ஈசி சேர், பகுதி 84, வெளிச்சம் பரவட்டும். மாவீரன் கர்ணன்

யார் இந்த கர்ணன் அஸ்தினாபுரத்தைஆட்சி செய்ய வேண்டிய உரிமை உள்ளவன். ஆனால் முறை தவறி பிறந்ததனால் அந்த வாய்ப்பை இழந்தவன். ஆமாம் ஒருமுறை குந்திதேவி துர்வாச முனிவருக்கு பணிவிடைகள் செய்ய போக அவர் மனம் மகிழ்ந்து குந்திதேவிக்கு ஒரு வரத்தை கொடுக்கிறார். அதன்படி அவள் இஷ்டப்பட்ட நேரத்தில் இஷ்ட தெய்வங்கள் அவளை அணுகி அவர்களின் தெய்வம்சம் பொருந்திய குழந்தைகளை கொடுப்பார்கள் என்று ஒரு வரம் கொடுத்தார். சிறுமியான குந்தி இதை விளையாட்டாக நினைத்து அதை சோதனை செய்ய நினைத்தாள். அதன் விளைவாக அவள் சூரியனை வேண்ட சூரிய பகவான் நேரில் தோன்றி அவளுக்கு ஒரு அற்புதமான குழந்தையை கொடுத்து விட்டார். பயந்து போன குந்தி திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுவிட்டாள் என்ற அபகீர்த்தி வந்துவிடும் என்று பயந்து இளவரசியான குந்தி அந்த கவசக் குண்டலங்களோடு தெய்வாம்சம் பொருந்திய அந்த குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விட்டு விட்டாள்.  அந்தப் பெட்டி அஸ்தினாபுரத்து தேரோட்டி அதிரதன் அருகில் நெருங்க அந்த பெட்டியை திறந்து பார்க்க அதில் உள்ள குழந்தையை கண்டு திகைக்கிறான். அவனுக்கும் குழந்தை இல்லாததால் அந்த குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கிறான் . இயற்கையிலேயே திறமை வாய்ந்த அந்தக் குழந்தை கர்ணன் என பெயர் எடுத்து சகல கலைகளையும் கற்றுக் கொள்கிறான். முக்கியமாக வில்வித்தையில் அவன் அபார நிபுணத்துவம் வாய்ந்தவனாக இருக்கிறான் .ஒரு சமயம் அஸ்தினாபுரத்தில் அரசகுமார் களுக்கு இடையே வில் போட்டி நடந்த போது அர்ஜுனன் அந்த போட்டியில் வென்று விடுகிறான். உடனே வில்வித்தையில் சிறந்த வீரன் அர்ஜுனன் தான் என்று பட்டம் கொடுக்கும் வேளையில் கர்ணன் இடையில் புகுந்து என்னை வென்ற பிறகு அவனுக்கு பட்டம் சூட்டுங்கள் என வேண்டுகிறான். ஆனால் அந்த  சபையில் இருந்தவர்கள் இது ராஜகுமாரர்களுக்காக ஏற்பட்ட போட்டி இதில் தேரோட்டி மகனுக்கான இடமல்ல .ஆகவே,  நீ இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று அவனை தடுத்து விடுகிறார்கள். எந்த நேரத்தில் தனக்கு ஒரு துணை தேவைப்படும் என்று இருந்த துரியோதனன் காலியாக இருந்த அவனது எல்லைக்கு உட்பட்ட அங்க தேசத்திற்கு உடனே அவனை மன்னன் ஆக்கி விடுகிறான். இப்போது கர்ணன் ஒரு மன்னன் என்ற முறையில் கலந்து கொள்ள முடியும் .ஆனால் நேரம் கடந்த காரணம் காட்டி அதில் கலந்து கொள்ள விடாமல் செய்து விடுகிறார்கள் .அப்போது கர்ணன் துரியோதனனின் செயலை நினைத்து மகிழ்ச்சி அடைகிறான். அதன் விளைவாக துரியோதனனுக்கு நன்றி கடனாக வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் ஒரு சபதம் செய்து கொள்கிறான். நேற்று வரை தேரோட்டிய மகன் என்று இழிவாக பேசிய மக்கள் இன்று அங்க தேசத்து மன்னன் என்று சொல்லும் அளவுக்கு தன்னை உயர்த்திய துரியோதனனை உயிருக்கு உயிரான நண்பனாக நினைத்துக் கொள்கிறான் .