இந்திய பெண்கள் சொத்துரிமை_16

2005 ஆக்டிங் படி பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சொத்துரிமை முழுமையானதா என்று பார்ப்போம். Sec.6 ந்படி பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை அவர்களது முழு உரிமையானது என்றுsec. 6(2)ல் சொல்லப்பட்டுவிட்டது. அதில் எந்த சிக்கலும் இல்லை .அடுத்து செக்சன் 6(3)ன்படி ஒரு இந்துவானவர் 09.09. 2005 க்கு பிறகு இறந்து விட்டால் அவர் கையில் உள்ள இந்து குடும்பத்து சொத்துக்கள் அனைத்தும் குடும்பத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமாக பிரிக்கப்பட வேண்டும். ஒருவேளை மகள்கள் இறந்துவிட்டாலும், அவர்களுடைய வாரிசுகளுக்கு இந்த சொத்து போய் சேரும் . ஆகவே இந்த பிரிவிலும் எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லை. அடுத்து செக்சன் 6 (4) ன் படி ஒரு குடும்பத்து சொத்தில் அதில் உள்ள கடன்களுக்கும் மகன் மட்டுமல்லாமல் மகள்களும் அந்த கடனில் பங்கேற்க வேண்டும். இதுவும் நியாயமானது தான். எப்போது ஒருவர் சொத்தை அடைகிறாரோ அதே நேரத்தில் அது உள்ள கடன்களுக்கும் பொறுப்பாவார். ஆக ஒரு வழியாக பெண்களுக்கு 09.09. 2005 முதல் மகனுக்கு இணையாக மகளுக்கும் சொத்துக்கள் கொடுக்கப்பட்டுவிட்டது . தாத்தா சொத்து பேரனுக்கு தான் என்று காலங்காலமாக வந்த சனாதனம் ஒழிக்கப்பட்டு பேத்திகளுக்கும் தாத்தா சொத்தில் உரிமை கொடுக்கப்பட்டது. இது ஒரு வரவேற்கத்தக்க அம்சம். சரி இந்த சட்டம் பெண்களுக்கு முழுமையான தீர்வு கொடுத்து விட்டதா என்று பார்ப்போம் செக்ஷன் 6 (1 ) படி பெண்களுக்கு சொத்துரிமை 09.09.2005 முதல் கொடுக்கப்பட்டு விட்டது .சட்டத்தில் 6(1) பிரிவில் ஒரு proviso சேர்க்கப்பட்டது அதன்படி 20 12 2004 க்கு பிறகு குடும்பத்தில் ஒரு தகப்பனும் மகன்களும் மட்டுமே நாங்கள் ஏற்கெனவே பாகப்பிரிவினை செய்து கொண்டோம்  09.09.200 வந்த சட்டம் எங்களை கட்டுப்படுத்தாது என்று சொல்லிவிட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. 20.12.2004க்கு பிறகு இந்த தேதிக்கு பிறகு  பெண்களை விட்டு விட்டு செய்து கொள்ளும் பாகப்பிரிவினைகள் எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது சட்டம் . அதே நேரத்தில் பாகப்பிரிவினை முறைப்படி ஏற்படுத்தப்பட்டு அது முறைப்படி பதிவு செய்யப்பட்டு இருந்தால் அந்த பதிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த பதிவுகள் சட்டத்தை ஏமாற்றாமல் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் .பதிவின்படி ஒரு தந்தையும் மகன்களும் சொத்துக்களை பிரித்துக் கொண்டதற்கு அடையாளமாக பாக பிரிவினை பத்திரத்தை காட்டினால் சொத்துக்கள் அவரவர்கள் பெயரில் தனித்தனியாக மாறி இருக்க வேண்டும் .அதற்கான வரிகளை அவர்கள் செலுத்தி இருக்க வேண்டும் .அப்படி இல்லாத பட்சத்தில் இந்த சட்டத்தின் உள்நோக்கத்தை தகர்க்கும் வகையில் ஒரு பாகப்பிரிவினை போலியாக நடந்திருந்தால் அதை கோர்ட் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதுவே இந்த சட்டத்தின் சாராம்சம். 2020 தீர்ப்பில், இந்த வழக்கில் தீர்ப்புகள் வரும் போது இந்த பிரச்சனையும் ஆராயப்பட்டது. அப்போது இந்த  பாகப்பிரிவினை என்பதை பற்றி சட்ட வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்தார்கள். அப்போது அவர்களுடைய கருத்துப்படி ஒரே முகமாக எல்லோருமே சொன்ன கட்சி இப்படிப்பட்ட பாகப்பிரிவினை நடந்து இருந்தால் அதை கோர்ட் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டம் காலங்காலமாக வந்த விதிகளின் படி தான் இருக்க வேண்டும் ஒழிய அதனை புறந்தள்ள கூடாது என்று எல்லோருமே வாதிட்டார்கள். இதற்க்கு ஆதாரமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு புகழ்பெற்ற வழக்கு 1976 (3 )scc பக்கம் 119 சுட்டிக் காட்டப்பட்டது. .இந்த புகழ்பெற்ற வழக்கானது பாகப்பிரிவினை  வழக்கில் இன்று வரை ஒரு முக்கியமான தீர்ப்பாக கருதப்படுகிறது. அதன்படி பாகப்பிரிவினை என்பது ஒரு குடும்பத்தில் நடந்தால் அதை முறைப்படி பதிவு  செய்து கொள்ள வேண்டும் ரெஜிஸ்ட்ரேஷன் சட்டப்படி.அப்படி இல்லாவிட்டால் அந்த பாக பத்திரம் செல்லாது. பாக ஓலை , பாகசீட்டு , பாககுறிப்பு இவை எல்லாம் எதுவும் செல்லாது .பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை பத்திரங்கள் எதுவும் செல்லாது. பத்திர பதிவுத்துறை ஆக்டின்படி. ஆனால் இந்த கேசில் முக்கியமாக வாதிடப்பட்டது என்னவென்றால பார்ட்டிஷன் என்பது அது வாய்மொழியாகவும் இருக்கலாம் அல்லது ஞாபகார்த்த குறிப்புஆணையாகவும் இருக்கலாம். கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்புகள் 1976க்கு முன் பல பல தீர்ப்புகள் இதே பாணியில் வந்தது .