆனால் கதவு அந்த இடத்தில் இருக்காது .கதவு இல்லாதது போல தெரியும் ஆனால் அந்த இடத்தில் கதவு இருக்கும் .ஒரு இடத்தில் தரையில் தண்ணீர் கொட்டி இருப்பது போல பார்த்த துரியோதனன் தனது வஸ்திரங்களை காலில் படாமல் மேலே தூக்கிக் கொண்டு நடந்தான். ஆனால் அந்த இடத்தில் தண்ணீர் இல்லை .அடுத்த இடத்திற்குச் சென்றபோது அங்கு தண்ணீர் இல்லாதது போலவே இருந்தது. ஆனால் அது ஒரு தண்ணீர் நிரம்பிய குளமாக இருந்தது . அது தெரியாமல் துரியோதனன் அந்த குளத்தில் தவறி விழுந்து விட்டான். இதை மேன் மாடியில் இருந்து பார்த்த திரோபதி களுக் என்று சிரித்தாள் .அப்போது அவள்  சிரித்தது துரியோதனனுக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவள் சிரித்தது மட்டுமில்லாமல், மேலும் மாமனுக்கு தான் கண் தெரியாது என்று நினைத்தேன் ஆனால் அவரது மகனுக்கும் கண் தெரியாது என்று இப்போதுதான் தெரிகிறது என்று கேலியாக பேசினாள்.அவள் பேசிய அந்த பேச்சும்  அந்த ஏளனசிரிப்பும் தன்னை அவமானப்படுத்திவிட்டாள் என்ற அந்த அவமான உணர்ச்சியும் துரியோதனால் தாங்க முடியவில்லை .மீண்டும் அஸ்தினாபுரத்துக்கு திரும்பியவுடன் அவனுக்கு தான் இந்திரபிரஸ்த மாளிகையில் பட்ட அவமானமே அவனை சுற்றி சுற்றி வந்தது. இதற்கு ஒரே வழி அவர்களை தீர்த்து கட்டுவது தான் என்று முடிவு செய்து விட்டார்கள் துரியோதனாதிபதிகள். அப்போதுதான் சகுனி ஒரு யோசனை சொன்னான் .சகுனி காந்தாரியின் சகோதரன் கண்ணில்லாத காந்தாரியை அஸ்தினாபுரம் அனுப்பிவிட்டு அவனால் தனது ராஜ்யத்தில் காந்தார தேசத்தில் இருக்க முடியாமல் காந்தாரிக்கு   துணையாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் அஸ்தினாபுரத்தில் தங்கி விட்டான். அவனுக்கு எப்படியாவது துரியோதனனுக்கு முடிசூட்டி விட வேண்டும் என்ற எண்ணத்திலும் அதற்கு பாண்டவர்களை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதிலும் அவன் யோசனை செய்து கொண்டே இருந்தான் .ஆகவே துரியோதனனின் துயரத்தை போக்க ஒரு வழி கண்டுபிடித்தான். அவர்கள் போர் செய்து பாண்டவர்களை வீழ்த்த முடியாது .ஆனால் அதற்கு வேறு ஒரு வழி இருக்கிறது என்று அவன் போட்ட திட்டம் தான் மகாபாரத கதையின் மிகப்பெரிய திருப்பம். என்ன அது அடுத்து பார்ப்போம். சகுனியின் சூதாட்டம்.

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்