ஈசி சேர், வெளிச்சம் பரவட்டும், பகுதி 87, பாண்டுவும், பாண்டவர்களும்.

அஸ்தினாபுரத்து அரசன் விசித்திர வீரியன் மனைவி அம்பாலிகா வுக்கு பிறந்தவர் பாண்டு மன்னர் பிறந்ததிலிருந்து ஒரு நோய்வாய் பட்டது போலும் வெளுத்த நிறமாகவும் இருந்தார். அதற்கு காரணம் அவரது பிறப்பு என்று மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எப்படியோ திருதுராட்டிரனுக்குப் பிறகு பிறந்த பாண்டு திருதுராட்டிரனுக்கு கண்ணில்லாத காரணத்தால் பதவியை இழந்தார். அதற்கு பதிலாக பாண்டுக்கு முடி சூட்டப்பட்டது. பாண்டு குந்தி ,மாதுரி என்ற இரு பெண்களைமணந்தான். ஒரு சமயம் அவனுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படவே  பாண்டு தனது மனைவிகளை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று விட்டார். அதன் பிறகு தான் திருதராட்டினனுக்கு பட்டம் சூட்டினார்கள். சரி போகட்டும் காட்டுக்கு வந்த பாண்டு மன்னருக்கு ஒரு முனிவரின் சாபத்தால் இல்வாழ்க்கையில் ஈடுபட்டால் உனது உயிர் போய்விடும் என்று சொல்ல அதற்கு பயந்து பாண்டு  குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை. ஒரு சமயம் அதற்கு ஒரு வழி சொன்னால் குந்தி தேவி. ஒரு சமயம் குந்திதேவி சுக்ராச்சாரியார் என்ற முனிவருக்கு பணிவிடைகள் செய்ய போக அவர் குந்திதேவிக்கு ஒரு வரம் கொடுத்தார். நீ நினைத்த நேரத்தில் சகல சக்திகளும் வாய்ந்த தெய்வங்கள் உனக்கு குழந்தைகள் கொடுக்கும் என்பதுதான் அந்த வரம். இந்த வரத்தை பற்றி கர்ணன் பிறப்பில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஆகவே குந்தி தேவி பாண்டு விடம் தனக்கு முனிவர் கொடுத்த வரங்களைப் பற்றி எடுத்துச் சொன்னாள். பாண்டுவும் மகிழ்ந்து அதுபோல் நமது வம்சவிருத்திக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் முதலில் தர்மமே உருவாக நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட எமதர்மன் மூலம் பாண்டுவுக்கு சாரி குந்திக்கு தர்மர் பிறந்தார். பிறகு வாயு தேவனை நினைத்து அவள் வேண்ட அவளுக்கு வாயுவின் வேகமும் வீரமும் நிறைந்த பீமன் பிறந்தான் .பிறகு இந்திரனை நினைத்து வேண்ட  அவனைப் போன்ற அழகான ஒரு வீரமான குழந்தை பிறந்தது. அவன் தான் அர்ஜுனன் .போதும் குழந்தை என்று குந்தி முடிவு செய்து பிள்ளை இல்லாத மாதிரிக்கும் குழந்தை வேண்டும் என்று எண்ணத்தில் இந்த மந்திரத்தை அவள் காதில் ஓதினாள். அவள் அவளுக்கு இஷ்ட தெய்வமான அசுவினி குமாரர்களை வேண்ட இருவரும் சேர்ந்து அவளுக்கு இரண்டு பிள்ளைகள் கொடுத்தார்கள். அவர்களே நகுலன் மற்றும் சாகதேவன் .ஆக ஐந்து பிள்ளைகள் இருவருக்கும் பிறந்தன. ஐவரும் ஒன்றாகவே காட்டில் வாழ்ந்தார்கள் சகல கலையும் பாண்டு தனது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தான். அத்தோடு சேர்த்து ஒழுக்கமான பிள்ளைகளாகவும் இருந்ததால் அவர்கள் கல்வி கேள்விகளில் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருந்தார்கள். சிறிது காலங்களுக்கு பாண்டு மாதிரி , இருவரும் காட்டில் முனிவரிட்ட சாபத்தால்  இறந்து போக இது தெரிந்த பீஷ்மர் பாண்டவர்களையும் குந்திதேவியும் காட்டிலிருந்து அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் வந்து விட்டார். ஏற்கனவே பாண்டு மகாராஜா  ஆண்டதேசமாதலால் அவனுக்குப் பிறகு தர்மர் தான் ஆள வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பிறகு அஸ்தினாபுரத்தில் தர்மருக்கு இளவரசு என்று பட்டாபிஷேகம் செய்துவிட்டார்கள். அதன் பிறகு பாண்டவர்களும் கௌரவர்கள் 100 பேரும் குருகுல வாசம் செய்ய துரோணரின் ஆசிரமத்துக்கு அனுப்பப்பட்டார்கள் .இந்த கதை எல்லாம் ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய அர்ஜுனன் எல்லாவற்றிலும் முதன்மையாக இருந்தார் அங்கு இருந்த மாணவர்களில் அவ்வளவு பேரிலும் முதன்மையானவனாக இருந்தான் அர்ஜுனன். பாண்டவர்கள் பக்கம் ஏற்கனவே பொறாமையில் இருந்த துரியோதனனுக்கு இது பெரிதும் அதிர்ச்சி அளித்தது. இன்னும் அந்த கோபம் வளர்ந்து கொண்டே இருந்தது .இது பற்றி எல்லாம் மகாபாரத கதைகளை படித்து அவர்களுக்கு நன்றாக தெரியும் இது பற்றி ஏற்கனவே நான் விளக்கி இருக்கிறேன் .இலவரசு பட்டம் பெற்றுக்கொண்ட தர்மருக்கு வாரணாவதம் என்ற இடத்தில் வரவேற்பு கொடுப்பதாக சொல்லி பாண்டவர்களை தீர்த்துக்கட்ட அரக்கு மாளிகையில் வைத்து தீர்த்து கட்ட முடிவு செய்த முடிவு செய்து அதிலிருந்து தப்பித்து பாண்டவர்கள் பாஞ்சால தேசத்திற்கு சென்று அங்கு திரௌபதி சுயம்வரத்தில் கலந்து கொண்டு அர்ஜுனன் அவளை வென்று தனது சகோதரர்களுக்கும் சேர்ந்து ஐவருக்கும் மனைவியாக ஆனாள் திரௌபதி என்கிற பாஞ்சாலி .பிறகு

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்