வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்
தெலுங்கு பட உலகில் 1952 இல் வெளிவந்த தேவதாஸ் படம் மூலமாக அறிமுகமானவர் சாவித்திரி. முதல் படமே சூப்பர் டூப்பர் படம் என்பதால் அவர் ஒரே இரவில் நட்சத்திரம் ஆகிவிட்டார். பின்பு 1954 இல் தேவதாஸ் படம் தமிழிலும் வெளிவந்தது .படம் அருமையான படம் பாடல்கள் அதைவிட சூப்பர். எல்லாவற்றையும் விட சாவித்திரியின் அந்த இளமையான சோகமான முகம் தமிழ் பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. 54 முதல் தெலுங்கிலும் தமிழிலும் தொடர்ந்து படங்கள் வெளிவந்தன. 57 இல் தமிழ் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து மணந்தார். அவருக்கு இரு குழந்தைகளும் உண்டு .இருந்த போதிலும் அவரது சினிமா நடிப்பிற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. தொடர்ந்து நடித்த அவர் 1961 இல் வெளிவந்த பாசமலர் படத்தில் சிவாஜிக்கு தங்கையாக நடித்து பெரும்புகழ் பெற்றார் .61 முதல் தமிழ் ரசிகர்களின் முதல் நடிகையாக இடம்பெற்றார். அப்போது தமிழ் சினிமா உலகில் பானுமதி பத்மினி போன்ற பிரபல நடிகைகள் இருந்தனர் .ஆனால் சாவித்திரி இடம் ஒரு தனித்துவம் இருந்தது .அவர் பானுமதியை போல் ஒரு தசாவதாரம் இல்லை .ஆனால் சாவித்திரி இடம் ஒரு தனித்துவமான நடிப்பு இருக்கும்.ரசிகர்ளின் சகோத...