இந்திய பெண்கள் சொத்துரிமை6
ஓரளவுக்கு சொத்துரிமை அனுபவித்து வந்த பெண்களுக்கு முழுவதுமாக சொத்தின் மீது அவர்களுக்கு பூரணமகன்களோடு உரிமை வந்துவிடவில்லை. ஒரு இழுபரியான நிலைதான். இந்த காலகட்டத்தில் 1956-ல் இந்து வாரிசுரிமை சட்டம் வந்தது. அதன்படி முதன் முதலாக ஒரு தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் மனைவியோடு சேர்த்து உரிமை கொடுத்தனர் .இது முதன்முதலாக பெண்கள் அடைந்த சுதந்திரம் என்று கூட சொல்லலாம். பழைய சட்டத்தின் படி பழைய ஹிந்து லாவின் படி மகள்களுக்கு கூட்டு குடும்பத்து சொத்தில் எந்த விதமான உரிமையோ பங்கோ கிடையாது .ஆனால் கணவரின் சொத்தில் தனிப்பட்ட சொத்திலும் மனைவிக்கு பங்கு இருந்தது .அந்தப் பங்கு அவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கு தங்கள் குடும்பத்தை தங்கள் பெண்களை காத்துக் கொள்ள முடிந்தது .1956 இல் வந்த இந்தி வாரிசுரிமை சட்டப்படி பெண்களும் வாரிசுதாரர்கள்ஆனார்கள். அதன்படி கூட்டுக் குடும்பத்து சொத்தில் கை வைக்காமல் ஒரு குடும்பத் தலைவர் தனது சொந்த சொத்துக்களை வைத்திருந்தார் என்றால் அவருக்கு பிறகு அந்த சொத்தில் அவரது மகன்களோடு சேர்த்து அவரது மகள்களுக்கும் அவரது மனைவிக்கும் சம பங்கு அளிக்கப்பட்டது. செக்க்ஷன் ஆறின்படி அந்த சொத்துக்கள் அவர்களது தனிப்பட்ட சொத்துக்கள் ஆகவும் கருதப்பட்டன. முக்கிய அம்சங்களாக பெண்களுக்கு அவர் அவரவர்கள் அடைந்த சொத்தை மற்றவர்களுக்கு தானமாகவோ அல்லது உயில் மூலமாக கொடுப்பதற்கு சட்டம்வகை செய்தது. இதில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட சொத்தில் பெண்களுக்கு என்று தனி வாரிசுதாரர்கள் பிரிவு 15ன் படி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு இந்து பெண்மணி இறந்து விட்டால் அதுவும் உயில் எழுதாமல் இறந்து விட்டால் அவரது சொத்துக்கள் செக்.15ந்படி பிரித்து அளிக்கப்படும் . இந்த அளவுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் ஓரளவுக்கு ஜன்னல்களை திறந்து விட்டது போல் இருந்தது முழுமையான கேட் திறக்கப்படவில்லை என்றாலும் ஜன்னல் வழியே வரும் காற்று அவர்களுக்கு ஒரு புத்துணர்வை ஊட்டியது. வீட்டை விட்டு வெளியே வந்தார்கள் .கல்வி கற்றார்கள் சுயமாக சம்பாதித்தார்கள். அந்த சுயமாக சம்பாதித்து சொத தங்கள் இஷ்டம் போல் அதை பாதுகாத்து வைத்துக் கொள்ள அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. அந்த பெண்கள் தனது சொத்தை, தனது கணவரின் வாரிசுகலுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று சட்டத்தில் கிடையாது. அவர்கள் முழு மனதோடு எதற்காக வேண்டுமானாலும் செலவு செய்யலாம். இந்த அளவுக்கு 1956 இல் சட்டம் அவர்களுக்கு சுதந்திரம் அளித்தது என்னதான் சுதந்திரம் அளித்திருந்த போதிலும் பெண்களை கூட்டுக்குடும்பத்தார் என்று சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. பெண்கள் அந்நியர்களே .ஒரு குடும்பத்தில் பெண்கள் இருந்த போதிலும் அவர்கள் அன்னியர்களாகத்தான் கருதப்பட்டார்கள். 