ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும், பகுதி 83, சூதாட்டசருக்கம்.

ஆகவே சகுனியின் யோசனைப்படி பாண்டவர்களை போரில் வெல்ல முடியாது. சூதினால் தான் வெல்ல முடியும் என்று முடிவு செய்தார்கள். சூது விளையாடுவதில் சகுனி கெட்டிக்காரன் என்பது எல்லோருக்கும் தெரியும் .அவரின் மனதில் நினைத்ததை அந்த சூதுக்காய்களை வைத்துக்கொண்டு செய்துவிடுவான். அவன் சொல்படி கேட்கும் அந்த பகடைகள். ஆகவே சூதினால்  பாண்டவர்களை வெல்வது என்று முடிவு செய்துவிட்டு மன்னனிடம் இதை தெரிவித்து விட்டு , தருமனுக்கு ஒரு ஓலை அனுப்பினார்கள். அஸ்தினாபுரத்துக்கு வந்து நீங்கள் விருந்துண்டு எங்களோடு சூதாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .அந்த காலத்தில் ஒரு மன்னன் சூதாட்டத்திற்கு அழைத்தாலோ அல்லது போர்க்களத்திற்கு அழைத்தாலோ போவதுதான் கடமை என்று அப்போது ஒரு வழக்கம் இருந்தது. அதற்கு தருமனும் அதற்கு ஒப்புக்கொண்டான் .குறித்த நாளில் அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தார்கள். விருந்து முடிந்த பின்னர் சூதாட்டம் களம் நோக்கி சென்றார்கள். அப்போது பாண்டவர்கள் ஒருபுறமும் கௌரவர்கள் ஒரு புறமும் இருந்தார்கள் .கௌரவர்களுக்கு துணையாக சகுனி இருந்தான். பகடை ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டது. காய்களை உருட்டினார்கள் .தர்மமும் சேர்ந்து உருண்டது. முதலில் பொருட்களை இழந்தான் பிறகு ஒவ்வொன்றாக எழுந்தான் .தனது நாடு நகரம் இழந்தான்.  பிறகு தனது தம்பிகளை ஒவ்வொருவராக சூதாட்டத்தில் எழுந்தான் .அதன் பிறகு அவனிடம் வேறொன்றும் இல்லை .அப்போது இனி இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்றான் .ஆனால் கௌரவர்கள் விடவில்லை உன்னுடைய மனைவி திரௌபதி இருக்கிறாளே அவளையும் வைத்து ஆடு என்று என்று கேட்டுக் கொண்டார்கள். தர்மர் ஒப்புக்கொண்டு திரவுபதியை சூதாட்டத்தில் பணயமாக வைத்து அவளையும் ஆடி இழந்தான். இதையெல்லாம் முதலில் வேடிக்கை என்று நினைத்தார்கள் .ஆனால் ஆடி முடிந்த பிறகு எல்லோரையும்  பாண்டவர்களை சபையில் நிற்க வைத்தார்கள் .இனி நீங்கள் எல்லோரும் எனக்கு அடிமை .ஆகவே பாஞ்சாலியை எங்களுக்கு தொண்டு செய்ய அழைத்து வா என்று துரியோதனனின் தம்பி துச்சாதனனை அனுப்பினான். அவள் ஒரு தனி அறையில் இருந்தவ்ளை வர மறுத்தவளை அவளது முடியை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து சபையை நடுவில் நிறுத்தினான் .அப்போது அவள் கேட்டாள். தர்மம் தெரிந்தவர்களே, எப்படி தர்மர் என்னை வைத்து ஆட முடியும். தன்னை வைத்து ஆடி  இழந்த பிறகு என்னை எப்படி அவன் சூதாட்டத்தில் ஆடி பணயம் வைத்து என்னை இழப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை .சரி போகட்டும் அப்படியே இருந்தாலும் தர்மம் தெரிந்த பெரியவர்கள் நிறைந்த சபையில் ஒரு பெண்ணை இவ்வாறு சூதாடி நிற்க வைத்து அவமானப்படுத்துவது முறையா, என்று முறையிட்டாள்.அவளது முறையிட்டை கேட்காமல் துச்சாதனன் அவளது ஆடையை பிடித்து இழுத்து நீ இந்த சூதாட்டம் அரங்கில் எங்களுக்கு தாசிப்பெண். ஆகவே உனக்கு ஆடை இருக்கக்கூடாது என்று அவரது ஆடையை களைய முற்பட்டான். அதிர்ஷ்டவசமாக அவள் அந்த ஆபத்திலிருந்து தப்பினாள் கிருஷ்ணரின் உதவியோடு .