வெளிச்சம் பரவட்டும் 37
இன்று சண்டே ஃப்ரீயா இருக்கலாம் எந்த விதமான வேலையும்கிடையாது .இன்னைக்கு வேலைகளும் பார்க்க வேண்டாமென்று நினைத்தேன். உள்ளே இருந்து ஒரு குரல் அப்பா போய் விரால் மீன் வாங்கிட்டு வாங்க. என் பெண் ஊரிலிருந்து வந்திருக்கு .என்னம்மா என்னைப் போய் மீன் மார்க்கெட்டுக்கு போக சொல்ற இத்தனை வருஷம் கழிச்சு, என்று சொல்கிறேன். இல்லப்பா நீங்க போனா தான் நல்ல விரால் வாங்கிட்டு வருவீங்க போய் வாங்கிட்டு வாங்க. மீன் மார்க்கெட் எல்லாம் போயி ரொம்ப வருஷமாச்சு இப்ப போய் எப்படி அங்க போய் விலையெல்லாம் கேட்கிறது. என்னங்கறது எல்லாம் நமக்கு அவ்வளவா புரியாது .சரி பொண்ணு கேட்டுச்சே, நம்ம போகாம இருந்தா அது வேற தகராறு ஆயிடும் .
எனது நண்பர் ஒருத்தருக்கு போன் பண்ணி வர சொல்லி அவரோட போனேன். மீன் மார்க்கெட் நல்லா இருக்கு நல்லா வச்சிருக்காங்க. ஆனா ஜனங்க கூட்டமான கூட்டம் ஆனால் இந்த தடவை போகும்போது நான் எப்போதுமே எங்கேயும் வெளியில் போனா வெள்ளை வேஷ்டி சட்டையோட தான் போவேன் எனது நண்பர் சொன்னாரு, அண்ணே இந்த வெள்ளை வெட்டி எல்லாம் மீன் மார்க்கெட் உதவாது. வீணாக்கி விடுவாங்க அங்க. அதனால வேட்டியை மாத்திக்குங்க அப்படின்னு சொன்ன பிறகு , யோசிதேன்.ஏன்னா அந்த வெள்ளை வேட்டியிலட போறது தான் எனக்கு பிடிக்கும் .அதிகமா வெள்ளை வேட்டிதான். எப்படி சும்மா தும்பை பூ போல வெளுத்து இருப்பாங்க வீட்டுல. அதை அணிவதே எனக்கு மிகவும் மிக்க ஆனந்தமா இருக்கும். ஒரு சின்ன ஒரு அழுக்கு கூட படாம பாத்துப்பேன் . அது போல சலவையும் நல்லா இருக்கும். இப்படிப்பட்ட டிரெஸ்ஸா விட்டுபுட்டு மேலும் எனக்கு இந்த வேட்டிய மடிச்சு கட்ட மாட்டேன், மடிச்சிச்சுக்கட்டவும் தெரியாது .மடிச்சு கட்டவும் மாட்டான் வெளியில போனா அல்லது எங்க இருந்தாலும் வேட்டிய மடிச்சு கட்ட மாட்டேன் . நண்பர் சொன்னாரா சரி என்று உள்ளார போய் பேண்ட்டுக்கு மாறிட்டு வந்தேன் .மீன் மார்க்கெட் குள்ள அந்த பக்கம் அந்த பக்கம் ஓடுவாங்க ,இந்த மீன் விலை கேட்கும் போது மீன் விலை சரியா படலனா தண்ணி எல்லாம் அடித்து விட்டு சட்டையை வேட்டி எல்லாம் வீணா போயிடும். எனக்கு வீணா போறத பத்தி கூட பரவால்ல. அதை திரும்பவும் அந்த வெள்ளை வெட்டி வந்து சலவை பண்றது இருக்குதே மிகப்பெரிய டாஸ்க் .அது ஒயிட்னர் போடணும் இது போடணும் அதுக்கு ஸ்பெஷலா ஏதாவது கலப்பாங்க கலந்து போட்டு அயனுக்கு குடுத்துட்டு வந்த பிறகு பார்த்தால் என்ன அருமையா இருக்கு அப்படின்னு நினைக்கணும். இவ்வளவும் நாசம் ஆயிடும் . மீன் தண்ணி அடிச்சு விட்டுட்டாலும் அந்த நாத்தம் வேற சரி .