அந்த நண்பனுக்காக இறுதிவரை போராடுவது இறுதிவரை துணையாக இருப்பது என்று சபதம் செய்து கொள்கிறான். துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் நட்பு மேலும் மேலும் வலுவடைகிறது. துரியோதனனின் முகம் வாடினால் அவனுக்கு என்ன தேவை என்று அறிந்து அதை செய்ய தயாராக இருக்கிறான் கர்ணன். எல்லா வகையிலும் துரியோதனன் பக்கம் அவன் இருக்கிறான். அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையில் எந்த பகையும் இல்லை என்றாலும் துரியோதனனின் பகைவர்கள் என் பகைவர்கள் என்ற எண்ணத்தில் செயல்படுகிறான். திரௌபதியின் சுயம்வரத்திலும் கலந்து கொள்கிறான் ஆனாலும் தோல்வி அடைகிறான். இருந்தபோதிலும் அவனுக்கும் அர்ஜுனனுக்கும் எந்த விதமான நேரடியான பகை இல்லை .காலம் உருண்டது அப்போதுதான் சூதாட்டத்தில் பாஞ்சாலியை பணயம் வைத்து இழந்த பிறகு மற்றவர்கள் ஏளனம் பேசிய போது இவன் அதையும் தாண்டி ஒரு படி மேலாகச் சென்று என்னையும் மணந்து கொள் உனக்கு ஏற்கனவே ஐந்து கணவர்கள் இருக்கிறார்களே இதில் என்ன வெட்கம் என்று அவளை ஏளனமாக பேசுகிறான். பாஞ்சாலியை இழிவு படுத்தியவர்கள் கர்ணனும் ஒருவனாகிறான். கர்ணன் மிகச்சிறந்த வில்லாளி. ஆனாலும் அவனால் அர்ஜுனனை வெல்லும் அளவுக்கு அவனுக்கு பக்குவம் இல்லை என்று நினைக்கிறான். இருவருமே தெய்வாம்சம் பொருந்திய மிகச் சிறந்த வீரர்களாக இருந்த போதிலும் அர்ஜுனன் அளவுக்கு தான் அந்த கலையை கற்றுக் கொள்ளவில்லை என்ற தயக்கம் கர்ணனுக்கு இருக்கிறது. அதன் விளைவாக அவன் சில வித்தைகளை பரசுராமரிடம் சென்று கற்றுக் கொள்ள நினைக்கிறான். ஆனால் பரசுராமர் அந்தணர்களுக்கு மட்டுமே வில் பயிற்சி கொடுப்பேன் சத்திரியர்களை ஒழிப்பேன் என்ற சபதத்தில் இருந்தவர் ஆதலால் கர்ணன் தான் ஒரு பிராமணன் என்று சொல்லி அவரிடம் பயிற்சி எடுக்கிறான். சிறந்த பயிற்சிகளையும் மேற்கொள்கிறான். அஸ்திரங்களில் மிகவும் உயர்வான பிரம்மாஸ்திரத்தை பரசுராமிடம் இருந்து கற்றுக் கொள்கிறான். குருவுக்கு வேண்டிய பணிவிடைகள் அத்தனையும் செய்கிறான். பரசுராமர் மகிழ்கிறார் .ஒரு சமயம் பரசுராமர் மதியத்தில் சற்று கண்ணயர்ந்த  போது கர்ணனின் மடியில் தலை வைத்து தூங்கி விடுகிறார் .அப்போது ஒரு ராட்சத வண்டு ரீங்காரமிடவே எங்கே தனது குருநாதருக்கு அந்த  வண்டு மூலமாக எதுவும் இன்னல் ஏற்பட்டு விடும் என்று கர்ணன் அந்த வண்டை விரட்ட அந்த வண்டு கர்ணனின் தொடையில் புகுந்து தொலைத்து மறுபக்கம் வருகிறது. ரத்தம் பீரிட்டு அடிக்கிறது. அவ்வளவு வலியையும் குருநாதரின் தூக்கம் கலைந்து விடுமோ என்ற காரணத்தால் தாங்கிக் கொள்கிறான். ரத்தத்தில் நனைந்த பரசுராமர் விழித்தெழுந்து இவ்வளவு ரத்தம் வெளியேறியும் நீ சற்றும் கலங்காமல் இருப்பதை பார்த்தால் நீ ஒரு பிராமணன் அல்ல என்று தெரிகிறது .அதே நேரத்தில் நீ ஒரு சத்திரியன் ஆக இருக்க வேண்டும் , உண்மையைச் சொல் என்று அவனை மிரட்ட கர்ணன் தான் ஒரு பிராமணன் அல்ல என்று ஒப்புக்கொள்கிறான் .ஆகவே இதனால் பரசுராமர் வெகுண்டு எந்தக் கலையை என்னிடம் பொய் சொல்லி கற்றுக் கொண்டாயோ அந்தக் கலை உனக்கு தேவையான போது அதை நீ மறந்து விடுவாய் என்று சாபம் விட்டு விடுகிறார். ஆகவே இந்த முயற்சியில் கர்ணன் தோல்வி அடைகிறான். பிற்காலத்தில் மகாபாரத போரில் கர்ணன் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் அவனுக்கு இந்த அஸ்திரம் மறந்துவிடுகிறது. கர்ணனின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் .மற்றபடி இதற்கு இணையான ஒரு சக்தி தனுசை அடைகிறான் இதுகுறித்து பாண்டவர்கள் கலக்கம் கொள்கிறார்கள் இதைத் தவிர கர்ணனுக்கு என்று சில பிரத்தியேகமான குணங்களும் உண்டு அவை என்னவென்று பார்க்கலாம்

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்