அதன் பிறகு அந்த சபையில் இருந்த கர்ணன் ஏளனமாக பேசி நீ ஏற்கனவே 5 பேருக்கும் மனைவியாவாள் அதனால் உனக்கு ஒன்றும் நஷ்டமில்லை ஆறாவதாக என்னையும் சேர்த்துக் கொள் என்று ஏளனமாக பேசினான். துரியோதனன் தனது தொடையை தட்டி காட்டி அங்கு வந்து அமருமாறு பாஞ்சாலியை வம்பு செய்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விதுரன் இவ்வாறு பாண்டவர்கள் இழிவுபடுத்துவதும் திரௌபதியை அவமானப்படுத்துவதும் தவறு என்று  சுட்டிக்காட்டியும் அவர்கள் எதையும் ஏற்கவில்லை. பீஷ்மர் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். கண்ணில்லாத மன்னனுக்கும் காந்தாரிக்கும்   அவர்களுக்கு சபையில் நடப்பதை அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருந்தான் விதுரன் .மிகவும் சங்கடமான சூழ்நிலையில் அவர்களுக்கு ஒரு வரம் கொடுத்தான் மன்னன். பாஞ்சாலியை நோக்கி அம்மா இங்கு நடந்தது எல்லாம் மறந்து விடு .இனி இது போல் எதுவும் நடக்காது. நீ ஏதாவது வரம் கேளு இரண்டு வரம் கேளு என்று அவன் பெருந்தன்மையாக கேட்டான். முதல்வரத்தின் மூலம் தான் தனது கணவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதன்படி எல்லோரையும் தனது நாட்டுக்கு திருப்பி கொடுத்து தங்களை வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டாள்.அவள் கேட்டபடியே மன்னனும் நாட்டையும் திருப்பிக் கொடுத்து அவர்களையும் விடுவித்தான் .இருந்தபோதிலும் விதி விளையாடியது .போனால் போகட்டும் இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு  கொடுக்கிறேன் என்று சொல்லி மறுபடியும் சூதாட்டத்திற்கு தருமனை அழைத்தான் .தருமன் தடுமாறிப் போனான். சகுனிக்கு ஏற்கனவே தெரியும் .தருமனுக்கு சூதாட்டத்தில் மிகவும் விருப்பம் என்று, அவன் யார் சொல்லியும் இந்த விஷயத்தில் கேட்க மாட்டான் என்பதும் தெரியும். சூதாட்டத்தில் மிக்க விருப்பம் கொண்ட தர்மன் தர்மத்தை மறந்த தர்மன் கண்களை சூதாட்ட ஆசை மறைத்து விட்டது. மீண்டும் சூதாடி தோற்றான் .அதன் விளைவாக நாட்டை திரும்ப பெற வேண்டுமென்றால் 12 ஆண்டுகள் வனவாசம்  செல்ல வேண்டும் என்றும் ஓராண்டு எங்காவது மறைந்து வாழ வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு தர்மன் ஒப்புக்கொண்டான். ஒரு ஆண்டில் அவர்களை கண்டுபிடித்து விட்டால் அவர்கள் மீண்டும் காட்டுக்குச் செல்ல வேண்டும் இதுவே நிபந்தனைகள். அப்போது வெளியில் செல்லும்போது பீமன் ஒரு பயங்கர சபதம் எடுத்தான் இந்த சூதாட்டத்தினால் எங்கள் நாடு நகரத்தை எழுந்து எங்களை அவமானப்படுத்திய உங்களை 13 ஆண்டுகள் கழித்து உங்கள் எல்லோரையும் அழிப்பேன் என்று சபதம் செய்தான் .அத்தோடு அவன் செய்த சபதத்தில் பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் வரிகளில் சொன்னால் பொருத்தமாக இருக்கும் .பாரதியார் சொன்னது ஸ்ர சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிரண்டு சூது பனையம் என்று அங்க அங்கோர் தொண்டச்சி போனதில்லை, ஏது கருதி வைத்தாய் அண்ணே யாரை பணயம் வைத்தாய், பூமி அரசு எல்லாம் கண்டே போற்ற விளங்குகிறான்  சண்டன பாஞ்சாலன் , அவன் சுடர் மகளை அண்ணே ஆடி இழந்து விட்டாய் தவறு செய்துவிட்டாய் அண்ணே தர்மம் கொன்று விட்டாய் என்று சொல்லிவிட்டு,அது மட்டும் அல்ல அர்ஜுனனை பார்த்து இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா கதிரை வைத்து இழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம் என்று தர்மனை நோக்கியே கடிந்து கொண்டான். ஒருவழியாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள் .