1956 சட்டம் கூட்டு குடும்பத்தை இல்லாமல் கூட செய்திருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. பல முக்கியமான சட்ட வல்லுநர்கள் கூட்டு குடும்பத்தை திடீரென்று உடைக்க வேண்டாம் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களுக்கு உரிமை கொடுக்கலாம் என்று நினைத்திருக்கலாம். அதன்படி இதுவரை சொத்தை அனுபவிக்காத பெண்கள் ஓரளவுக்கு சொத்தை அனுபவித்தார்கள் அதனால் பெண்களுக்கு சொத்தில் முழு உரிமை வந்துவிடவில்லை இப்போதும் வீட்டில் மகன்களுக்கு ஒரு தனி மரியாதையும் பெண்களுக்கு அடுத்த மரியாதை தான் கொடுக்கப்பட்டது .பெண்கள் அதனால்தான் என்னவோ சகோதரர்களை தயவு நம்பி வாழும் சூழ்நிலை தான் இந்த சட்டத்திலும் ஏற்பட்டது. 1956 இல் சட்டம் பிரிவு 6proviso படி ஒரு கூட்டு குடும்பத்தின் தகப்பனார் இறந்து விட்டால் அவரது சொத்துக்கள் குடும்பச் சொத்துகளாக கணக்கிடப்படும். அவருக்குப் பிறகு அந்த சொத்துக்கள் கூட்டுக் குடும்பத்தை சார்ந்த உறுப்பினரான அவரது மகன்களே சாரும் .மகன்கள் இல்லாத பட்சத்தில் தான் மகள்களுக்கு மனைவிக்கும் வழங்கப்படும் .அந்த கூட்டு குடும்பத்தின் தகப்பனார் இறந்து விட்டால் அவரது சொத்து தனியாக கணக்கிடப்படும். அதாவது அவர் உயிரோடு இருந்த காலத்தில் ஒரு பாகப்பிரிவினை ஏற்பட்டால் எந்த அளவுக்கு அவருக்கு பங்கு கிடைக்குமோ அந்த பங்கு மற்ற மகன்களுக்கு மட்டும் பிரித்து அளிக்கப்படும். இதில் மகள்களோ மனைவியோ எந்த விதமான உரிமையும் கொண்டாட முடியாது அப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் இந்த பிரிவு ஆறில் ஒரு proviso சேர்த்தார்கள் .அதன்படி அந்த தகப்பனார் இறந்து விட்டால் அவருக்கு பெண் வாரிசுகளும் மனைவியும் இருந்தால் கூட்டுக் குடும்பத்தில் அவருக்குள்ள பங்கை பெண்களுக்கும் மனைவிக்கும் மகன்களோடு சேர்த்து பிரித்து தர வேண்டும் என்று ஒரு ரைடர் கிளாஸ் இணைக்கப்பட்டது. உதாரணமாக தகப்பனார் தகப்பனார் இருந்தபோது இரண்டு மகனும் இரண்டு மகளும் மனைவி ஒருத்தியும் இருந்தால் பாகப்பிரிவினைக்கு முன் இறப்பதற்கு முன் ஒரு பாகப்பிரிவினை நடந்திருந்தால் அதில் தகப்பனருக்கும் மகன்களுக்கும் ஆளுக்கு ஒன் பை த்ரீ பாகம் கிடைக்கும். இந்த ரைடர் கிளாஸ் படி தகப்பனாரின் பங்கில் மகன்கள் 2 ,மகள்கள் ரெண்டு பாகம், மனைவி ஒரு பாகம் என்று,1/3x1/5 i. அதாவது 1-ல் 15 பாகம் ஒவ்வொரு வாரிசுசதாரருக்கும் கிடைக்கும். இது மட்டுமே பெண்களுக்கு கிடைத்த உரிமை. ஆனால் இந்த 1/ 15 பங்கை ஒரு பெண் அவ்வளவு எளிதில் குடும்பத்தில் இருந்து வாங்கி விட முடியாது .ஏனென்றால் அந்த பெண்ணுக்கு பிறந்தது முதல் திருமணம் செய்து வைப்பது வரை அதன்பிறகு குழந்தை பிறப்பு வரை தாய் வீட்டில் பார்த்து அனுப்பப்படும். அந்த தாயானவள் மகன்களை நம்பி வாழக்கூடியவர் .அதனால் அவர் மகன்கள் பேச்சை மீறி எதுவும் செய்து விட முடியாது ஓரளவுக்கு தான் செய்ய முடியும் அப்படி இல்லாத பட்சத்தில் மகன்களிடம் வெறுப்பு ஏற்பட்டு விடும் என்ற காரணத்தால் அந்த தாயும் எந்த விதமான உரிமையும் கேட்டுப் போராட மாட்டார் .வழி வழியாக வந்த தாய் வீட்டு சீதனம் என்ற கோட்பாடின்படி மகள்களும் போர்க்கொடி தூக்க மாட்டார்கள். தனக்கு சட்டத்தின் படி ஒரு பாகம் இருப்பது அதை எனக்குப் பிரித்துக் கொடுங்கள் என்று பெரும்பாலும் பெண்கள் கேட்பதில்லை. அந்த காலத்தில் இதுபோல் ஒரு சட்டம் இருப்பது தெரியாது.