அப்படின்னு நண்பரோட போனோம். போன உடனே அந்த விரால் மீன் செக்ஷனை பார்த்தோம். அதில் ஒருகடையில் மனது பிடிச்ச மாதிரி ரெண்டு மீனா வாங்கிட்டு அங்கே சுத்தம் பண்ணி கொடுப்பாங்க எடுத்துட்டு போனோம்.எக்க சக்கமான கூட்டம் .சண்டே என்பதால் கூட்டம். இவ்வளவுக்கும் மாத கடைசி ங்கிறாங்க அதுங்குறாங்க இது என்றாங்க ஆனா மீன் மார்க்கெட்ல அவ்வளவு கூட்டம் .ஏகப்பட்ட மீன்கள் வந்து இருக்குது .சார் கொஞ்சம் இருங்க சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க . எனது நண்பர் சொன்னாரு அங்க மீன் மார்க்கெட் உள்ளாரயே புதுசா உட்கார்ந்துகொள்ள பெஞ்ச் மாதிரி அமைப்பு எல்லாம் வச்சிருக்காங்க. நீங்க அங்க போய் உட்கார்ந்து கொள்ளுங்கள் நான் வாங்கிட்டு வரேன் அப்படின்னு அவர் சொன்னாரு .இப்படித்தான் பண்றாருன்னு பாப்போம் அப்படின்னு வேடிக்கை பார்த்துவிட்டு நின்னுட்டு இருந்தா என்னால் ரொம்ப நேரம் நிக்க முடியல ,சரி என்று வந்து உட்கார்ந்துட்டேன். அந்த பெஞ்சில் நான் உட்கார்ந்து இடத்துக்கு நேரா தான் நான் மீன் வாங்குனேன் பாருங்க அந்த மீன் கடை
என்று இருக்குது லாரி வந்து நிக்குது அதுக்குன்னு ஒரு சின்ன லாபியா இருக்குது. டெம்போ அதுல இருந்து கூடைஇல்ல ,இப்பதான் கூட இல்லையே பிளாஸ்க்.டப்பா தானே. ஒரு காதில் செல்போனை வச்சிக்கிட்டு , பேசிக்கிட்டே இப்ப 360 க்கு போயிட்டு இருக்கு அண்ணே,அப்படின்னு சொல்லிட்டுஒருத்தன் ஓடுறான்.ச் ஒரு இடத்துல கொண்டுவந்த பிளாஸ்டிக் டப்பா கொடுத்துட்டு திரும்ப வரான். சில மீன்கள் வந்து உடனே விற்பனை ஆயிடுது .பதநீர் விக்கிறான் பாட்டில்ல வச்சு ஒரு சின்ன புள்ள இடுப்பில் ஒரு பொம்பள விலை கேக்குது .அந்த அம்மா 20 ரூபாயா அப்படின்னு திரும்பும்போது அடிக்கடி வாங்கி கொடுத்து பழக்கப்படுத்தி இருப்பாங்க போல இருக்கு .அந்த பாப்பா அழுவுது.என்னடா இன்னும் மீனு கட் பண்ணி வரலையே டைம் ஆகுதுன்னு கிட்டத்தட்ட ஒரு கால் மணி நேரத்துக்கு மேல போயிடுச்சு மீண்டும் போய் அந்த பெஞ்சில போய் உக்காந்தேன் .அப்போ அவங்களுக்குள்ள அந்த ரெண்டு மீன் காரங்களுக்கு ம்,பக்கத்துலமீன் காரருக்கும் எனக்கு மீன் வித்தவருக்கும் சண்டை.மீன் கடை பேச்சுன்னு சொல்லுவாங்களே அப்பப்பா அவ்வளவு கெட்ட வார்த்தை பேசுகிறான்
