இந்திய பெண்கள் சொத்துரிமை, 8
1956 சட்டத்தின்படி பெண்களுக்கு உரிமைகொடுத்தபோதும் பலவிதமான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ஒரு வழியாக தீர்ப்பு 2020 உச்சநீதிமன்றத்தில் முடிவானது ஆகவே 1956 இல் சட்டம் போட்டும் பெண்கள் அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை .இதற்கு எல்லாம் தீர்வாக அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக தமிழ்நாடு அரசு ஆக்ட் ஒன் ஆப்1/ 90 என்ற பெயரில் இந்து வாரிசு உரிமை சட்டத்தில் செக்ஷன் 29 (c) சி படி தமிழ்நாடு அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. ஏனென்றால் பெண்களுக்கு 1956 இல் சொத்துரிமை கொடுத்தும் பலவிதமான சட்ட போராட்டங்களால் அவர்களால் அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் கோர்ட்டுகளில் வழக்கு தேங்ககி கிடப்பதால் பெண்களுக்கு சம உரிமை கொடுத்தும் அவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்ற காரணத்தால் தமிழ்நாடு அரசு இந்த திருத்தத்தை கொண்டு வந்தது. எப்போதுமே தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றத்தில் 1900 முதற்கொண்டு அக்கறை எடுத்து வந்ததும் அவர்களால் ஆணுக்கு பெண் சமமாக வர முடியவில்லை. கல்வியிலும் பின்தங்கி இருந்தனர். இந்த குறை எல்லாம் போக்க அவர்களுக்கு பொருளாதாரமே பின்புலமாக இருக்கும் என்ற எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் முழுமை பெறவில்லை ஆதலால் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த திட்டத்தின் படி 25 .3. 1989 தேதி முதல் பெண்களும் குடும்ப சொத்தில் குடும்ப பாரம்பரிய சொத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்ற திருத்தம் வந்தது. இதன்படி தாத்தா சொத்தில் பேரனுக்கு தான் பங்கு என்ற கான்செப்ட் அடித்து நொறுக்கப்பட்டது. குடும்ப சொத்து தாத்தாவின் கையில் இருந்தாலும் அதில் பேத்திக்கும் பங்கு உண்டு என்ற சட்ட திருத்தம் அதிரடியாக கொண்டுவரப்பட்டதால் எல்லோரும் திகைத்துப் போனார்கள் .ஆனால் அதில் ஒரு சிறு திருத்தம் செய்தார்கள் அதன்படி 25 3.1989 அன்றைய தேதியில் திருமணமாகாத பெண்களுக்கு மட்டுமே இந்த உரிமை கொடுக்கப்பட்டது. திருமணமான பெண்கள் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டார்கள். ஆக இதிலும் ஒரு சமத்துவம் வரவில்லை. திருமணமான பெண்களுக்கு ஏன் இதில் சேர்க்கவில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே திருமணம் ஆகி சென்று இன்னொரு குடும்பத்தில் ஐக்கியம் ஆகிவிட்டதால் இந்த பிரச்சனையை இது ஒரு பிரச்சினையாக கிளம்பும். மேலும் ஏற்கனவே நடந்த பாகப்பிரிவினைகள் செல்லாததாக ஆகிவிடும். குடும்பத்தில் மிகப்பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தால் ஒரு தேதி நிர்ணயம் செய்து அன்றைய தேதியில் இருந்து இந்த சட்டம் அமலுக்கு வந்தது. மேலும் தாத்தா சொத்து பேரனுக்கு மட்டுமே என்பது தாத்தாவின் குடும்ப சொத்து அவரது மகனிடம் போய் அதற்குப் பிறகு அவரது மகனிடம் மட்டுமே சென்றது அப்போது மகள்களுக்கு எந்த விதமான உரிமையும் இல்லை .இந்த சட்டத்தின்படி தாத்தா உயிரோடு இருந்தாலும் அவரது கையில் குடும்ப சொத்துக்கள் இருந்தால் அந்த சொத்துகளில் 25. 3 .89 தேதியில் இருந்த திருமணமாகாத பெண்கள் அந்த தேதிக்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகள் பாகப்பிரிவினை கூட கேட்க முடியும். அந்த அளவுக்கு சொத்துரிமை சமமாக்கப்பட்டன .கூட்டு குடும்ப சொத்து என்ற கான்செப்ட்ம் அடிபட்டு போனது. ஆகவே அன்றைய தேதியில் ஒரு பாகப்பிரிவினை நடந்திருந்தால் அவர்கள் கையில் இருக்கும் சொத்துக்கள் அவர்களின் சொந்த சொத்தாக பாவிக்கப்பட வேண்டும் என்று பல தீர்ப்புகள் வந்தன .ஆனால் இதையும் பொறுக்க முடியாத சில நீதிபதிகள் குடும்ப சொத்து என்பது அப்பாவின் கையில் இருந்து வருவது. குடும்ப சொத்து அப்பாவின் கையில் இருந்தால் அது மகன்களுக்கு மட்டுமே குடும்பத்தை சேரும் என்று சில தீர்ப்புகள் வந்தன. ஒரே நேரத்தில் மகன்கள் கையில் உள்ள சொத்து குடும்ப சொத்து என்றும்,மகள்கள் கையில் உள்ள சொத்துக்கள் தனிப்பட்ட சொத்துக்கள் என்றும் ஆயின . இந்த தீர்ப்புகள் ஒதுக்கப்பட்டு யார் கையில் இருந்தாலும் அவரது சொந்த சொத்து ,அவரது தனிப்பட்ட சொத்துக்களே என்று 2020 சுப்ரீம் கோர்ட்டில் முடிவானது .