ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும், பகுதி 86, மாவீரன் கர்ணணின் முடிவு
எப்படிப்பட்ட மாவீரன் கர்ணன், எவ்வளவு பெரிய வில்லாளி. அத்தனை அஸ்திரங்களையும் கற்றவன். அவனுக்கும் ஒரு முடிவு வந்தது .தர்மம் தலைகாக்கும் என்பார்கள். ஆனால் அவனது தலை காக்கவில்லை .அப்படிப்பட்டவனுக்கும் ஒரு முடிவு வந்தது. உயிர் போகாமல் தடுத்த தர்ம தேவதைக்கு ஏன் அவனை உயிரோடு காக்க முடியவில்லை. கர்ணன் மீது தொடுத்த அஸ்திரங்களை எல்லாம் அவநே தடுத்திருக்கலாமே. தடுக்க முடியவில்லை கேட்டால் விதி வலியது என்பார்கள். சரி போகட்டும் கர்ணன் தோல்வி பெற்றதற்கு அவனது குணமே ஒரு காரணம். அவன் பெரிய கொடை வள்ளலாக இருக்கலாம் .ஆனாலும் அவன் பெரிய வில்லாளியாகவும் இருக்கலாம். மாபெரும் வீரனாகவும் இருக்கலாம். ஆனாலும் அவன் சேர்ந்த இடம் தர்மவான்கள் சேரக்கூடிய இடம் அல்ல. அது ஒரு சூழ்ச்சி கும்பல். நேரடியாக வெற்றி காணாமல் குறுக்கு வழியில் வெற்றி பெறுபவர்கள். அப்படிப்பட்ட துரியோதனிடம் போய் சேர்ந்தான் கர்ணன் .எப்படிப்பட்ட வீரமும் பழுதாகும் அந்த இடத்தில். இருவருக்கும் இடையே தோன்றிய நட்பு, நட்பு அல்ல என்பது எனது கருத்து . கர்ணனுக்கு போட்டியில் அவமானம் ஏற்பட்டபோது உடனே துரியோதனன் அவனை ஒரு நாட்டுக்கு மன்னனாக வேண்டிய அவசியம் என்ன வந்தது . துரியோதனன் தன்னால் வெல்ல முடியாததை இந்த கர்ணனை வைத்து வெல்லலாம் என்று ஆசைப்பட்டான். ஆகவே இது வந்து கைமாறு கருதாத உதவி கிடையாது. இவனை வைத்து பிற்காலத்தில் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் துரியோதனன் அங்க தேசத்தை கர்ணனுக்கு அளித்தான். இது தெரியாமல் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த பங்காளி சண்டை புரியாமல் கர்ணனும் அதனை ஏற்றுக் கொண்டான். அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் தான் துரியோதனனின் பக்கம் தான் நிற்க வேண்டும் என்பது ஒரு நன்றி கடனுக்காகவே .ஆத்மார்த்தமாக அல்ல .தனக்கு ஒரு இன்னல் வந்த போது தன்னை துரியோதனன் எல்லோரும் முன்னிலையிலும் தன்னை கௌரவப்படுத்தினான் என்ற ஒரே காரணத்திற்காக கர்ணன் தனது நன்றி கடனாகத்தான் துரியோதனனுக்கு உழைத்தானே தவிர ஆத்மார்த்தமாக உழைக்கவில்லை .ஆகவே இருவருக்கும் இருந்த நட்பு ஒரு தெய்வீகமான நட்பு, ஒரு உள்ளார்ந்த நட்பு என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும் நண்பன் என்பவன் தட்டி கேட்கும் நண்பனாக இருக்க வேண்டும். துரியோதனன் செய்யும் அக்கிரமங்களுக்கு எல்லாம் கூட இருந்து ஒத்துழைத்தான் கர்ணன். அவன் செய்த தவறுகளை தட்டிக் கேட்க முடியவில்லை .ஆகவே அவர்களுக்குள் ஒரு நட்பு இருந்தது என்று சொல்ல முடியாது .ஒரு எஜமான விசுவாசம் மட்டுமே இருந்தது கர்ணனுக்கு , என்பது என் கணிப்பு. ஏனென்றால் துரியோதனன் கேட்டுக் கொண்ட படி தான் அவன் போரிட்டானே தவிர அவன் சொன்னபடி தான் நடந்து கொண்டானே ஒழிய சுயமாக கர்ணன் சிந்தித்து போரில் செயல்படவில்லை .