ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும், பகுதி 85, கொடைவள்ளல் கர்ணன்
கர்ணன் மாவீரன் மட்டுமல்ல மிகப்பெரும் கொடையாளி. கேட்டவர்களுக்கு கேட்ட உடனே கொடுக்கும் தன்மை அவனுக்கு உண்டு. தன் கையில் எது இருந்தாலும் அதைப்பற்றி யோசிக்காமல் உடனே கொடுத்து விடும் , தான தர்மம் செய்யும் வழக்கம் அவனுக்கு உண்டு. எதையும் யோசிக்கவே மாட்டான். அவனுடைய தானத்துக்கு ஒரு உதாரணமாக சொல்வார்கள். ஒரு முறை தங்க கிண்ணத்தில் எண்ணெய் வைத்துக் கொண்டு அவன் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது யாசகம் கேட்டு வந்த ஒரு பிராமணனுக்கு சற்றும் யோசிக்காமல் தனது அருகில் இருந்து இடதுகையால் அந்த தங்க கிண்ணத்தை தானமாக கொடுத்து விட்டான். பக்கத்தில் இருந்த மந்திரி நீங்கள் பெரிய கொடை வள்ளல் என்பது எனக்கு தெரியும் . இருந்தபோதிலும் நீங்கள் இடது கையால் அந்த தர்மத்தை செய்தது நியாயமா என்று கேட்டார் .அதற்கு கர்ணன் சொன்ன பதில். இருக்கலாம், ஆனால் இடது கையில் இருந்து வலது கையால் நான் எடுத்துக் கொடுப்பதற்குள் என் மனம் மாறிவிட்டால என்ன செய்வது. மாறுவது மனம். மனம் ஒரு குரங்கு. அதற்காகவே எனது இடது கை அருகில் இருந்த கிண்ணத்தை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டேன் என்றானாம். இன்னும் இவருடைய கொடைத்தன்மை பற்றி கிருஷ்ணரே ஒரு முறை தர்மரிடம் சொன்னாராம். தர்மா நீ தான் கொடுப்பதில் பெரிய தர்மன் என்று நினைக்காதே என்று சொல்லிவிட்டு கர்ணன் எப்படிப்பட்ட கொடையாளி என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் என்று சொன்னாராம். அப்போது அவர் தர்மரிடம் கேட்ட கேள்வி கடும் மழையாக பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் அடை மழையாக இருக்கிறது , ஆகவே ஒரு பிராமணன் வீட்டில் அடுப்பு பற்ற வைக்க விறகு இல்லை அப்படி இருக்கும் நிலையில் உன்னிடம் வந்து கேட்டால் என்ன செய்வாய் என்று கேட்டாராம். தர்மர், நான் அரண்மனையில் இருக்கும் போய் வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வேன். என்றாராம் .அப்போது கிருஷ்ணர் மறுமொழியாக சொன்னாராம், இதே கர்ணனிடம் கேட்டால் அவன் என்ன செய்தான் தெரியுமா சற்றும் யோசிக்காமல் தனது வீட்டின் முன்புறம் அந்த உத்தரத்தை அப்படியே பிடித்து கழற்றி அவன் கையில் ஒப்படைத்தானாம். இதுதான் உனக்கும் கர்ணனுக்கும் உள்ள வேறுபாடு என்று சொன்னாராம். அவ்வளவு தானத்திலும் கொடையிலும் அவ்வளவு உயர்ந்தவன் .ஏன் தன்னை உயிர் காக்கும், தன் உடன் பிறந்த கவச குண்டலங்களையே இந்திரனுக்கு தானமாக பரிசளித்தான் .அந்த தானம் தன் உயிரையும் போக்கும் என்று தெரிந்தும் மேலும் அது தனது எதிராளிக்கு உதவும் என்று தெரிந்தும் கவச குண்டலங்களை,தன்னுடன் ஒட்டி பிறந்த கவச குண்டலங்களை அறுத்தெடுத்து கொடுத்தான். அப்படிப்பட்ட கர்ணன். அது மட்டுமல்ல கர்ணனுக்கு சாகும் தருவாயில் அவன் செய்த தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்களே. அதுபோல் போர்க்களத்தில் அர்ஜுனன் அம்புகளால் அடிபட்டு விழுந்து கிடந்த நேரத்திலும் பிராமண வேடத்தில் வந்த கிருஷ்ணனுக்கு தனக்கு ஏற்பட்ட தான தர்ம புண்ணியங்கள் அத்தனையும் குருதியோடு எடுத்துக் கொடுத்தவன் கர்ணன் .