அப்போது இந்த தீர்ப்புகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 1976 (3) scc இல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது. காலே என்பவர் கொடுத்தவழக்கில் வரையறுக்கப்பட்டது .அதன்படி ஒரு பாகப்பிரிவினை ஒரு குடும்பத்தில் வாய்மொழியாக கூட பிரித்துக் கொள்ளலாம் என்பது அதன் முடிவு. அப்படி வாய்மொழியாக பிரித்துக் கொள்ளும் பட்சத்தில் அந்த வாய்மொழி பாகப்பத்திரம் ஒரு மெமோரண்டமாக தயாரிக்கப்பட்டு என்றைய தேதியில் உரிமை கொண்டாடுகிறார்களோ அன்றைய தேதியில் அவர்கள் அனுபவத்தில் இருக்க வேண்டும். அதற்கான வரி வாய்தாக்களை அவர்கள் பெயரில் மாற்றியிருக்க வேண்டும். முக்கியமான பட்டா போன்ற சமாச்சாரங்களும் அவரவர்கள் பெயரில் தனித்தனியாக இருந்திருக்க வேண்டும் .அதனை அவர்கள் வேறு யாருக்கும் கொடுக்காமல் தனது சொந்த சொத்தாக பாவித்து இருக்க வேண்டும் . இதற்கு ஃபேமிலி அரேஞ்ச்மென்ட் என்று ஒரு நாமம் சூட்டப்பட்டது . இந்த தீர்ப்புக்குப்பிறகு, முன்பு வழக்குகள் நடக்கும் பொழுது மற்றவர்களை ஏமாற்ற ஒரு ஃபேமிலி அரேஞ்ச்மெண்ட்டை ஒரு பேப்பரில் தயார் செய்து கொண்டு எங்களுக்குள் பிரிவினை ஆகிவிட்டது ,அதன்படி அனுபவிக்கிறோம் என்று கோர்ட்டுகளில் பெரும்பாலும் இது போன்ற கட்சிகள் எடுக்கப்பட்டது. காலங்காலமாக வந்த சில சனாதனங்களை ஏற்றுக் கொண்டது போல சென்னை போன்ற பெரிய உயர்நீதிமன்றங்களில் எடுத்து வைக்கும் வாதங்கள் வழக்கமாக கீழ் கோர்ட்டிலும் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த அரேஞ்ச்மெண்ட் செல்லாதது என்று அதன் தலைப்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் திறமையாக எடுத்துரைக்க வேண்டும் .அப்படி எடுத்துரைக்கும் பட்சத்தில் அந்த வாய் மொழியை பத்திரத்தை தகர்க்கலாம். ஆனால் வாய்மொழி பாகப்பத்திரம் இந்தந்த முறையில் இருக்க வேண்டும் என்று 1976 இல் இந்த தீர்ப்பு வந்த பிறகு 76க்கு பிறகு எல்லோருமே இந்த ஆயுதத்தை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். .இதை உடைப்பது சுலபம் என்றாலும் இப்படி ஒரு குறுக்கீடு எப்படியோ அல்லது யாருடைய வற்புறுத்தல் காகவோ அல்லது எதையாவது காப்பாற்றுவதற்காகவோ இப்படி ஒரு சில தீர்ப்புகள் ஆணி அடித்தார் போல் நின்றுவிடும். இதே தீர்ப்பு தான் பெண்களுக்கு சம உரிமை கொடுத்த 2020 பைவ் லா வீக்லி அந்த கேசிலும் சுட்டிக்காட்டப்பட்டது. இதை ஆதரித்து பேசிய அத்தனை சட்ட வல்லுனர்களும் இதுதான் வழக்கம், இந்த வழக்கத்தை மாற்றக்கூடாது என்று வாதிட்டார்கள். துரதிஷ்டவசமாக இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதியே அவருடைய தீர்ப்பில்,however,in exceptional cases where plea of oral partition is supported by public documents and.partition is finally evinced in the same manner ad if it had been affected by a decree of court,it may be accepted. அதே நேரத்தில் கடைசியாக,.a plea of oral partition based on oral evidence alone cannot be accepted and to be rejected outrightly.என்றும் சொன்னார்கள். இன்று தீர்ப்பு வந்தபோதும் வாய்மொழி பாகம் பாப்பிரிவினை தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்  என்ற கருத்து எனக்கு சரியாக படவில்லை .இந்த தீர்ப்பின் சந்து பொந்துகளில் இப்படி ஒரு இடைவெளி இருந்தால் அதில் திறமையான வக்கீல்கள் புகுந்து ஆலுக்கு ஆள் ஒரு வாய்மொழி பார்ட்டிஷன் ஆகிவிட்டது என்று சொல்லி அரசாங்க பத்திரங்களில் திருத்தமுனைவார்கள் .முதலில் இது கீழ் கோர்ட்டுகளில் அல்லது ரெவென்யு சம்பந்தப்பட்ட ரெக்கார்டுகளில் திறமையாக ஏற்றப்படும் . இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்து மாற்றலாம் என்று அவர்களும் அடிபணிந்து விடுவார்கள். ஆகவே இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அல்லது பெண்கள் முழுமையாக அடைய கூடாது என்ற நோக்கத்தில் தான் இப்படி ஒரு ரைடர் கிளாஸ் வந்திருக்கவேண்டும்.அந்த வழக்கில் ஆஜரான பெரிய வழக்கறிஞர்களும் இதே கருத்தை சொல்லி இருப்பது வேதனைக்குரியது . ஆகவே இது போன்ற தடைகளை எல்லாம் தாண்டி பெண் வழக்கறிஞர்கள் கடுமையாக போராடி இது போன்ற ஒரு வாய்மொழி பாகப்பிரிவினை இருந்தால் அதை திறமையாக வாதாடி உடைத்து வெற்றி பெற வேண்டும் .ஆகவே என்னை பொருத்தவரை 2005 சட்டம் 90% தான் பெண்களுக்கு வெற்றி என்றே சொல்வேன். தொடரும்

