வெளிச்சம் பரவட்டும். கதிர்.40 முதுமை
எனது முதுமை பருவத்தை 2015 முதல் ஆரம்பிக்கிறேன் .முதுமை. முதுமை வந்து விட்டாலே எல்லாமே போய்விட்டதா . வாழ்க்கையும் போய்விட்டதா .சந்தோஷம் விடை பெற்றுக் கொண்டதா. இனி முதியவர்கள் வாழ்வதற்கு ஒன்றுமே இல்லையா. இந்த உலகத்தில் ஏன் முதுமை வந்து விட்டால் மனிதர்கள் இப்படி தவித்துப் போகிறார்கள்.முதுமை வந்துருச்சு வந்துருச்சு அப்படின்னு. எனக்கு ஏற்பட்ட அனுபவம் சுவாரசியமான அனுபவம் .2015 வரை எனக்கு காலம் எப்படி ஓடி யதுஎன்று தெரியாது. அவ்வளவு இளமையாகவும், மகிழ்ச்சியோடும் தான் சென்றது.ஒரே பெண். திருமணம் செய்து கொடுத்துவிட்டேன்.அழகான பேத்தி.இனிமேல் எனக்கென்ன குறைச்சல். எனக்கு முதுமை ஒரு சவாலாக இருக்காது என்று தோன்றியது. ஏனென்றால் அதற்கு தகுந்தார் போல என் வாழ்க்கையை நான் வடிவமைத்துக் கொண்டிருந்தேன் சீரான குடும்பம். பேராசை கிடையாது. ஆதலால் என்னை முதுமை ஒன்றும் செய்யாது என்ற கருதி இருந்தேன். 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் எனக்கு ஏற்கனவே சுகர் பிபி உண்டு எனக்கென்று ஒரு டாக்டர் இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக எதற்கு நான் ட்ரீட்மென்ட் செய்து கொண்டிருந்தேன் .அவர் போகும் போதெல்லாம் சொல்லுவார் ட்ரெட்மில் ஒருதடவை செக்கப் செய்து கொள்ளுங்கள் என்பார். பார்த்தேன் ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நாள் கடந்தது .ஒருமுறை யாரோ நண்பர்களை பார்ப்பதற்கு தஞ்சை மீனாட்சி ஹாஸ்பிடலுக்கு எனது நண்பர் ரவி உடன் சென்றேன். அப்போது இருதய நோய் செக் அப் செய்து கொள்ள அழைப்பு கொடுத்திருந்தார்கள் .அங்கு சரி பார்ப்போம் என்று நானும் செக் அப் செய்து கொண்டேன். அதில் ஒன்றும் வித்தியாசமாக எதுவும் வரவில்லை. சரி டிரெட்மில் பார்த்து விடுவோம் என்று ஏறி நின்றேன் .அந்த மிஷின் ஓட ஆரம்பித்தது. ஒரு நிமிடம் தான் எப்படித்தான் எனக்கு அந்த மயக்கம் வந்தது என்றே தெரியவில்லை. நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டேன். ட்ரெட்மில் நின்றுவிட்டது என்னை கை தாங்கலாக பிடித்து உட்கார வைத்தார்கள். ஒரு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு என்னுடன் வந்த நண்பர் ரவியை கூப்பிட்டு அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருக்கிறது .செக்கப் செய்வதற்கு நாளை வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். என் பின்னாலே ஆஸ்பத்திரி செவிலியர் ஒருவரும் வந்தார். காலையில் செக்கப்புக்கு வரும்போது எப்படி வரவேண்டும் 10,000 பணத்துடன் வாருங்கள் என்று சொல்லிவிட்டார். ஹாஸ்பிடலில் ஐந்து நிமிடம் அப்படியே உட்கார்ந்து விட்டேன் .இது எனக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்தது நமக்கா நமக்கும் இந்த நிலைமை வந்து விட்டதா. அன்றுதான் உணர்ந்தேன். என்னால் இதை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை சிறிது நேரம் கழித்து வாங்க ரவி போவோம் வீட்டுக்கு என்று சொல்லிவிட்டேன் இது நடந்தது 2015ஆம் வருடம் தான் செக்கப்புக்கு மறுநாள் நான் போனேனா
முதுமை வந்துவிட்டது
ReplyDelete