ஆனால் அந்த இடத்தில் திரௌபதியானவள் தனது கூந்தலை துரியோதனன் தொட்டு இழுத்ததனால் அவிழ்ந்த அந்த கூந்தலை முடிக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள். அவள் செய்த சபதமே இந்த மகாபாரத போருக்கு அடித்தளம் அமைத்தது.  அவள் துரியோதனன் பார்த்து கூறினாள், எந்தத் தொடையில் என்னை வந்து உட்கார சொல்கிறாயோ சொன்னாயோ அந்த தொடைகளை கிழித்தெறிந்து  கொல்வேன் மேலும் எந்த கைகளால் என்னை தொட்டு இழுத்து வந்தானோ துச்சாதனன் அவனுடைய ரத்தத்தை போரில் எடுத்து எனது முடியில் தடவும்போதுதான் இந்த முடியை நான் மீண்டும் முடிவேன் என்று சபதமிட்டாள். அவள் போட்ட சபதம் அங்கு இருந்த சபையில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியது. எல்லோருக்கும் தெரியும், சபையில் ஒருவன் சூதாடுவது என்றால் ஒரு மன்னன் நேருக்கு நேர் இன்னொரு மன்னனிடம்  சூதாட வேண்டும் நேரடியாக .ஆனால் இது வஞ்சக சூதாட்டம் .இந்த சூதாட்டத்தில் துரியோதனன் தான் காய் உருட்டி இருக்க வேண்டும் .ஆனால் அவனுக்கு பதிலாக சகுனி காயை உருட்டினான் .இதை எல்லாம் அறிந்த தர்மன் இதை ஏற்றுக் கொண்டிருக்கவே கூடாது .எல்லாம் தெரிந்த தர்மம் ஏன் இந்த விஷயத்தில் தவறிவிட்டான் காரணம் அவனுக்கு சூதாட்டத்தில் ஒரு மயக்கம் .யார் உருட்டினால் என்ன நாமும் சூதாடுவதில் கெட்டிக்காரன் தானே என்ற மமதை. அதனால் அவன் யாரையும் துணைக்கு அழைக்கவில்லை. எப்போதும் ஏதாவது பிரச்சினைகள் என்றால் தனது நண்பன் கிருஷ்ணரை துணைக்கு அழைத்துக் கொள்வான் .ஆனால் சூதாடுவதற்காகவே தன்னை அஸ்தினாபுரத்துக்கு அழைக்கிறார்கள் என்ற விவரத்தை தர்மன் கிருஷ்ணருக்கு தெரிவிக்கவே இல்லை .அப்படி அவர் தெரிவித்து இருந்தால் கிருஷ்ணனும் அந்த இடத்தில் தர்மனுக்காக பதிலாக கிருஷ்ணர் காயை உருட்டி இருப்பார். கௌரவர்களையும் சேர்த்து உருட்டி இருப்பார் ..அந்த சம்பவம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகவே தருமனை தர்மம் தாழ்ந்த தர்மனாக  படைத்து விட்டார்கள்.  வாழ்க்கையில் மது மாது சூது இது மூன்றும் மனிதனை கெடுக்கும் ஒரு செயல்களாகும். இதில் மதுவும் மாதுவும் கூட ஒரு ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சூதாட்டம் என்பது மனித வாழ்வை மட்டும் அல்ல சுகபோகங்களையும் சேர்த்து சொத்து சுகங்களையும் இழந்து மானமிழந்து நடுத்தெருவில் தான் இருக்க வேண்டும் என்பது தர்மனுக்கு நள் மகாராஜாவின் கதையிலிருந்து நன்றாக தெரியும். ந நளமகாராஜாவும் இதே போல தான் சூதாடி தனது நாட்டை இழந்து மனைவியை இழந்து குழந்தைகளை இழந்து காட்டில்  இடுப்பில் கட்டிக் கொள்ள கூட ஒரு துணி இல்லாத நிலையில் அவ்வளவு கேவலமாக இருந்த விஷயங்கள் எல்லாம் தருமனுக்கு நன்றாக தெரிந்த போதும் அவன் தர்மத்தை ஏற்றுக் கொள்ளாமல் விதி அவனது கண்ணை மறைத்தது .விதி என்றால் தர்மனின் செயலே. இதற்கு காரணம் தர்மனின் முட்டாள் தனத்தினால் தான் இந்த சூதாட்டம் அவர்களுக்கு தோல்வியில் முடிந்தது .நன்று அதே நேரத்தில் ஒரு அக்கிரமக்காரர்களை அழிப்பதற்காக பாஞ்சாலி சபதத்தை ஏற்றுக்கொண்டு பாண்டவர்கள் அனைவரும் சபையை விட்டு வெளியேறினார்கள் அங்கே தர்மம் தலை குனிந்தது.சூது வென்றது. சபையில் கர்ணன் ஏன் அவ்வாறு பேனான். யார் அந்த கர்ணன். பார்ப்போம் அடுத்து

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்