Comments

  1. படிச்சுட்டு சொல்லுங்க

    ReplyDelete
  2. வக்கீலய்யா, ஒரு சின்ன சட்டப் பஞ்சாயத்து. ஒரு கற்பனைக் கதைன்னு வச்சுக்குவோமே ...
    எனக்கு ஒரு அக்கா. இருபது இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முந்தி – அப்போ பெண்களுக்கான் சொத்துரிமை பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது – ஏறத்தாழ என் அப்பாவின் சொத்துல பாதியளவிற்கு அக்காவுக்கு தங்கம், சீர், செனத்தின்னு செலவு செஞ்சு நல்லா திருமணம் செஞ்சாச்சு. இப்போ அக்கா பிள்ளைகள் அக்காவுக்கு எங்க அப்பா சொத்துல பாதி வேணும்னு கேசு போட்டா .... என்ன ஆகும்?

    ReplyDelete
  3. After 09.09.2005 all the daughters can claim as they are entitled equal share in the same manner as the son if the property is not partitioned earlier. If the daughter dies her son can claim the share.

    ReplyDelete
  4. in the separate property of father. Grandson cannot claim any right of coparcenar

    ReplyDelete
  5. சீர் செனத்தி செய்வது பெற்றவர்களின் கடமை.அதனால் சொத்துரிமை பாதிக்காது.

    ReplyDelete
  6. ம். கேள்விகளை அள்ளி வீசுங்கள்

    ReplyDelete
  7. அவ்வளவுதாமனா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64