கிட்டத்தட்ட மோதல் நிலைக்கு வந்துருச்சு .பாருங்க அவன் என் ஆள் அடுத்தகடைக்காரனை தள்ளிவிட்டான் . அவன் கீழே விழுந்துவிட்டான். என்னடா அங்க தகராறென்ன்று மற்ற மீன்கடைக்காரர்கள் வந்து சமாதானம் செய்துவிட்டார்கள்.இது எங்கடா நம்ம மேல வந்து விடுவாங்களோ என்று இன்று பயந்துகிட்டு வெளியில வந்து நின்னுட்டு இருந்தேன் .நண்பரும் வந்துட்டாரு.மதியம் நல்ல மீன்குழம்பு. சரி சாயந்திரம் கொஞ்சம் வெளியில் வேலை இருந்ததால பைக் எடுத்துக்கிட்டு கடைதெரு பக்கம் போனேன்.எங்க ஊரில் பார்கள் கொஞ்சம் நல்லா அலங்காரப்படுத்தி வச்சிருப்பாங்க. சரி இன்னைக்கு இல்லாத களைப்ப போக்குவதற்காக சரி ஒரு பீர் சாப்பிடுவோம் அப்படின்னு ஒரு கடைக்குள் சென்றேன். கொஞ்சம் டீம்
விளக்குல ஒரு இடம் பார்த்து அவன் தான் சொல்லிட்டு வந்து கேட்டா என்ன வேணும்னு ஒரு பீர் கொண்டு வாப்பா சில் பீடா அப்படின்னு சொல்லிட்டு அந்த மங்கள் ஆன வெளிச்சம் .கொஞ்சம் கொஞ்ச நேரத்தில் நன்றாக தெர்ந்தது எதிரில் எனக்கு மீன் விற்றவரும் யாரை ஹ்அடிச்சு தள்ளினாரோ அவனும் பக்கத்துல உக்காந்து இருக்கான் .ஒரே சிரிப்பும் கும்மாளமா இருக்காங்க .அவங்க என்ன கவனிக்கல. என்னடா காலையில தான் அடிச்சிக்கிட்டாங்க, இப்ப வந்து இங்க வந்து பார்ல உட்கார்ந்திருக்கானுங்களே மறுபடியும் சண்டை தொடரருதாஎன்று கவனிச்சேன்.அவர்கள் என்னையும் கவனிக்கல என்னைய அவங்களுக்கு தெரியல.செமையா அடிச்சிருப்பாங்க மாதிரி இருக்கு. நல்லா ஒரே ஒரு சத்தமா உற்சாகமா பேசிட்டு இருக்காங்க ரெண்டு பேரும். அடிச்சவன் சொல்றான்,உன்னை தெரியாமல் தள்ளிவிட்டேன்மன்னிச்சிக்கடா ங்கிறான். அவனோ மாப்பிள்ளை இதெல்லாம் ஒரு பேச்சா .y தெரியாதா மாப்ள இன்னைக்கு வந்து என் செலவு எல்லாம் உனக்குஎன்ன வேணுமோ சாப்பறாங்கிறான். இன்னைக்கு நல்லா வியாபாரம் டா மாப்ள. எனக்கு ஆச்சரியமா போச்சு இவ்வளவு சினேகமா இருக்காங்களே .அப்படின்னு கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுவிட்டு பேச்சையும் கேட்டேன்.ஒரு அரை மணி நேரத்து எல்லாம் சாப்பிட்டாங்கன்னு என்று நினைத்துக்கொண்டு அவர்களை சற்று நேரம் வேடிக்கை பார்த்தேன். அவர்களுக்கு எந்த விதமான பேதமும் இல்லை சும்மா உன் பேர்ல கைய வச்சான்டா கீழே விழுந்துட்ட மன்னிச்சுக்கோடா மன்னிச்சுக்கோ என்கிறான் . நான் ஒரு பீர் வாங்கி வச்சிக்கிட்டு சாப்பிட்டுகிட்டே இருந்தேன் அவங்க என்ன ஒன்னும் தெரியல . அப்போது சண்டை போட்டுக்கிட்டு இருந்தவங்க வியாபாரத்துல இவ்வளவு சீக்கிரம் ஒன்னா போய்ட்டாங்களா. இதெல்லாம் எப்படி நம்ம எல்லாம் எவ்ளோ கோவமா இருக்கோம் சமயத்துல. அப்படின்னு நினைச்சேன் அப்போ எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது எங்க வீட்ல வளர்ந்த வேப்பமரம் பக்கத்து வீட்டில் ஒரு பெரிய கிளை சாய்வாக அவர்கள் பக்கத்தில் வளரும்போது தெரியல. பெரிய கிளேயாகி மரங்கள் இலைகள் எல்லாம் அங்கு நிறைய கொட்ட ஆரம்பிச்சுருச்சு. அவங்களுக்கு தெனம் கூட்டுறதே பெரிய வேலை ஆயிடுச்சு. என்ன சார் இந்த கிளையை வெட்டுங்க சார் எங்களுக்கு தினம் இதே வேலையா போச்சு இதை கவனிக்கவே மாட்டேங்கிறீங்களே அப்படின்னு சொன்னாரு பக்கத்து வீட்டு நண்பர். நான் என்ன சார் மாட்டேன் என்றா சொல்றேன், ஆள் கிடைக்கலையே .