பல பேருக்கும் விழிப்புணர்வு எதுவும் இல்லை பெண்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டது என்ற விழிப்புணர்வு கிட்டத்தட்ட 1975 க்கு மேல் தான் ஜனங்கள் அறிய ஆரம்பித்தார்கள் அப்போது திருமணம் ஆகி சென்ற பெண்கள் சிலர் தனது கணவனின் வற்புறுத்தலுக்கு இணங்க தனது பாகத்தை கேட்க போய் சண்டை வம்பில் முடிந்ததும் உண்டு .ஆகவே பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சொத்துரிமை பெரிதாக பேசப்படவில்லை .இதையும் மீறி கோர்ட்டுகளில் நூற்றுக்கு ஒரு பெண் பாகம் கேட்டு வழக்கு தொடுப்பார் .வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது அவருக்கு ஏதாவது ஒரு தொகையை கொடுத்து சமாதானப்படுத்தி விடுவார்கள். இன்னும் சிலர் கோர்ட்டுக்கு போகாமல் இருப்பதற்காக பெண்களிடம் இருந்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கி விடுவார்கள். அப்படி தனது சொத்தில் உள்ள உரிமையை தனது சகோதரர்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டால் பெண் கோர்ட்டில் தனது உரிமையில் நிலைநாட்டுவது அவர்கள் கஷ்டம். சில புதுமையான வழக்குகளும் உண்டு என்னிடம் என்னவென்று தெரியாமலே ஏமாற்றி கையெழுத்து வாங்கி விட்டார்கள் என்று கோர்ட்டில் நிரூபித்தால் திரும்பவும் அவர்கள் தனக்குறிய பாகத்தை அடையவும் சில தீர்ப்புகள் உண்டு. ஆனால் பொதுவாக பெண்கள் அடங்கி விடுவார்கள் .ஏனென்றால் அவர்கள் உன்னுடைய வாழ்க்கைக்கு இவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்று சகோதரர்கள் கணக்கிடுவார்கள். ஆகவே பெண்கள் தனக்கு உரிமை இருந்தும் தன் உரிமையை நிலைநாட்ட முடியாமல் போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் தனது உரிமையை இழக்கிறார்கள் என்று அவரது அவர்களது குடும்பத் தலைவர் தகப்பனார் நினைத்து விட்டால் தனக்கு கொடுக்கப்பட்ட பங்கை தந்தையர்கள் தனது பெண்களுக்கு அந்தப் பங்கை எழுதி வைக்கவும் ஆரம்பித்தார்கள். இதுவும் ஆண்களிடையே ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்தியது. கிராமத்தில் பாகப்பிரிவினையில் தகப்பனாருக்கு இரண்டு ஏக்கர் ஒதுக்கப்பட்டால் அவர் அந்த இரண்டு ஏக்கரையும் விற்று தனது பெண்களுக்கு பெரும்பாலும் கொடுக்கும் நிலை வந்தது. சட்டமும் நீதிமன்றங்களும் சில விஷயங்களை ஆராய்ந்தன ஒரு தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே பாகப்பிரிவினை ஏற்படும்போது பெண்களும் அந்த பாகப்பிரிவுகளில் கலந்து கொள்வது போல் இருந்தால் பாகப்பிரிவினைக்கு பிறகு பிரிக்கப்பட்ட சொத்து அவரவர்கள் சொத்து என்று தீர்மானம் ஆகியது. இதுவே பெரிய ஒரு புரட்சிகரமான தீர்ப்பு என்று கூட கருதப்பட்டது.அதுவும் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலத்துக்கு பிறகு வந்த தீர்ப்பு. மேலும் சில புரட்சிகரமான தீர்ப்புகளும் வர ஆரம்பித்தன தனிப்பட்ட சொத்து அல்லாமல் குடும்பத்து சொத்துக்களை பிரித்து ஒரு தகப்பனார் தனது கையில் வைத்திருந்தால் அந்த சொத்துக்களையும் அவரது சொந்த சொத்தாக பாவிக்க வேண்டும் என்று புரட்சிகரமான தீர்ப்புகள் வந்தன. ஆனால் இங்கு ஒன்றும் அங்கொன்றுமாக தான் வந்தன இதை உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் நிராகரித்துவிட்டது. பிரி பிரிவு 6 படி சொத்துக்கள் பெண்களுக்கு ஓரளவுக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைய முடிந்தது. இதற்கும் ஒரு விடிவு காலம் வந்தது .தொடரும்
Next
ReplyDeleteதல சுத்துது....
ReplyDelete