ஆகவே கர்ணனுக்கு மிஞ்சிய கொடை இல்லை என்று பழமொழியே உண்டு .அப்படிப்பட்ட க கர்ணனை போரில் வெல்ல முடியாத அளவுக்கு அர்ஜுனன் திணறிய போது கிருஷ்ணர் ஒரு யுக்தி செய்தார் .கர்ணனிடம் அர்ஜுனனை கொள்வதற்காகவே ஒரே ஒரு சக்தி தனுஷ் மட்டுமே உள்ளது அந்த சக்தி தனுசுவை எப்படியும் அழித்துவிட்டால் பின்பு அர்ஜுனனுக்கு பயம் கிடையாது. என்று கிருஷ்ணர் நினைத்து அந்த சக்தி தனுசு எப்படி பயன்படுத்துவது என்று யோசித்தார் .போர்க்களத்தில் பீமனுக்கும் ஒருராட்சசிக்கும் பிறந்த அவனது மகன் கடோத்கஜன் போரில் பாண்டவர்களுக்கு துணையாக போரிட தயாராக இருந்தாந்.ஆகவே அவனை போரில் இரவில் போரிடச் சொல்லி கிருஷ்ணர் ஆணையிட்டார். அதன்படி அந்த அரக்கன் இரவில் கௌரவர் சேனைகளை பாதி அழித்து விட்டான். இனியும் இவன் உயிரோடு இருந்தால் மொத்த கௌரவபடைகளையும் அழித்து விடுவான் என்று பயந்த துரியோதனன் கர்ணனின் துணையை நாடினான். கர்ணனும் தீரமாக போரிட்டான் கடோத்கஜனை அவனால் அடக்க முடியவில்லை. ஆகவே இதை தவிர வேறு வழி கிடையாது என்ற நிலையில் அந்த ச அந்த சக்தி தனுசுவை கடோத் கஜன் பேரில் செலுத்தி கடோத்கஜனை வீழ்த்தினார் .அந்த சக்தி தனுசுக்கு அத்துடன் சக்திபோயிற்று. இப்படியாக பலவகையிலும் கர்ணனுக்கு எதிராக யோசனை சொல்லிக் கொடுத்தார் கிருஷ்ணர். இதைத் தவிர போருக்கு முன் கிருஷ்ணர் குந்தி தேவியை அழைத்து கர்ணன் பிறந்த ரகசியத்தை பற்றி கேட்க அவள் ஒப்புக்கொண்டாள். ஆகவே பஞ்சபாண்டவர்களில் பாண்டவர்களில் மூத்தவரான கர்ணன் தர்மனின் பக்கத்தில் இருந்தால் கௌரவர்களை எளிதாக வீழ்த்தி இருக்க முடியும். ஆகவே, குந்திக்கு கிருஷ்ணர் ஒரு யோசனை சொல்லிக் கொடுத்தார். காலை வேளையில் அவன் சூரிய உதயத்தில் கடவுளை வணங்கும்போது நீ போய் நீ தான் முதல் மகன் என்ற விவரத்தை அவரிடம் சொல்லு நீயும் வந்து எங்களோடு சேர்ந்து கொண்டு பட்டத்திற்கு உரியவனாக ஆக வேண்டும் இந்த கௌரவர்களே அழிக்க வேண்டும் என்று கேட்டு கேட்டுக்கொள் என்று யோசனை சொன்னார் .ஒருவேளை அவன் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இரண்டு வரங்களைக் கேள். பாண்டவர்களில் அர்ஜுனனைத் தவிர நீ யாரிடமும் போரிடக்கூடாது என்றும் அர்ஜுனன் பேரில் அவன் கையில் இருக்கும் நாகாசுரத்தை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்றும் கேட்டுக் கொள் என்று யோசனை சொல்லி அனுப்பினார் அதன்படியே குந்தியும் கர்ணனிடம் போய் இந்த விஷயத்தைச் சொல்ல கர்ணன் தான் குந்தியின் மகன் என்று தெரிந்து மகிழ்ச்சி அடைந்தார். இருந்தபோதிலும் அவன் குந்தியின் யோசனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக அவள் கேட்ட இரண்டு வரங்களையும் அவளுக்கு அளித்தான். ஆகவே மகாபாரதத்தில் தன்னை பெற்ற தாய்க்கே வரம் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தவன் கர்ணன். அப்படிப்பட்ட கர்ணனுக்கு அழிவு வந்தது எப்படி பார்க்கலாம்.
Comments
Post a Comment