சார் நீங்க தான் சொல்லுங்களேன் யாரவது ஒரு ஆளு இருந்தா சொல்லுங்க வெட்டட்டும் நான் காசு கொடுத்து விடுகிறேன் அப்படின்னு நான் சொல்ல போக நான் எதுக்கு சார் உங்க வீட்டு மரத்தை வெட்டுவதற்கு ஆள் பிடிக்கணும். போய் நீங்க போய் புடிச்சிட்டு வாங்க அப்படின்னு அவரு வேற விதமா சொல்ல போக எங்களுக்குள்ள பேச்சு முத்தி போய் நட்பு விரிசல் விழுந்துருச்சு. ஒரு வாரம் ஆச்சு .பேசல அப்பதான் எனக்கு நினைவு வந்தது இந்த மீன்காரங்க எவ்வளவு ஒரு சண்டைய பெருசு பண்ணாம எவ்ளோ சட்டுனு முடிச்சுட்டாங்க. அதுபோல நமக்கு முடிக்க தெரியலையே முடிக்கணும். இந்த நட்பு வளரனும் .அந்த பகைமை போகணும். நாளை காலை முதல் வேலையா, ஒரு மரம் வெட்டுற ஆளை புடிச்சு இந்த மரக்கிள யை வெட்டிடனும் அப்படின்னு நினைச்சுக்கிட்டே வெளியில் வந்தேன். அதே மாதிரி மறுநாள் காலையில முடிச்சேன். முடிச்சிட்டு எல்லாம் சுத்தப்படுத்தி குடுத்துருப்பானு அந்த ஆள் கிட்ட சொல்ல அவரும் சுத்தப்படுத்தி குடுத்துட்டாரு .அப்புறம் நண்பர கூப்பிட்டு சார் மரத்தெல்லாம் வெட்டியாச்சு சார் இனிமே உங்களுக்கு ஒன்னும் தொந்தரவா இருக்காது அப்படின்னு நானே கூப்பிட்டு சொல்ல அதனால் என்ன சார் பரவால்ல அப்படின்னு அவர் சொல்ல எங்களுக்குள்ள மீண்டும் நட்பு துளிர்த்து. இது போய் ஒரு 15 நாள் இருக்கும் மறுபடி நான் மீன் மார்க்கெட் போனேன். இந்தமுறை போகும்போது நெனச்சிட்டு போனேன். அடிபட்ட நம்ம ஆளு கிட்ட தான் மீன் வாங்கணும் அப்படின்னு நம்மாள் ஆயிட்டாரு இப்ப. மீனை வாங்கிவிட்டு அதுபோல வெட்டுவதற்கு கொடுத்துவிட்டு மீண்டும் வந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்து அவரை பார்த்தேன். முன்பு அருவருப்பா இருந்த மீன் மார்க்கெட் இப்போது இல்ல. .ஏன்னா நம்ம மீனவர் அவர் இப்ப நமக்கு நண்பர் ஆயிட்டாரு. ஆனா அவரு இதை கண்டுக்கல. எனக்கு ஒரு சின்ன அறிவுரை ஊட்டிய அந்த மீன்காரர் தான் எனது மீனவ நண்பன்.
வாத்யாரே.பாத்துகுட்டுங்க.முடி வேற ரொம்ப கொட்டிப்போச்சு
ReplyDeleteஐயா, ஒரு சந்தேகம். மீனவர்கள் சமாதானமானதும், நீங்கள் உங்க பக்கத்து விட்டுக்காரரோடு சமாதானம் ஆனதும் BEER EFFECT என்பதாயிருக்குமோன்னு ஒரு பீர் குடிச்சி யோசிக்கப் போறேன்.
ReplyDelete