ஆகவே 1989 இல் போட்ட ஆக்ட் ஒன் ஆப் 1/ 90 சட்டம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது .பல பெண்கள் வெளியே வந்தனர் தனக்கு பாகம் உள்ளதா என்று வக்கீல்களை கன்சல்ட் பண்ண ஆரம்பித்தார்கள். மகள்களின் தந்தைகள் மகள்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும் மகன்கள் சகோதரிகளை மிரட்டி அவர்களிடம் இருந்து ஒரு விடுதலை பத்திரம் பெற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் இதன் பிறகு நடக்க இருக்கும் அவர்களது திருமண செலவுக்கு மகள்களின் பாகம் கணக்கிடப்பட்டு அந்த மதிப்பின் படி செலவு செய்ய ஆரம்பித்தார்கள் .இன்னும் சில பேர் திருமணம் முடிந்த கையோடு ரசீதுகளும் பெற்றுக் கொண்டார்கள். இது ஒரு புறம் இருக்க 50% பெண்கள் தனது உரிமைகளை நிலைநாட்ட ஆரம்பித்தார்கள். அதனால் தான் இன்றைய கூட்டுக் குடும்பம் சிதைந்தது .இப்போது எல்லாம் பெரும்பாலும் சகோதரிகளின் வீடுகளில் நடக்கும் வைபவங்களுக்கு கிட்டத்தட்ட 50% பெயர்கள் ஆஜராவதில்லை. முன்பெல்லாம் மாமன் வீட்டு சொத்து பிரமாதமாக பேசப்பட்ட நிலையில் தற்போது மூன்றாம் நபரை போல வந்து சென்று வந்து செல்ல ஆரம்பித்து விட்டார்கள் .அண்ணன் தங்கை உறவு எல்லாம் பாசமலர் காலத்தோடு போய்விட்டது என்பது போல ஆகிவிட்டது .ஆனாலும் இதன் மூலம் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்க ஆரம்பித்து விட்டார்கள் ஏனென்றால் ஊரில் நாலு ஏக்கர் நிலம் இருந்தால் அதில் அந்த பெண்ணுக்கு சகோதரனோடு சேர்த்து அவளுக்கும் இரண்டு ஏக்கர் பங்கு உண்டு. அதனை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் மூலம் அவர்கள் வருமானம் அடைய வழி கிடைத்தது. கிராமத்திலேயே இருந்த சிலர் தனது வசதிக்கு ஏற்ப நேரடி கண்காணிப்பிலும் வைத்திருந்தார்கள் .முடியாமல் வெளியேறியவர்கள் அந்த நிலத்தை விற்று விடவும் செய்தார்கள். ஆகவே பொருளாதாரம் நிலை பெண்களுக்கு மேம்பட்டது. பொருளாதார நிலை மேம்பட மேம்பட தனது பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தார்கள். கல்வி அறிவு வளர்ந்தது .முன்பு போல சகோதரிகள் தனது பெண்ணுக்கோ பையனுக்கோ சம்மதம் பேசும்போது அண்ணன் வீட்டில் தம்பி வீட்டில் கால் கடக்க வந்து கிடப்பார்கள். ஏனென்றால் தனது வாரிசு ஒருவரை தனது அண்ணன் வீட்டில் தான் பிறந்த வீட்டில் கொடுத்து விட வேண்டும் என்று .ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது இப்போது அண்ணனோ தம்பியோ அவர்கள் தனது பெண்ணுக்கு பிள்ளைக்கோ தனது சகோதரரிடம் போய் கேட்கும்காலம் வந்துவிட்டது. சகோதரியின் மகள் நன்றாக படித்து படித்திருந்தால் அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு சொல்வதும் ஆகிவிட்டது. ஆகவே குடும்பத்துக்குள்ளே நடந்து திருமணங்கள் இப்போது வெளியில் நடக்க ஆரம்பித்தது விட்டது. ஆகவே மாமன் மகன் அத்தை மகன் என்ற கான்செப்ட் எல்லாம் ஒரு வழியாக ஒழிந்தது. இப்போது அவர் அவர்கள் இஷ்டப்படி திருமணம் செய்து கொள்வதற்கு முக்கிய காரணமே இந்த பொருளாதார மேம்பாடுதான். பொருளாதார மேம்பாடும்,கூடவே கல்வி அறிவும்தான் காரணம். நிலைமை இப்படி இருக்க பெண்களும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் குடும்பத்தில் கூட பிறந்தவர்களுக்கு பிடிக்கவில்லை .ஆகவே உறவுகளும் கெட்டுப் போயின. இப்போது எல்லோரும் தனித்தனி வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டார்கள் இந்த சட்டம் புரட்சிகரமான என்று எல்லோரும் வரவேற்கப்பட்டது. ஆனால் நமக்கு முன்பே 89 ல் கர்நாடகா மாநில அரசும் ஆந்திர அரசும் இந்த சட்டத்தை கொண்டு வந்து விட்டது .ஆகவே தென்னாடு எப்போதும் போல் தனித்துவமிக்க பகுதியாக மாறியது .இந்த கான்செப்ட் வடநாட்டில் கிடையாது. நேற்று வரை கிடையாது. அவர்களுக்கு எந்தவிதமான கல்வி அறிவு ம் இல்லாததால் அவர்கள் இந்த சொத்துரிமை பற்றி கவலைப்படவில்லை .இன்னும் 1950 க்கு முன் எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இருந்தார்கள். தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் சொத்துரிமையோடு கல்வி அறிவும் ஓங்கியதால் தென்னாடு அதுவும் தமிழ்நாடு மேலோங்க ஆரம்பித்தது. சில பல இடையூறுகள் உறவு கெட்டுப் போதல் என்று இருந்தாலும் இன்று ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது தொடரும்
வளர்ச்சியின் ஓர் அடையாலம் இது.
ReplyDelete