ஈசிசேர், வெளிச்சம் பரவட்டும், பகுதி 88_ குந்திதேவியும் காந்தாரியும்
பிறகு நடந்தது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தில் நாட்டை இழந்த தர்மர் தனது மனைவி பாஞ்சாலி எனது தம்பிகளோடு நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று விட்டார்கள். ஆனாலும் அவரது தாயாரான குந்திதேவி காட்டுக்குச் செல்லவில்லை. அவள் காந்தாரியின் அரண்மனையில் இருந்த போது காந்தாரிக்கு மிகவும் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அவள் காட்டுக்குச் செல்லாமல் தங்கி விட்டார் . காந்தாரியின் மக்களுக்கும் குந்தி தேவியின் மக்களுக்கும் விரோதம் இருந்த போதிலும் இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது. எந்த சூழ்நிலையிலும் குந்திதேவி தனது ஆற்றாமையை காந்தாரியிடம் காட்டிக்கொண்டதில்லை. அதுபோல் ஒரு சகோதரியின் பாசத்தோடு காந்தாரியம் குந்திதேவியை அனைத்து போனாள். கண்ணை மறைத்துவாழும் காந்தாரிக்கு குந்திதேவி கண்ணாகவே இருந்தாள்.எல்லா விதத்திலும் அவர்களைப் பொருத்த வரையும் அவர்கள் சகோதரிகளாக வாழ்ந்தார்கள் .குந்திதேவி காட்டில் இருந்த போது அவளுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்த விபரம் கேட்ட பிறகு தான் காந்தாரிக்கு குழந்தை பிறந்தது .ஆனால் மகாபாரதத்தில் எந்த இடத்திலும் குந்திதேவிக்கு எவ்வாறு குழந்தை பெற்றாள் என்று காந்தாரியிடம் எதுவும் விளக்கமாக சொல்லப்படவில்லை. காந்தாரியும் அது பற்றி விசாரித்தது போல மகாபாரதத்தில் இல்லை .பாரதப் போர் நடந்த போது கூட குந்திதேவி காந்தாரியுடன் தான் தங்கி இருந்தாள். போர்க்கள செய்திகளை அடிக்கடி இவள் மூலமாக கேட்டு தெரிந்து கொள்வதும் உண்டு. மகாபாரத போர் முடிந்த பிறகும் தனது மக்கள் அத்தனை பேரும் இறந்த போதும் காந்தாரி குந்திதேவி இடம் தனது பொறாமையை காட்டவில்லை .மாறாக இதற்கெல்லாம் காரணமான கிருஷ்ணரின் மீது தான்கோவம். இவ்வளவுக்கும் காரணம் கிருஷ்ணரே குந்தி தேவியின் மக்கள் அல்ல என்பது கந்தாரியின் முடிவு .ஆகவே காந்தாரியை பொறுத்தவரையில் மகாபாரதத்தில் அவள் யாருக்கும் எந்த விதமான தீமை செய்யவில்லை .தருமருக்கு பட்டாபிஷேகம் முடிந்த பிறகு வழக்கமாக அந்த காலத்தில் நடைபெறும் வானப்பிரஸ்தம் படி மன்னனும் காந்தாரியும் காட்டுக்குச் சென்று விட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து குந்தி தேவியும் காட்டுக்குச் சென்றது ஒரு உயர்வான விஷயம். காந்தாரியே சொன்னாள் நீ உன் மக்களுடன் ராஜ்ஜியத்திலே அரண்மனையில் தங்கி இரு நாங்கள் போகிறோம் என்று சொன்னபோதும் கூட காந்தாரிக்கு அவள் தனது கண்ணை கட்டிக்கொண்டு இருந்ததால் அவளுக்கு உதவியாக நான் கடைசி வரையில் வாழ்வேன் என்று சொன்ன தியாகி குந்திதேவி .ஒரு எளிமையான வாழ்க்கை தான் வாழ்ந்தாள். ஆகவே மகாபாரத்தில் வரும் கதாபாத்திரங்களில் காந்தாரியும் குந்திதேவியும் என்றும் பேசப்படுவார்கள்.
Comments
Post a Comment