அதனால் தான் பல அஸ்திரங்கள் வீணாயின. கடைசியில் சர்வ சக்தி வாய்ந்த நாகாஸ்த்திரத்தை அவன் அர்ஜுன் மீது பிரயோகம் செய்த போதும் அந்த நாகாஸ்திரம் அர்ஜுனனை கொல்லாமல் கிருஷ்ணரின் யோசனப் படி ரதம் பள்ளத்தில் இறங்கி அர்ஜுனனின் தலைப்பாகையோடு சென்று விட்டது. கர்ணனுக்கு தனது வீரத்தின் மீது அபாரமான நம்பிக்கை இருந்தால் அவன் இரண்டாம் முறைநாகாஸ்திரத்தை பிரயோகம் செய்ய மாட்டேன் என்று தனது தாய்க்கு கொடுத்த வாக்குறுதியாலும், அந்த அஸ்திரம் அவனால் திரும்பவும் எய்த முடியவில்லை. அதுவும் ஒரு காரணம் . மேலும் பரசுராமனின் சாபத்தின் படி அவரிடம் பொய் சொல்லி, தான் ஒரு பிராமணன் என்று பொய் சொல்லி கற்றுக் கொண்ட வித்தை பிரமாஸ்திரம். அவன் பொய் சொல்லி கற்றுக் கொண்ட படியால் அந்த நேரத்தில் அந்த அஸ்திரத்தை எய்த முடியாமல் போனது மற்றொரு காரணம். கர்ணன் போரில் தர்மத்தோடு தான் போர் செய்தான் என்று சொல்ல முடியாது. வீர அபிமன்யுவை யாரும் எதிர்த்து போரிட முடியாத நேரத்தில் கவுரவர்கள் பக்கம் இருந்த அத்தனை பேரும் கர்ணன் உள்பட அபிமன்யுவை ஒரே நேரத்தில் சேர்ந்து கொண்டு வீழ்த்தியது கொடுமையான செயல். மேலும் கர்ணன் தன்னிடம் யார் எதை கேட்டாலும் கொடுப்பார் என்பதால் கையில் ஆயுதம் எதுவும் இல்லாத நேரத்தில் அபிமன்யு கர்ணா எனக்கு நீ ஒரே ஒரு குத்துவாள் மட்டும் கொடு என்று அவரிடம் யாசிக்கிறான். அந்த நேரத்தில் கர்ணன் ஒரு வள்ளலை போல் ஒரு வாளை அபிமன்யுவுக்கு கொடுத்து, அதனால் கர்ணன் மரணமடைந்த மரணம் அடைந்திருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கர்ணம் அபிமன் யூவின் அருகில் நெருங்கி அவனை தனது வாளால் குத்தி மரணமடை செய்தான். இது கர்ணனுக்கு ஒரு அவனுடைய வீரத்துக்கு ஒரு இழிவான செயலாகவே நான் பார்க்கிறேன். எல்லாவற்றையும் விட , கர்ணன் கொடை வள்ளலாக இருந்தானே தவிர அவன் தர்மத்தின் படி நடந்தானா என்றால் நடக்கவில்லை. எல்லோரும் குடியிருந்த சபையில் திரௌபதிக்கு அவமானம் இழைக்கப்பட்டபோது துரியோதனன் ஒரு மைத்துனர் என்ற முறையில் கேலி பேசினான். அதையே பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் கர்ணனுக்கு பாண்டவர்களோடு எவ்விதமான சம்பந்தமும் இல்லாதவன். அப்படி இருந்தபோது துரோபதியை அவமானப்படுத்துவது போல் என்னையும் உனது கணவனாக ஆறாவதாக ஏற்றுக் கொள் .நீ ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்தவள் தானே என்று இழிவாக பேசியது ஒரு இழிவான செயலாக எனக்கு தோன்றுகிறது. என்னதான் கற்ற விதையாக இருந்தாலும் அதை முறைப்படி செயல்படுத்தாமல் இருந்தால் அந்த அறிவு வெற்றி அடையாது என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் .மேலும் அவன் தனது வாழ்க்கையில் மன உளைச்சலோடு தான் வாழ்ந்திருக்கிறான். இருந்தாலும் செய்நன்றிக்கு ஒரு உதாரணமாக கர்ணனை அடையாளம் காட்டலாம். அதுவரையில் கர்ணனை நாம் பாராட்டவும் செய்யலாம் கார்த்திகை மாதத்திற்கு பின் மழையும் இல்லை கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை என்று சொல்வார்கள் அது உண்மைதான் எப்படி இருந்த போதிலும் கர்ணனின் புகழ் ஓங்கட்டும்.
Comments
Post a Comment