இந்திய பெண்கள் சொத்துரிமை 5

1937 இல் பெண்களுக்கு சொத்துரிமையில் ஓரளவு கொடுக்கப்பட்டாலும் அந்த சொத்துரிமையை அவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. கூட்டுக் குடும்பத்தில் ஒரு மனைவியின் கணவர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து சொத்துக்களை தனது மனைவிக்கு தானமாகவோ அல்லது பரிசாகவோ கொடுக்கப்பட்டால் அது அவர்களின் தனிப்பட்ட சொத்தாக கணக்கிடப்பட வேண்டும். இதுதான் சட்டத்தின் சாராம்சம் அது போல் செய்வதற்கு கூட்டு குடும்பத்தின் தலைவருக்கு உரிமை உண்டு. அதன் பிறகு அந்த பெண் கூட்டு குடும்பத்தில் ஒருவராகிறார். அதாவது 1937 க்கு பின், இந்நிலையில் அல்லாடி குப்புசாமி என்ற மிகப்பெரிய வழக்கறிஞர் தனது தாயாருக்கு தனது தந்தை மூலம் கிடைத்த பரிசு பொருட்களையும் மற்றும் தனது தாயார் பெயரில் இருந்த வைப்பு தொகைகளையும் குடும்பத்தை சொத்துக்களாகவே பாவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். ஏனென்றால் தாயாரின் பங்கு தனியாக கணக்கிடப்பட்டு அவர் சொந்த சொத்தாக பாவிக்கப்பட்டு அதற்கு வரி விதிக்கப்பட்டது. இந்த எதிர்த்து அன்றைய காலகட்டத்தில் மிகச் சிறந்த வழக்கறிஞர் என்று கருதப்பட்ட அல்லாடி குப்புசாமி இந்த ஆக்ட்டின் சாராம்சத்தை ஏற்றுக் கொள்ளவில்லை .எஸ்டேட் டியூட்டி ஆபிசர் செய்தது தவறு இந்த சொத்தை கூட்டுக்குடும்பத்து சொத்தாக தான் கருதப்பட வேண்டும் ஏனென்றால் கூட்டு குடும்பத்தில் இருந்து கொடுக்கப்பட்ட சொத்தாகையால் அவரது தாயாருக்கு லிமிடெட் எஸ்டேட் தான் கணக்கிட வேண்டும். அவரை தனிப்பட்ட சொத்த இது அல்ல என்று வாதிட்டார். பல நீதிமன்றங்கள் சென்றது இறுதியாக 1969 ல் சுப்ரீம் கோர்ட்டில் இதற்கு ஒரு தீர்வு காணப்பட்டது தமிழ்நாட்டில் மிகச்சிறந்த வழக்கறிஞர் ஆகையால் ஏராளமான வழக்கறிஞர்கள் இதில் ஆர்வம் காட்டினார் .பிரிவிகவுன்சில் மற்றும் இலங்கை உயர்ந்த உச்ச நீதிமன்றங்கள் வழக்குகள் எல்லாம் எடுத்துரைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 1937 பெண்கள் உரிமைச் சட்டம் அலசப்பட்டது. ஏராளமான வழக்கறிஞர்கள் ஆஜராகி மாறுபட்ட தீர்ப்புகளை எடுத்துரைத்தனர் .இந்த1937 சட்டத்திற்கு இந்த வழக்கு ஒரு முக்கியமான வழக்காக கருதப்பட்டது. 1937 ஆக்ட் முழுவதுமே இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது  இறுதியாக அல்லாடி குப்புசாமி எடுத்து வைத்த வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எப்போது ஒரு கணவன் தனது மனைவிக்கு தனிப்பட்ட முறையில் பிக்சட் டெபாசிட்டில் பணம் கொடுத்து பணம் கொடுக்கப்பட்டதோ அன்றிலிருந்து அந்த சொத்து இந்த மனைவியின் தனிப்பட்ட சொத்தாக தான் கருதப்பட வேண்டும். அது கூட்டு குடும்ப சொத்து அல்ல .ஆகவே அந்த சொத்து அவரது பிள்ளைகளுக்கு வாரிசு முறையில் சென்றடைய வேண்டுமே ஒழிய கூட்டுக் குடும்பத்து சொத்தாக கருதப்பட மாட்டாது. அவர்கள் தனிப்பட்ட சொத்தாகையால் அதை அவருடைய தனி எஸ்டேட்டாக கணக்கிடப்பட்டு அதற்கு வரி விதிக்கும் உரிமை எஸ்டேட் டியூட்டி கமிஷனருக்கு உண்டு என்று தீர்ப்பாகியது. இந்த தீர்ப்பின் மூலம் நாம் தெரிந்து கொள்வது எப்படிப்பட்ட கற்றறிந்த வர்களாக இருந்தாலும் பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்று சட்டம் போட்டால் கூட கொடுக்க தயாராக இல்லை என்ற மனநிலை தெரியும். 1937 ஆக்ட்படி  பயனடைந்தவர்கள் வெகு சிலரே
 மற்றவர்கள் எல்லாம் இது போன்ற மிகப்பெரும் சக்திகளால் காலடியில் போட்டு துவைக்கப்பட்டார்கள் இந்த வழக்கில் கூட எஸ்டேட் டியூட்டி கமிஷனர் இது ஒரு சட்டப் பிரச்சினையாக சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு சென்றதால் தான் இந்த விடிவு காலமே ஏற்பட்டது. இல்லாவிட்டால் கீழ் கோர்ட்டில் சென்னை கோர்ட்டில் முடிவானபடி அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட சொத்துக்கள் முழுவதுமே கூட்டுக் குடும்பத்தில் சொத்துக்கள் தான் என்று முடிவாகி இருக்கும். நல்லதொரு தீர்ப்பை கொடுத்த து அன்றைய உச்சநீதிமன்றம் ,அதுவும் காலம் கடந்து. காலங்கடந்த நீதி செத்ததற்கு சமம் .ஏனென்றால் இந்த தீர்ப்பு வந்த போது சொத்துரிமைச் சட்டத்தில் 1956 இல் திருத்தங்கள் வந்துவிட்டன. இந்த வெற்று தீர்ப்பின் மூலம் ஒரு ஆக்ட் நிறைவேற்றும் போது அதனுடைய உண்மை தன்மை என்ன நோக்கம் என்ன  என்பதே குறிக்கோளாக கொள்ள வேண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இவை  எல்லாவற்றையும் பார்ப்பதே இல்லை .முழுமையாக  சட்டத்தின் பிடியை தம் கையில் வைத்துக்கொண்டு தமது இஷ்டத்துக்கு வளைப்பார்கள். தனது அறிவு திறனாலும் தனது வாத திறமையாலும் எந்த சட்டம் எதற்காக இயற்றப்பட்டதோ அது பயனற்று போய்விடும். ஆகவே இது போன்ற வழக்குகள் அந்தக் காலத்தில் கீழ் கோர்ட்டிலேயே முடிந்துவிடும். ஏனென்றால் வழக்கு தொடுக்கும் பெண்மணிக்கு ஆதரவாக யாரும் இருக்க மாட்டார்கள் .அவர்கள் குடும்பமும் நசித்து விடும் என்ற காரணத்தால் அவர்கள் பெரும்பாலும் சமாதானமாகி போய் விடுவார்கள் இது போன்ற அரிதான வழக்குகளே உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். ஆகவே இந்த 1937 ஆக்ட் இந்த வகையிலாவது ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்தது அதற்காக பாராட்டலாம். தொடரும்

Comments

  1. நானே அல்லாடி என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எப்டின்னுதான் தெரியலை!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64